தென்கரை பிரகாஷ்

தென்கரை பிரகாஷ் எனக்கு ஜெயமோகன் குழுமம் மூலம் அறிமுகமானவர். அவருடைய சில சிறுகதைகளை எனக்கு அனுப்பி இருந்தார். எனக்கு வந்த வாழ்வு! நான் வழக்கம் போல மெதுவாகப் படித்து பதில் எழுதுவதற்குள் சில மாதங்களே ஓடிவிட்டன. அவர் அதற்குள் ஒரு தளம் ஆரம்பித்து அங்கே தன் புனைவுகளை, கவிதைகளைப் பதிக்க ஆரம்பித்துவிட்டார்.

எனக்கு இவர் எழுதுவது பிடித்திருக்கிறது. எழுத்தில் intensity அதிகம். கவிதையைப் பற்றி எல்லாம் பேசும் அளவுக்கு நமக்கு பத்தாது. ஆனால் இது வரை மூன்று கதைகள் படித்திருக்கிறேன்.மூன்றிலும் ஏதாவது நல்ல கூறு இருக்கிறது.

ஞானலோலன் கதை நன்றாக ஆரம்பிக்கிறது. ஸ்ரீமூலநாதரோடும் யானையோடும் பேசுபவன் என்பது கொஞ்சம் அட! என்று பார்க்க வைக்கிறது. ஆனால் பின்பகுதி என் கண்ணில் சரியாக வரவில்லை. முன்பகுதியோடு ஒட்டவே இல்லை. இரண்டு பகுதிகளும் இயங்கும் தளங்களும் வேறு வேறாக இருப்பது போலத் தெரிந்தது.

அன்னை என்ற கொஞ்சம் நீளமான கதையின் பிளாட் சாதாரணமானதுதான். ஆனால் அதில் ஒரு காலகட்டம், தொன்மத்தைப் படிப்பது போன்ற ஒரு உணர்வு ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கிறார்.

அன்னதாதாவில் அந்த கிழவரின் அலைச்சல் நன்றாக வந்திருக்கிறது.

பிரகாஷ் நன்றாக எழுதக் கூடியவர் என்று தெளிவாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

2 thoughts on “தென்கரை பிரகாஷ்

  1. அன்புள்ள ஆர்வி,

    உங்கள் வலைத்தளத்தில் என் எழுத்தை அறிமுகப்படுத்தியதை கௌரவமாகக் கருதுகிறேன். நான் சற்றும் எதிர்பார்க்காதது. மிக்க நன்றி :)) உங்கள் விமர்சனங்களுக்கும் நன்றி.

    – பிரகாஷ்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.