விவேக் ஷன்பாக் எழுதிய “சுதீரின் அம்மா”

ஜெயமோகன் தளத்தில் இந்தக் கதையைப் படித்தேன். அருமையான பாத்திரப் படைப்பு. எந்த ஒரு குடும்பத்திலும் சகோதர சகோதரிகளில் ஒருவர் பொருளாதார நிலையில் கொஞ்சம் மேலே இருப்பதும் இன்னொருவர் கொஞ்சம் கீழே இருப்பதும் சாதாரணமாக காணக் கிடைக்கும் காட்சி. அது குடும்பத்துக்குள் விளைவிக்கும் டென்ஷன், மனஸ்தாபங்கள், குறைகள், எல்லாவற்றையும் மிக உண்மையாக, அருமையாகச் சித்தரித்திருக்கிறார். அவரது தீம் consumerism-தான், அதைப் பற்றி பேசவே இந்த பின்புலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் எனக்கு அந்த பின்புலம்தான் இந்தக் கதையின் சாதனை என்று தோன்றுகிறது.

கதை? அவ்வளவு முக்கியமில்லை.

விவேக் ஷன்பாக் கன்னட எழுத்தாளர். இதற்கு முன் ஜெயமோகன் தளத்தில் வேறு சில சிறுகதைகள் பதிக்கப்பட்டிருந்தாலும் என்னைக் கவர்ந்தது இதுதான். ஜெயமோகனே மொழிபெயர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கன்னட மூலம் விவேக் ஷன்பேக். ஆங்கில மொழியாக்கம் தீபா கணேஷ். தமிழில் சீனிவாசன்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

விவேக் ஷன்பாகின் இன்னும் சில சிறுகதைகள்
சில்லறை – Consumerism பற்றிய இன்னொரு சிறுகதை
காரணபூதம்
கோழியைக் கேட்டா மசாலா அரைப்பது?
அடுத்தவர் குடும்பம்
வேங்கைச் சவாரி