இந்திரா பார்த்தசாரதியின் “கிருஷ்ணா கிருஷ்ணா”

இ.பா.வின் புத்தகங்களின் எனக்கு ஓரளவு பிடித்த ஒன்று. எனக்கிருக்கும் மகாபாரதப் பித்து காரணமாக இருக்கலாம்.

கிருஷ்ணனின் கதையை ஏறக்குறைய ஒரு காலட்சேப ஸ்டைலில் சொல்கிறார். கிருஷ்ணனே தன்னைக் கொன்ற வேடனிடம், தான் இறப்பதற்கு முன் சில பகுதிகளை நேரடியாக சொல்கிறான். சில பகுதிகளை நாரதர் சொல்கிறார். பாரதம், பாகவதத்தின் பல பகுதிகளை – திரௌபதி சுயம்வரம், வஸ்திராபஹரணம், ஸ்யமந்தகமணி, பாரதப் போர், ஜராசந்தன் வதை, கம்சன், ராதா, பீஷ்மர், கர்ணன், துரியோதனன் மனைவி பானுமதி, ஷைல்பியா – சுவாரசியமாகத் திருப்பிச் சொல்லப்படுகின்றன. மீள்வாசிப்பு என்றோ வேறு கோணம் என்றோ எதுவும் இல்லை, ஸ்டைல்தான் வேறு மாதிரி இருக்கிறது.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை தொண்ணூறு ரூபாய்.

மகாபாரதப் புத்தகம். எனக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. அந்தப் பித்து இல்லாதவர்களுக்கு கூறியது கூறலாகத் தெரியலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:

 • இ.பா. பக்கம்
 • எழுத்தாளர் இரா. முருகனின் விமர்சனம்
 • பத்ரி சேஷாத்ரியின் விமர்சனம்
 • 6 thoughts on “இந்திரா பார்த்தசாரதியின் “கிருஷ்ணா கிருஷ்ணா”

  1. இரா.முருகன் சென்னையில் ஜனவரி 10, 11ல் நடைபெறும் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘ விழாவில், இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா ‘ நாவலை வெளியிட்டுச் சுருக்கமாகப் பேசியது…

   http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401152&format=html&edition_id=20040115

   Like

  2. நீங்கள் கூறியது போல இது ஒரு கதாகாலட்ஷேபம் தான். இதில் பல கதைகள் எனக்கு புதியது ஷைல்பியாவின் கதை. பாஞ்சாலி கிருஷ்ணனை மணக்க விரும்பிய கதை. பாஞ்சாலன் துரோணரை கொல்ல ஒரு மகனும், அர்ஜுனனை மணக்க ஒரு பெண்ணும் கேட்டு யாகம் செய்ததாகத்தான் படித்துள்ளேன்.

   கிருஷ்ணனை ஒரு ராஜதந்திரியாகவும், பாரதத்தை ஒரு அரசியல் நூலாகவும் பார்க்க வைத்தது சோவின் புத்தகம். இது அதை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்துகின்றது. இ.பாவின் நடை அங்கங்கு புன்னகை வரவைக்கின்றது.”ஹோல் சேலாக திருமணம் செய்வது”.

   மகாபாரதம் என்பது கடல் போன்றது, இன்னும் 1000 பேர், 10000 கோண்ங்களிலும் அதை எழுதலாம்

   Like

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.