சாவியின் புத்தகங்கள்

மாற்றங்கள் வரும், முடிந்த வரை எனக்குப் பிடித்திருக்கும் புத்தகங்களைப் பற்றி எழுத முயற்சி செய்யப் போகிறேன் என்று சொன்ன பிறகும் சாவியின் புத்தகங்கள் பற்றி எழுத ஒரே காரணம்தான், ஜெயமோகன் குறிப்பிட்ட வாஷிங்டனில் திருமணம் பற்றி எழுத வேண்டும் என்று ஆசை. ஆனால் இரண்டு வரிக்கு மேல் எழுதமுடியவில்லை. அதனால் படித்த மிச்ச புத்தகங்களையும் பற்றி சுருக்கமாக எழுதி இருக்கிறேன். இவை எல்லாவற்றையும் நான் தமிழ் virtual பல்கலைக்கழகத்தின் (Tamil Virtual University) மின் நூலகத்தில் படித்தேன்.

 • வாஷிங்டனில் திருமணம் டைம் பாஸ் மட்டுமே. நம்மூரிலேயே இந்தக் காலத்தில் இப்படி எல்லாம் கல்யாணங்கள் நடக்காதபோது இதை இன்று ரசிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். எனக்கு புத்தகத்தை விட புத்தகம் எழுதப்பட்ட milieu-தான் ஆச்சரியப்படுத்துகிறது. பிராமணக் கல்யாணம். இதை மற்றவர்கள் ரசிக்க வாய்ப்பு குறைவு. அப்படி என்றால் இது தொடர்கதையாக வந்த காலத்தில் விகடன் வாசகர்களில் பெரும்பாலோர் பிராமணர்கள்தானா?
  ஜெயமோகன் இதை சிறந்த வணிக நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.

  இதே ஃபார்முலாவை வைத்து தெப்போ-76 என்ற கதையையும் எழுதி இருக்கிறார். வாஷிங்டனில் திருமணம் நடத்தி ஆயிற்று, இப்போது ஜப்பானில் தேர் ஓட்டுவது, தெப்பம் விடுவது என்று ஒரு குழு கிளம்புகிறது. நான் வளர்ந்த மானாம்பதி என்ற ஊரில் தைப்பூசத்துக்கு தேர் விடுவது நினைவு வந்தது. அங்கங்கே கருணாநிதியை புகழ்ந்து இரண்டு வார்த்தை, எம்ஜிஆரைத் தாக்கி ஒரு வார்த்தை வருகிறது. சாவி கருணாநிதியின் நண்பர். 🙂 டைம் பாஸ். 1976-இல் எழுதப்பட்டிருக்கிறது. Obviously.

  தெப்போவையே மீண்டும் 1989-ஆம் ஆண்டுக்கு வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு என்று இன்னொரு நாவலாக அப்டேட் செய்திருக்கிறார். ஏனோ தெரியவில்லை.

  எனக்கு அவரது புனைவுகளை விட அபுனைவுகள்தான் மீதுதான் ஆர்வம் அதிகம். சாவி பல பெரிய மனிதர்களுடன் – காமராஜ், கருணாநிதி, ராஜாஜி, கல்கி, எஸ்.எஸ். வாசன் இத்யாதியினருடன் பழகியவர். ஓரளவு நெருக்கமாக இருந்தவர். அதனால் இங்கே கிடைத்த அபுனைவுகளை விடாமல் படித்தேன்.

  நான் தேடிக் கொண்டிருந்த புத்தகம் நவகாளி யாத்திரை. காந்தி 1946-இல் நவகாளி கலவரத்துக்குப் பிறகு அங்கே பயணம் செய்தபோது சாவி அவரோடு சில இரண்டு நாட்கள் சுற்றி இருக்கிறார். கல்கி இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்ததைப் படித்திருக்கிறேன். அதனால் படிக்க ஆர்வமாக இருந்தேன்.காந்தியைப் பற்றி எழுதியதை விட இவர் போனது வந்தது விவரம் எல்லாம் ஜாஸ்தியாக எழுதி போரடித்துவிட்டார். தவிர்த்துவிடலாம்.

  மிச்ச அபுனைவுகளும் டைம் பாஸ் என்ற அளவைத் தாண்டவில்லை. பழைய கணக்கு சாவியின் memoirs. படிக்கலாம். சில excerpts இங்கே. என்னுரையில் தான் பழகிய பெரிய மனிதர்களைப் பற்றி – கருணாநிதி, ஈ.வெ.ரா., காமராஜ், ராஜாஜி, கல்கி, எஸ்.எஸ். வாசன் – சாவி எழுதுகிறார். சாவி-85 என்பது ராணிமைந்தன் எழுதிய சாவியின் வாழ்க்கை வரலாறு. பழைய கணக்கு, என்னுரை, மற்றும் சாவி-85-இல் சில விஷயங்கள் ரிபீட் ஆகின்றன.

  சிவகாமியின் செல்வன் 70-71 வாக்கில் காமராஜை எடுத்த பேட்டிகளின் தொகுப்பு. காமராஜின் கோணம் மட்டுமே சொல்லப்படுகிறது. ஆனால் அப்போதே இந்திரா காந்தியை “அடச்சே! நீ இவ்வளவுதானா” என்று காமராஜ் பார்க்க ஆரம்பித்திருக்கிறார், அவரை பிரதமர் ஆக்கியது தவறு என்று நினைத்திருக்கிறார்.

  இவற்றைத் தவிர தாய்லாந்து என்ற மணியன் ஸ்டைல் பயணக் கட்டுரையும் கிடைக்கிறது.

  அவரது மற்ற புனைவுகளில் ஆப்பிள் பசியில் சாமண்ணா நாடக நடிகன். அவனை விரும்பும் பாப்பாள், பூர்வாசிரமத்தில் தாசி மகள். பணம் இருக்கிறது. சாமண்ணா கஷ்டப்படும்போது உதவி செய்கிறாள். ஆனால் சாமண்ணா நல்ல அந்தஸ்தில் இருக்கும் டாக்டர் மகள் சகுந்தலா பெட்டரோ என்று சபலப்படுகிறான். பிறகு சினிமா சான்ஸ் கிடைக்கிறது. சக நடிகை பெட்டரோ என்று சகுந்தலாவை விடுகிறான். ஆனால் விபத்தில் கால் போனதும் நடிப்பு கிடிப்பு எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பாப்பாளிடம் போய் அடைக்கலமாகிறான். டைம் பாஸ்.

  கேரக்டர் பேட்டை ரவுடி, வாய்ச்சவுடால் பேர்வழி, சினிமா எடுக்க வந்து கூஜா ஆனவர் என்று பலரின் சின்னச் சின்ன ஸ்கெட்ச். படிக்கலாம், ஆனால் வ.ரா. எழுதிய நடைச்சித்திரம் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

  வேதவித்து அம்மா வந்தாளை நினைவுபடுத்தும் புத்தகம். இந்த மின் நூலகத்தில் கிடைக்கவில்லை.

  விசிறி வாழை: 46 வயது கல்லூரி ப்ரின்சிபலுக்கும் 52 வயது தொழிலதிபருக்கும் காதல். முன்னாள் விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் இந்த ஒன் லைனர் ஐடியாவை இவரிடம் கொடுத்து கதை எழுதச் சொன்னாராம். அந்த ஒன் லைனரைத் தாண்டிப் போவதே இல்லை. யப்பா சாமி ஆளை விடுங்கப்பா!

  ஊரார் சுகமில்லை. பக்கங்களை நிரப்புவதற்காக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற வாக்கியத்தை வைத்துக் கொண்டு எழுதினாரோ என்னவோ. ஊரில் ஒரு சாமியார், அவருக்கு ஊரில் நடக்கும் எல்லா விஷயமும் – முக்கியமாக காதல், கள்ளக்காதல் விஷயங்கள் – தெரியும். அவருக்கு ஒரே ஒரு ஆசை, பிள்ளையாருக்கு கோவில் கட்ட வேண்டும். ஒரு திருட்டுக் கும்பல் ஊரில் திருட வந்தபோது அவர்கள் கூட்டத்தில் ஒருவன் இறக்கிறான். அவர்கள் பழிக்குப் பழி புளிக்குப் புளி உங்கள் ஊர்க்காரன் ஒருவனை நாங்கள் கொள்வோம், நீங்களே அனுப்பி வையுங்கள், இல்லாவிட்டால் ஊரையே நாசம் பண்ணிவிடுவோம் என்கிறார்கள். சாமியாரை வற்புறுத்தி அனுப்புகிறார்கள், ஆனால் சாமியார் போவதற்கு முன் கூட்டம் போலீசில் பிடிபட்டுவிடுகிறது.

  வழிப்போக்கன் உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. சுந்தரமும் சகுந்தலாவும் ஒன்றாக வளர்ந்தவர்கள், ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். பிறகென்ன? கல்யாணம் நடக்கவில்லை, சகுந்தலா விதவை ஆகிறாள், சுந்தரத்தின் மனைவி காமுவாகத் தன்னை உருவகித்துக் கொள்கிறாள்.

  கனவுப் பாலம் தண்டமான துப்பறியும் கதை.

  வத்சலையின் வாழ்க்கை, மௌனப் பிள்ளையார் ஆகியவை சிறுகதைத் தொகுப்புகள். திருக்குறள் கதைகள் என்ற தொகுப்பில் இருக்கும் கதைகளுக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று பாதி நேரம் புரியவில்லை. வாரப் பத்திரிகை பக்கங்களை நிரப்ப எழுதப்பட்ட கதைகள். எல்லாம் தண்டம்.

  புத்தகங்களின் சிறந்த அம்சம் என்றால் கோபுலுவின் ஓவியங்கள்தான். மனிதர் என்னமாக வரைந்திருக்கிறார்!

  சாவி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஆசிரியர் இல்லை. பெரும் வெற்றி பெற்ற வாஷிங்டனில் திருமணம் கூட என் கணிப்பில் footnote அளவுக்கும் வராது. பொதுவாக பத்திரிகையின் பக்கங்களை நிரப்ப எழுதி இருக்கிறார். அவருடைய பலம் என்பது பிராமண வாழ்க்கை சித்தரிப்புதான் – அதுவும் 1950-க்கு முற்பட்ட காலத்தை ஓரளவு நன்றாக சித்தரிக்கிறார். இதை வேதவித்து, ஆப்பிள் பசி, வழிப்போக்கன், வாஷிங்டனில் திருமணம் மாதிரி நாவல்களில் காணலாம். துரதிருஷ்டவசமாக, கதைதான் அவருக்கு வரவே இல்லை. சிறந்த இதழியலாளர் என்கிறார்கள், ஆனால் கஷ்டப்பட்டிருக்கிறார். இதழியலில் நல்ல திறமை இருந்தும் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. எழுபது வாக்கில் தினமணி கதிர் ஆசிரியராகப் போனதுதான் முதல் பெரிய ப்ரேக் போலிருக்கிறது. தினமணி கதிர், கல்கி, விகடன், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். சாவி, பூவாளி, விசைகள், மோனா ஆகிய இதழ்களை நடத்தியவர். சக்தி விகடன் ஆசிரியர் ரவிபிரகாஷ் அவரை குருவாகப் போற்றுகிறார், பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, மாலன்? போன்றவர்களுக்கு significant break கொடுத்தார், புஷ்பா தங்கதுரையின் “என் பெயர் கமலா” மூலம் கொஞ்சம் விரசமான பத்திரிகை எழுத்து என்பதைத் தொடங்கி வைத்தார் என்றும் கேள்வி. ஒரு background man என்று நினைக்கிறேன், காமராஜ், கருணாநிதி, கல்கி மாதிரி பலருக்கும் நெருக்கமானவராக இருந்தார். பழைய கணக்கு என்ற memoirs டைம் பாஸ் அளவில் இருந்தது.

  தொடர்புடைய சுட்டிகள்:

 • கூட்டாஞ்சோறு தளத்தில் சாவி பக்கம் – Excerpts from “பழைய கணக்கு”
 • சாவி பற்றிய விக்கி குறிப்பு
 • 4 thoughts on “சாவியின் புத்தகங்கள்

  1. எம்ஜிஆர் சாவி மனவேற்றுமை பற்றி எனது பதிவு: http://dondu.blogspot.com/2006/06/blog-post_25.html

   சாவி அவர்களின் நாணயமற்ற போக்கு பற்றி நான் இட்ட பதிவு:
   http://dondu.blogspot.com/2004/11/blog-post_13.html

   அன்புடன்,
   டோண்டு ராகவ்ன்

   Like

  2. ஜெயகாந்தனை விகடனிலும் பிறகு கதிரிலும் எழுத வைத்ததில் சாவிக்கு பங்கு உண்டு.மற்றபடி படைப்பு விசயத்தில் சுமார்தான்,இந்த மனிதரைவிட மணியன் இன்னும் மோசம்.மணியனுக்கு எழதவும் வராது மேலும் சுய தம்பட்டம் மற்றும் MGR ஜால்ரா.பிழைக்கும் வழி தெரிந்தவர்.

   Like

  3. இவருடைய புத்தகங்களை நேற்று download செய்திருந்தேன்…நல்ல வேளை நீங்கள் எனக்காகக் கஷ்டப்பட்டு இடுக்கண் களைந்து விட்டீர்கள்.:)

   Like

  4. ராஜ் சந்திரா, அடடா உங்களை நோகடிக்க ஒரு சான்ஸ் போய்விட்டதே!
   விஜயன் மற்றும் டோண்டு, விவரங்களுக்கு நன்றி.

   Like

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.