இயல் விருது பெற்றவர்களின் லிஸ்ட்

 1. 2001 – சுந்தர ராமசாமி
 2. 2002 – கே. கணேஷ்
 3. 2003 – வெங்கட் சாமிநாதன்
 4. 2004 – இ. பத்மநாப ஐயர்
 5. 2005 – ஜார்ஜ் எல். ஹார்ட்
 6. 2006 – தாசீசியஸ்
 7. 2007 – லஷ்மி ஹோம்ஸ்ரோம்
 8. 2008 – அம்பை
 9. 2009 – கோவை ஞானி மற்றும் ஐராவதம் மகாதேவன்
 10. 2010 – எஸ். பொன்னுத்துரை
 11. 2011 – எஸ். ராமகிருஷ்ணன்

இயல் விருது ஓரளவுக்கு ஈழ எழுத்தை கண்டுகொள்வது நல்ல விஷயம். சராசரி தமிழ் வாசகனுக்கு ஈழ எழுத்தின் அறிமுகம் குறைவு.

பர்சனலாக எழுத்தாளர்கள் கவுரவிக்கப்படுவதையே நான் விரும்புகிறேன். லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோமும் பத்மநாப ஐயரும் ஜார்ஜ் எல். ஹார்ட்டும் முக்கியமானவர்களே. ஆனால் அவர்களை விட அசோகமித்ரனும் முத்துலிங்கமும் பெருமாள் முருகனும் ஜோ டி க்ரூசும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது என் கருத்து. என்றைக்காவது நான் விருது வழங்கினால் இப்படி ஒரு விதியை வைத்துக் கொள்ளலாம், அது வரை இயல் விருது வழங்குபவர்களுக்கு ஒரு ஜே போடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.