Skip to content

பத்து கிடுக்கிப்பிடி தமிழ் எழுத்தாளர்கள்

by மேல் ஒக்ரோபர் 12, 2011

ஒரு பழைய பதிவு கண்ணில் பட்டது. கிடுக்கிப்பிடி எழுத்தாளர்களாம். ஈர்க்கப்பட்டால் அவரே போதும் என்று தோன்றிவிடுமாம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை, ஆனால் பதின்ம வயதில் என்னைக் கவர்ந்த சில எழுத்தாளர்களின் – குறிப்பாக சுஜாதா – புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்துவிட வேண்டும் என்று ஒரு ஆர்வம் உண்டு – அவற்றில் பல என் இன்றைய ரசனைக்கு தண்டம் என்று தெரிந்தாலும் கூட. உங்கள் அனுபவம் என்ன?

பாஸ்டன் பாலாவின் வார்த்தைகளில்:

இந்தப் பட்டியல் கிடுக்கிப்பிடி எழுத்தாளர்கள் பற்றியது. தங்களை படிப்பவர்களை சிக்கெனப் பற்றிக் கொள்பவர்கள் இவர்கள். என்ன ஆவி அடித்தாலும், புகுந்தவரை வெளியேற்றுவது இயலாது. பிறிதொரு படைப்பாளி நுழைய எத்தனித்தாலும் துரத்தியடிக்கப்படுவர். தன்னுள் இருப்பவரை எதற்காக அனுப்பவேண்டும், பிறிதொருவரை ஏன் வாசிக்க வேண்டும் என்று லாஜிக்கலாக புரிய வைக்க முயன்றால், நீங்களே கீழே குறிப்பிடப்படுபவர்களுள் ஈர்க்கப்பட்டு, சுழலுக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம், ஆகர்ஷணம், மயக்கம் உண்டு.

லிஸ்ட் கீழே, வசதிக்காக.

 1. சுஜாதா
 2. ரமணிசந்திரன்
 3. கல்கி
 4. மு. வரதராஜன் / அகிலன் / நா. பார்த்தசாரதி
 5. சாண்டில்யன்
 6. ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிரபாகர்
 7. பாலகுமாரன்
 8. ஈ.வெ. ராமசாமி (பெரியார்) / சோ ராமசாமி
 9. வைரமுத்து / வாலி
 10. தி. ஜானகிராமன்
Advertisements

From → Lists

11 பின்னூட்டங்கள்
 1. சுஜாதா – அன்று ஒரு மயக்கம் இருந்தது உண்மைதான். பட், இன்று ஆர்வமில்லை. ஒருவேளை கணேஷ்-வசந்த் இருந்தால் சுவாரஸ்யம் + பொழுது போக்கிற்காகப் படிக்கலாம்.

  ரமணி சந்திரன் – மன்னிக்கவும்

  கல்கி – சில ஓகே. பட் சிலது கொஞ்சம் வள வள மாதிரி படுகிறது. அதற்கு கால மாற்றமும் ஒரு காரணம்.

  மு. வரதராசன் – பேராசிரியர் பாடம் நடத்துவது போல் இருந்தாலும் குறை சொல்ல முடியாது.

  அகிலன் – சில ஓகே. பட் சிலது கொஞ்சம் எரிச்சல் தருவது ஏன் என்று புரியவில்லை. என் ரசனைக் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

  நா. பார்த்தசாரதி – ரசிக்கக் கூடிய நடை கொண்டவர். குறிஞ்சி மலரும், பொன் விலங்கும் மறக்க முடியாது. ’சமுதாய வீதி’ என்னை ஏனோ கவரவில்லை.

  சாண்டில்யன் – சுவாரஸ்யம் + கொஞ்சம் அறுவை கலந்த எழுத்து. காரணம், தொடருக்காக கதையை தேவையே இல்லாமல் நீட்டித்துக் கொண்டு போனதுதான்.

  ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிரபாகர் – முன்னவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் சுவாரஸ்யம் – பின்னவரின் நடுத்தர கால எழுத்துக்கள் நல்ல பொழுதுபோக்கு. முன்னவரை விட பின்னவர் ஆழங்காற்பட்டவர்.

  பாலகுமாரன் – ஆன்மீக விஷயங்களைக் கூட வள வளாவென்று சொல்வதை என்ன சொல்வது? கொஞ்சம் சுவாரஸ்யம்; கொஞ்சம் சலிப்பு

  ஈ.வெ. ராமசாமி (பெரியார்) – அய்யோ பாவம்… 😦

  சோ ராமசாமி – தான் நினைப்பதையே மற்றவர்களும் நினைக்க வேண்டும் என்று சொல்லும் எழுத்து. கொக்குக்கு ஒண்ணே மதின்னு சொல்வாங்க. இவரது பல கட்டுரைகள் அதற்கு உதாரணம். பட், நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம், அது அரசியலாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி.

  வைரமுத்து / வாலி – அய்யோ பாவம்… 😦

  தி. ஜானகிராமன் – மறக்க முடியாத, மனதில் தைக்கக் கூடிய எழுத்தாளர். இன்றும் இவரது சில சிறுகதைகளைப் படித்தால் சுழல் போல் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

  ஆக, மேற்கண்ட லிஸ்டில் முழுமையாகத் தேர்பவர் தி.ஜா.ரா மட்டுமே! 😉

  Like

 2. அடுத்த இடம் பெறுபவர்கள் மணிவண்ணன் மற்றும் அகிலாண்டம்தான்

  மு.வ அடுத்த இடம்

  கல்கிக்குப் பிறகு பாலகுமாரன்.

  மற்றவர்க எல்லாம் பின்னாடியோ பின்னாடி நிக்குறாங்க. சில பேர் அவுட் ஆஃப் லிஸ்ட். இதுதான் என் கருத்து.

  இது என் கருத்து மட்டுமே. யாரையும் குறை சொல்ற விமர்சனம் இல்லை. நன்றி!

  Like

 3. Boston Bala permalink

  JeMo? charu? EssRaa?

  Like

 4. தி.ஜா-வோடு ஒத்துப் போகிறேன்…இன்றும் அவரின் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பு என் கைகளுக்கு அருகில் இருக்கிறது. சுஜாதா 10 வருஷம் முன்னாலேயே பரணில்.

  JeMo? charu? EssRaa?
  – அடிக்க வருவதில்லை என்று உத்தரவாதம் கொடுத்தால் ‘சாரு’-வின் மிகைப்படுத்தப்பட்டக் கட்டுரைகள். ஜெமோ-evergreen, ஆனால் சரியான மூட் வேண்டும்.

  Like

 5. ரமணன்/பாலா/ராஜ், என் கண்ணில் இந்த லிஸ்டில் சுஜாதா, ரமணிச்சந்திரன், பாலகுமாரன், தி.ஜா. நால்வரும் கிடிக்கிப்பிடி போடலாம் என்று தோன்றுகிறது. ஜெயமோகன் ரசிகர்கள் ஜெயமோகனே போதும் என்று நினைக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. அவரே அவரைப் படி இவரைப் படி என்று சிபாரிசு செய்து கொண்டே இருக்கிறார்!

  Like

 6. சுஜாதா – ஆரம்பகால நாவல்கள் சுவாரஸ்யம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் பிற்காலத்தில் சோதிக்கத் துவங்கிவிட்டார். பிற்கால படைப்புகளில் சிலது வலிய திணிப்பது போலிருக்கும்.

  கல்கி – நான்கு சுவையான படைப்புகளால், மற்றவை மாற்றுக்குறைந்தாலும் தெரிவதில்லை.

  மு.வரதராசன் – மேம்போக்காக இல்லாமல் உள்வாங்கிப்படித்தால் ஒன்றவைத்து விடுவார். வியாபாரத்தனங்கள் இருக்காது.

  ரமணி சந்திரன் – ???

  கல்கி – அரைத்த மாவையே அரைப்பது போன்ற தோற்றம் தரும் படைப்புகள். சித்திரப்பாவையின் தாக்கம் பல நாவல்களில் தென்படும்.

  சாண்டில்யன் – வளவளா…. ஒரே மாதிரி வர்ணனைகளால் (‘ஜாஜ்வல்யமாக ஜொலித்தது’, ‘மனதில் அளவுக்கதிகமாகவே அச்சம் மண்டிக்கிடந்தது’) படித்த நாவலையே திருப்பிப் படிக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றும். ‘மன்னன் மகள்’ மட்டும் சற்று விதிவிலக்கு.

  ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிரபாகர் – டைம் பாஸ்.. ரயில், பஸ் பயணங்களுக்கு நல்ல் கம்பேனியன்.

  பாலகுமாரன் – சற்று நீட்டினாலும் பெரும்பாலும் யதார்த்தம்.

  ஈ.வெ.ரா. – இவர் எப்படி இந்த லிஸ்ட்டில் வந்தார்..??.

  சோ – படிக்கும்போதே, இவர் சொல்வது சரிதானோ என்று நினைக்குமளவுக்கு வசியம் செய்பவர். தன் கருத்தை வலியுறுத்த தன்னை ஒரு பபூனாக காட்டிக்கொள்பவர்.

  வைரமுத்து, வாலி – கவிதைகளுக்கு நடுவே மற்ற எழுத்துக்கள் இவர்களுக்கு ஊறுகாய். சுருக்கமாக பஞ்சத்துக்கு ஆண்டிகள்.

  தி. ஜானகிராமன் – தஞ்சாவூர் மண் வாசனைக்குள்ளேயே தன் படைப்புகளை முடக்க முயற்சித்தவர். இருந்தாலும் பலருக்கும் பிடித்தவர்.

  சரி, ஜெயகாந்தன் எங்கே..?. வேறு லிஸ்ட்டில் இருக்கிறாரா?.

  Like

 7. ரமணி சந்திரன் பல வருடங்களாக எழுதி வந்தாலும் சில ஆண்டுகள் முன்னால்தான் அவர் என் கவனத்தைக் கவர்ந்தார். குமுதத்தில் “வல்லமை தந்து விடு” என்ற தொடர்கதை. அப்போது தில்லியில் இருந்தேன். தமிழ் பத்திரிகைகள் ஒழுங்காகக் கிடைக்காது. துளி ஏமாந்தாலும் சில இதழ்கள் விட்டு போய் விடும். ஆனால் ரமணி சந்திரனின் இக்கதை வெளிவந்த காலத்தில் நான் ஒரு குமுதம் இதழைக் கூட மிஸ் செய்யவில்லை. அதே போல குங்குமம் பத்திரிகையில் அவர் தொடர்கதை வந்து கொண்டிருந்த சமயத்தில், பத்திரிகை நிர்வாகம் கொடுத்த தாராள பரிசு பொருட்களால் ஒரு இதழ் கிடைக்கவில்லை. எனக்கு ஒரே கோபம். பத்திரிகைக்கே போன் செய்து எனக்கு விட்டுப் போன தொடர் கதையின் பக்கங்களை ஃபேக்ஸ் செய்ய கேட்டுக் கொள்ள அவர்களும் அவ்வாறே செய்தனர்.

  அதைப் பற்றி அறிந்த சக பதிவாளர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறது. எனக்கும் ஒரே ஆச்சரியம். ரமணி சந்திரனின் கதை பிடிக்காதவர்களும் இருக்கிறார்களா என்று. அவர் கதையில் வரும் கதாநாயகிகள் பாஸிடிவாக நினைத்து செயல் புரிபவர்கள். பிரச்சினைகள் வரும், அவற்றை அவர்கள் அழகாகச் சமாளிப்பார்கள். அவர் கதைகளின் டெம்பிளேட் ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த டெம்பிளேட் அது. கதா நாயகர்கள் வெறும் சப்போர்ட் ரோல்தான் செய்வார்கள். கதாநாயகிகள் எல்லோருமே தைரியம் மிக்கவர்கள். இப்போது வரும் சீரியல்கள் நாயகி மற்றும் வில்லிகள் போல இல்லை அவர்கள். அவர்கள் செயல்பாடுகள் உற்சாகம் விளைவிப்பவை. விதியே என்று அழுது கொண்டு உட்காராது ஆக்கம் புரிபவர்கள் அவர்கள்.

  கவித்துவமான தலைப்புகள் கொடுப்பவர் ரமணி சந்திரன் அவர்கள். இப்போது அவள் விகடனில் வரும் தொடர்கதையின் தலைப்பு “வெண்ணிலவு சுடுவதென்ன”. மற்ற கதைகளில் சில பின்வருமாறு:

  “தவம் பண்ணி விடவில்லையடி”, “கனவு மெய்ப்பட வேண்டும்”, “கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு”, “மை விழி மயக்கம்”, “நேசம் மறக்கவில்லை நெஞ்சம்”, “காத்திருக்கிறேன் ராஜகுமாரா”, “எனக்காக நீ”, “பொன்மானைத் தேடி”, “விடியலைத் தேடி”, “கானமழை நீ எனக்கு”, “தரங்கிணி”, “அழகு மயில் ஆடும்”, “நாள் நல்ல நாள்”, “இனி வரும் உதயம்”, “கிழக்கு வெளுத்ததம்மா’, “என் உயிரே கண்ணம்மா” போன்றவை.

  அதெல்லாம் சரி, இப்போது என்ன திடீரென இந்தப் பதிவு என்கிறீர்களா? எதேச்சையாக பத்ரி அவர்களின் பதிவு ஒன்றைப் பார்த்தேன். அதன் சுட்டிகளைச் சொடுக்கியதில் நான் முதலில் கொடுத்த பதிவும் வந்தது. ஆகவே இப்போது இப்பதிவு. அங்கு போய் பின்னூட்டம் கொடுப்பதற்கு பதிலாக இங்கே புது பதிவு போடுவது அதிகம் உகந்தது எனப் படுகிறது. என்ன சரிதானே சுரேஷ் கண்ணன் மற்றும் கிருஷ்ணசைதன்யா அவர்களே?

  பார்க்க: http://dondu.blogspot.com/2006/06/1.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  Like

 8. சாரதா, உங்கள் விவரிப்பு அருமை.
  டோண்டு, ரமணிசந்திரன் பற்றிய விவரங்களுக்கு நன்றி!

  Like

 9. //கல்கி – அரைத்த மாவையே அரைப்பது போன்ற தோற்றம் தரும் படைப்புகள். சித்திரப்பாவையின் தாக்கம் பல நாவல்களில் தென்படும்.//

  இதை ‘கல்கி’ என்பதற்கு பதிலாக ‘அகிலன்’ என்று படிக்கவும்.

  இரண்டுமுறை ‘கல்கி’ என்று குறிப்பிட்டுவிட்டேன். முன்னதுதான் கல்கி. பின்னது அகிலன் பற்றியது.

  Like

  • கோபி, தஞ்சை பிரகாஷ் படிக்க இன்னும் வாய்ப்பு வரவில்லை.

   // இதை ‘கல்கி’ என்பதற்கு பதிலாக ‘அகிலன்’ என்று படிக்கவும். // சாரதா, புரிந்து கொண்டேன்.

   Like

 10. கிடுக்கிப்பிடி என்பதில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும் வேறு சில விஷயங்கள் தோன்றுகின்றன.

  தேவனின் நகைச்சுவை எழுத்துக்களைப் படித்த பிறகு வேறு யாரும் கிச்சுக் கிச்சு மூட்டினாலும் சிரிப்பு வருவதில்லை.

  காமம் சார்ந்து எழுதுவதில் தஞ்சை பிரகாஷின் எழுத்துக்களைப் படித்த பிறகு வேறு யாரைப் படித்தாலும் பிரகாஷ் அளவிற்கு இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

  சோவின் ஆன்மிகம் சம்பந்தமான புத்தகங்கள் (குறிப்பாக மகாபாரதம் பேசுகிறது) இப்போதைக்கும் எனக்கு ready reckoner ஆக இருக்கின்றன.

  அன்றும் இன்றும் (என்றும்?!) திஜாவே மனதுக்குப் பிடித்த எழுத்தாளர்.

  சமீபத்தில் ஜெமோ படைப்புகள் (கண்ணீரைப் பின்தொடர்தல், பின்தொடரும் நிழலின் குரல்) படித்தேன். நிறைய impress செய்கிறார்.

  எஸ்ரா- இதுவரை இவர் படைப்புகளில் நான் பார்த்தவரையில் பிடிபட்ட அபத்தங்களைக் கொண்டு ஒரு தனிப்புத்தகமே போடலாம்:-)

  பட்டியலில் உள்ள மற்ற எழுத்தாளர்கள் பற்றிப் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: