Skip to content

பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

by மேல் ஒக்ரோபர் 17, 2011

போன வருஷம் ஆ. மாதவன். இந்த வருஷம் பூமணி.

நான் பூமணியின் பரம ரசிகன். வெக்கையை இலக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன். பழி வாங்குவதையும் வன்முறையையும் தப்பி ஓடுவதையும் foreground-இல் வைத்து நாவல் முழுதும் அன்பால் நிறைந்திருப்பது பெரிய சாதனை.

பிறகு இன்னொரு சாதனை, ஆனால் அது எனக்கு வெக்கைக்கு அடுத்த இடத்தில்தான் இருக்கிறது. நைவேத்யம் எனக்கு சுமார்தான். வரப்புகளோ வாய்க்காலோ ஏதோ ஒரு பேரில் ஒரு கிராமப் பள்ளியை பின்புலமாக வைத்து எழுதிய கதை எனக்கு பர்சனலாக நெருக்கமானது. என் அப்பாவும் அம்மாவும் கிராமப் பள்ளிகளில் வேலை பார்த்த சூழலை எனக்கு நினைவூட்டியது. அவரது சிறுகதைகளும் – குறிப்பாக நல்ல நாள் சிறுகதைத் தொகுதி – எனக்குப் பிடித்தமானவை. என் அபிமான ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்தை பல இடங்களில் நினைவூட்டின.

சரியானவர்களை தேர்ந்தெடுத்த விஷ்ணுபுரம் குழுவினருக்கு வாழ்த்துக்கள். ஆ. மாதவனையும் பூமணியும் கவுரவிப்பதால் விஷ்ணுபுரம் விருது பெருமை பெறுகிறது.

தொடர்புள்ள சுட்டிகள்:
விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு
வெக்கை
அழியாச்சுடர்கள் தளத்தில் பூமணியின் சில சிறுகதைகள்

Advertisements

From → Awards, Poomani

7 பின்னூட்டங்கள்
  1. vijayan permalink

    பூமணிக்கு வாழ்த்துக்கள்.எனக்கு நைவேத்யம் மிகவும் பிடித்த நாவல்.

    Like

  2. அருணா permalink

    ஆர். வி

    நான் தொலைவு மற்றும் ரீதி ஆகிய கதைகளையும், நைவேதியத்தையும் படித்திருக்கிறேன். சிறுகதைகள் இரண்டுமே எனக்கு புரியவில்லை. உங்களால் இக்கதைகளை விளக்க முடியுமா?

    Like

  3. அருணா, ரீதியை நான் ஒரு ஒரு உண்மையான vignette என்ற அளவில்தான் பார்க்கிறேன். இன்னொரு கதையைப் படித்ததில்லை.
    விஜயன், மறுமொழிக்கு நன்றி!

    Like

  4. டியர் R.V.

    பூமணி எழுதிய “பிறகு” நாவல் உண்மையிலேயே ஒரு சாதனை என்பதில் ஐயமில்லை. (‘வெக்கை’யை நான் இன்னும் படித்ததில்லை. அதனால் இப்போதைக்கு என் எண்ணத்தில் ‘பிறகு’தான் டாப்). எத்தனை யதார்த்தமான கதை. கொஞ்சம் கூட ஜோடனைகளோ தேவையற்ற வர்ணனைகளோ இல்லாத அருமையான படைப்பு. நாமும் அந்த கிராமத்தில் உலவுவது போன்ற ஒரு இயல்பு நடை.

    கதாநாயகியின் தந்தை முத்து முருங்கன் செத்துப்போனதை எவ்வளவு அழகாக நம் கண்முன்னே கொண்டு வருவார்.

    கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒருவராக உலவும் கந்தையாவின் மரணத்தைப்பற்றியும் கூட சொல்லாமல், ஒரு அத்தியாயத்தின் துவக்கத்தில் ‘கந்தையா சிதையில் எரிந்துகொண்டிருந்தார்’ என்று திடீரென்று ஆரம்பிப்பார். நமக்கு தூக்கி வாரிப்போடும்.

    வெற்று ஆர்ப்பாட்டங்கள் இல்லாததால், இலக்கிய வட்டம் தவிர வெளியில் அவ்வளவு சிலாகிக்கப்படாத ஒரு நல்ல எழுத்தாளர் பூமணி. அவருக்கு விருது கிடைத்திருப்பது உண்மையான எழுத்தாற்றலுக்கு கிடைத்த கௌரவம்

    Like

  5. சாரதா, பிறகு நாவலை நீங்களும் ரசித்தது மகிழ்ச்சி! வெக்கையை கட்டாயமாகப் படியுங்கள்.

    Like

  6. \\கதாநாயகியின் தந்தை முத்து முருங்கன் செத்துப்போனதை எவ்வளவு அழகாக நம் கண்முன்னே கொண்டு வருவார்.\\

    முத்துமருங்கன் மாமனார். அழகிரிதான் தந்தை

    Like

Trackbacks & Pingbacks

  1. சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: