தமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத்தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களிடையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
புதுமைப்பித்தன் மாதிரி ஒரு ஜீனியஸ் மறைந்ததற்கே நாலு வரி ஆபிச்சுவரிதான் வந்திருக்கிறது. சந்தேகம் இருந்தால் எண்ணிப் பாருங்கள், சரியாக நாலே நாலு வாக்கியம்தான். எழுத்தாளன் “செத்த பிறகு சிலை வைக்காதீர்” என்று எழுதியவருக்கே ஞாபகச் சின்னமாம்! அவருக்கு ஆவி உலகத்தில் தெரிந்திருந்தால் இந்த irony-ஐ மிகவும் ரசித்திருப்பார்!
தொகுக்கப்பட்ட பக்கம்: புதுமைப்பித்தன் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
புதுமைப்பித்தன் நினைவு நாள்
புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமார் ஆய்வின் கதை
புதுமைப்பித்தனும் சந்திரபாபுவும்
இது மாதிரி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் புதுமைப்பித்தன், “ஓஹோ உலகத்தீர் ஓடாதீர்” என்ற அந்தக் கவிதையை எழுதிக்யிருக்க வேண்டும். நான் அறிந்த வரையில் அந்தக் கால வெகுஜன பத்திரிகைகளுக்கு புதுமைப்பித்தனை ஏனோ பிடிக்கவில்லை. பாரதிக்கு அடுத்து இது போன்ற ஊடக ஆதரவின்மையையும், வெறுப்பையும் சம்பாதித்தவர் பு.பிதான். அதனால்தான் இருவரும் இருவரும் காலம் கடந்து ‘மகாகவி’யாகவும், ’சிறுகதை மன்னர்’ ஆகவும் என்றும் நினைவில் இருக்கிறார்கள். இருப்பார்கள் அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்பப் பட முடியாமலே!
இன்று பலர் கதைகளில் செய்யும் புதுமைகளை அன்றே செய்தவர் என்ற வகையில் புதுமைப்பித்தன் மிகச் சிறந்த முன்னோடி. காலத்தால் அழிக்க முடியாத கதாசிரியன்.
LikeLike
ரமணன், புதுமைப்பித்தனை நான் முன்னோடி என்றல்ல, சாதனையாளர், மேதை என்றே மதிப்பிடுகிறேன். என் மதிப்பீட்டில் அவரை விட சிறந்த தமிழ் எழுத்தாளர் இல்லை – நான் மேதைகள் என்று கருதும் ஜெயமோகன், அசோகமித்திரன் இருவரையும் விட சில இன்சுகள் முன்னால் நிற்கிறார்.
LikeLike
ஆர்வி
சந்தேகமில்லாமல் புதுமைப்பித்தன் சாதனையாளர்தான். அவரது கதைகளில் வரும் குழந்தை பற்றிய வர்ணனை எல்லாம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! இப்போது கூட அவரது பல சிறுகதைகளை எடுத்து வாசிக்கும் போது கிடைக்கும் சுகம் அலாதிதான். ஆனால்.. அவரும் சில (வணிக நிர்பந்துக்களுக்காக அல்லது தீபாவளி மலர் போன்ற அவசரங்களுக்காக) சுமாரான கதைகளை எழுதியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது என்றாலும் தனது தேர்ந்த கதை சொல்லும் உத்தியால், பாத்திரப் படைப்பால், சம்பவ விவரிப்பால், கருத்தாழத்தால் மிக மிக முன்னணியில் இருக்கிறார்.
புதுமைப்பித்தன் கல்கியின் பல கதைகளை ‘காப்பி” என்று ‘ரசமட்டம்’ என்ற புனை பெயரில் தாக்கியிருப்பது போல, புதுமைப்பித்தனின் சில கதைகளும் ’அப்பட்டமான தழுவல்’ என்று க.நா.சு. சொல்லியிருப்பதைப் படித்திருக்கிறேன். ஆனாலும் கநாசுவுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் புபியும் ஒருவர். கநாசு எழுதிய அந்தப் புத்தகத்தின் பெயர் நினைவிலில்லை இலக்கிய விமர்சனமோ அல்லது பார்வையோ சரியாக ஞாபகமில்லை. அதில் எல்லா எழுத்தாளர்களது படைப்பையும் துவைத்துக் காயப் போட்டிருப்பார்.
புதுமைப்பித்தனை ”காலத்தை வென்ற கதை சொல்லி” என்று சொல்லலாம் என நினைக்கிறேன்.
LikeLike
ரமணன், புதுமைப்பித்தன் சில கதைகளை மொழிபெயர்த்ததாகவும், பின்னால் வந்த சில தொகுப்புகளில் அவை மொழிபெயர்ப்புகள் என்று குறிப்பிடப்படாததால் அவருக்கு இப்படி ஒரு அவப்பெயர் வந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து சுப்பையாப் பிள்ளையின் காதல்களுக்கும் வால்ட்டர் மிட்டி கதைக்கும் சில ஒற்றுமைகளை காணலாம். ஆனால் எது முன்னால் வந்தது என்று தெரியவில்லை.
LikeLike