ஃப்ரெடரிக் ஃபார்சித் எழுதிய “டாக்ஸ் ஆஃப் வார்”

ஃபார்சித்தின் த்ரில்லர்கள் – குறிப்பாக Day of the Jackal – பிரபலமானவை. Dogs of War ஜாக்கல் அளவுக்குப் பிரபலம் இல்லைதான். ஆனால் இதைத்தான் நான் ஃபார்சித்தின் மிகச் சிறந்த த்ரில்லராகக் கருதுகிறேன்.

கூலிப்படை வீரர்கள் என்றால் இந்தக் காலத்தில் என்னென்னவோ அர்த்தம் வருகிறது. ஆனால் mercenaries என்று ஆங்கிலத்தில் எழுதினால் கொஞ்சம் கவுரமாகத் தெரிகிறது. 🙂 ஃபார்சித் காட்டுவது இவர்களின் உலகத்தைத்தான். அதுவும் அறுபது எழுபதுகளில் உலகின் பல இடங்களில் – குறிப்பாக ஆஃப்ரிக்காவில் உள்நாட்டு சண்டை நடந்து கொண்டே இருந்தது. ஐரோப்பிய பின்புலம் உள்ள ராணுவ வீரர்களுக்கு லோகல் படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் சிறு படைகளை நடத்திச் செல்லவும் தேவை இருந்தது. சில சமயம் அரசுகள் கவிழ்ந்து வேறு அரசுகள் உருவாகவும் இவர்கள் காரணமாக இருந்தார்கள்.

ஆனால் இவர்களை எங்கே என்று தேடுவது? அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களை எப்படிப் பெற்றிருப்பார்கள்? ஃபார்சித் இவற்றை எல்லாம் painstaking details கொடுத்து விளக்குகிறார். அநேகருக்கு பரிச்சயம் இல்லாத வேறு ஒரு உலகத்தை மிகுந்த நம்பகத்தன்மையோடு காட்டுகிறார். ஜாக்கலிலும் இப்படி நிறைய விவரங்கள் கொடுப்பது நினைவிருக்கலாம்.

கதை ஷானன் என்ற கூலிப்படை கேப்டன் தோல்வி அடைந்த ஒரு ராணுவத்திலிருந்து விலகிச் செல்வதோடு ஆரம்பிக்கிறது. ஷானன் அந்த ராணுவத்தின் ஜெனரல் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறான். ஒரு ஆஃப்ரிக்க நாட்டில் பிளாட்டினம் நிறைய இருப்பது ஒரு பெருமுதலாளிக்குத் – மான்சன் – தெரிய வருகிறது. ஆனால் அங்கே ரஷியர்களின் தாக்கம் அதிகம், நேர்வழியில் போனால் சுரங்கம் அமைக்க அனுமதி கிடைக்காது. மான்சன் அந்த நாட்டில் ஒரு “புரட்சிக்கு” ஏற்பாடு செய்கிறார். இன்றைய அரசு மீது போர் புரிந்து அதைக் கைப்பற்ற ஷானன் தலைமையில் ஒரு கூலிப்படையை ஏற்பாடு செய்கிறார். ஷானன் எப்படி படையை நிறுவுகிறான், எங்கெங்கு ஆயுதம் வாங்குகிறான், எப்படி அவற்றை அந்த நாட்டுக்கு கொண்டு போகிறான் என்பதுதான் கதை. ஐந்தே ஐந்து கூலிப்படையினர் ஒரு நாட்டை கைப்பற்றுகிறார்கள் என்பதை வாசகர்களை நம்ப வைப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாதனை. கடைசியில் ஒரு satisfying ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

சில பாத்திரப் படைப்புகள் – கனிமங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று ஆராயும் மல்ரூனி, இடி அமீன் மாதிரி இருக்கும் ஜனாதிபதி கிம்பா – நம்பகத்தன்மை அதிகம் உள்ளவை.

நாவல் 1974-இல் வெளிவந்தது. கிறிஸ்டோஃபர் வாக்கன் நடித்து 1980-இல் திரைப்படமாகவும் வந்தது.

ஃபார்சித்தின் பிற புத்தகங்களில் எனக்குப் பிடித்தது Devil’s Alternative மற்ற புத்தகங்கள் – புகழ் பெற்ற ஒடெஸ்ஸா ஃபைல் உட்பட – என் கண்ணில் சுமார்தான்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

8 thoughts on “ஃப்ரெடரிக் ஃபார்சித் எழுதிய “டாக்ஸ் ஆஃப் வார்”

 1. The Fourth Protocol-லும் Forsyth-ன் சிறந்த பொழுதுபோக்கு த்ரில்லர்களில் வரும். மிகவும் நம்பகமான வகையில் ஒரு அணு ஆயுதத்தை எப்படி இங்கிலாந்துக்குக் கடத்துகிறார்கள் என்பதை எழுதியிருப்பார். படமாகவும் வந்தது. Day of the Jackal அளவிற்கு படம் இல்லாவிட்டாலும் Pierce Brosnan வில்லனாக நடித்ததற்காகப் பார்த்தேன். Cold war உச்சக் கட்டத்தில் இருந்த காலத்தில் Forsyth-ன் கதைகள் அற்புதமானவை (அதாவது மேற்குலகுக்கு, ரஷ்யாவில் அவர்களைப் பற்றியக் கற்பனைகளைக் காமெடி பீஸ்களாகப் பார்த்திருப்பார்கள்).

  The Negotiator இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலையின் போது பரபரப்பானது (கதையில் பெல்ட் பாம் வைத்து கொலை செய்வார்கள்). The Fist of God-க்குப் பிறகு அவரின் தரம் இறங்க ஆரம்பித்தது (ரஷ்யா சிதறியதும் ஒரு காரணம்).

  அவரின் சிறுகதைத் தொகுப்பு No Comebacks-ல் இரண்டு கதைகளைக் குறிப்பிடலாம். தலைப்பு கதை மற்றும் There are no snakes in Ireland.

  அவரின் சமீபத்திய The Cobra புத்தகம் படிக்க நேர்ந்தது (நானே வலிய சில சமயம் விபத்துக்களில் சிக்கிக் கொள்வேன் :)). Forsyth எனும் நல்ல கதைசொல்லி 1980-களை விட்டு வரமறுக்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்த புத்தகம்.

  Like

 2. எழுத நினைத்ததை ராஜ் அவர்கள் almost சொல்லிவிட்டார்…முற்றிலும் உடன்படுகிறேன்…
  Day of the Jackal , The Odessa File தவிர The Deceiver வும் எனக்கு பிடித்திருந்தது…
  வழக்கம் போல நாவல்களை முழுவதுமாக திரைப்படங்களில் கவர் செய்யவில்லை (முடியாது?)

  தாமஸ் ஹாரிஸ் இன் Silence of Lambs பற்றி எழுதி இருக்கிறீர்களா ஆர்வி?

  Essex Siva

  Like

 3. சிவா, ராஜ் மற்றும் சேட்டைக்காரன்,

  ஃபோர்த் ப்ரோடோகோல், டிசீவர்ஸ் எல்லாமே படிக்கக் கூடிய புத்தகங்கள்தான், விறுவிறுப்பாகப் போகும் த்ரில்லர்கள்தான். ஆனால் என் கருத்தில் பேசப்பட வேண்டிய புத்தகங்கள் இல்லை. என் கருத்தில் தாமஸ் ஹாரிசும் இந்த லெவல்தான். சுபா, இந்திரா சவுந்தரராஜன், தாமரைமணாளன் பற்றி எல்லாம் பதிவு எழுதிவிட்டு இப்படியும் பேசுகிறேனே என்று யோசிக்கிறீர்களா? அது ஒரு phase , இது ஒரு phase. நாளை நிலை மாறினாலும் ஆச்ச்சரியப்படுவதற்கில்லை. 🙂

  நோ கம்பாக்சில் நீங்கள் சொல்லும் சிறுகதைகள் நினைவு வருகின்றன.

  Like

 4. 🙂 ஆமாம் ஆர்வி! mood ஐ பொறுத்து எழுதுவீர்கள் போல! 
  Dogs of War பற்றி எழுதும்போது Deceiver பற்றி சொல்லக்கூடாதா?!
  அது சரி, உங்கள் தளம், உங்கள் இஷ்டம்!!!

  Like

 5. I have not read Dogs of War. But the narration induces. The narrations of concentration camps in Odessa File is monotonous and reminded me of the novels like Mila18 & QB VII of Leon Oris. Those who patiently read Odessa File till the end would have read with interest the conversation between the Nazi Criminal Chaser and Nazi Criminal at the climax narrating the justifications of Adolf Hitler’s actions and vehement opposition to such actions. But ofcourse, it was not as interesting as Day of the Jackal. The mention of Odessa File reminds me about the horrible holocaust too. Hope novels of Leon Uris about holocaust, occupation of Germany by Allies and Russia and Formation of Israel are interesting. Formation of Israel is also lucidly narrated in “O Jerusalem” of Larry Collins and Dominque Lapierre but the novel is much “Jerusalem” centric rather than Israel.

  Like

  1. க்ருஷ்ணகுமார், டாக்ஸ் ஆஃப் வார் பதிவு உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி. லியான் யூரி பற்றி எழுத வேண்டும். ஓ ஜெருசெலம் நாவல் இல்லையே, அபுனைவு ஆயிற்றே!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.