எம். ஆர். ராதா பற்றி இரண்டு புத்தகங்கள்

விந்தன் தொகுத்த “எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்”

நண்பர் அருணகிரி எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் என்ற புத்தகத்தைப் பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அவரது வார்த்தைகளில்:

சிறையிலிருந்து வெளிவந்த எம்.ஆர். ராதாவைப் பேட்டி கண்டு விந்தன் தினமணி கதிரில் தொடராக எழுதிய சிறைச்சாலை நினைவுகள்(?) உண்மையிலேயே மினி சுயசரிதம் எனும் தகுதி பெறக்கூடிய ஒன்று. சில விடுபட்ட, மறைக்கப்பட்ட பகுதிகள் இருந்தாலும் பல விஷயங்களில் ராதாவிற்கே உரிய முகத்திலறையும் நேரடித்தனம் நிரம்பியது. அப்பட்டமாகப் பேசப்படும் பல தகவல்களால் ஆவணமாகும் அளவுக்கு முக்கியமானது.

இணையத்தில் கிடைக்கவும் கிடைத்தது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு ராதாவை விந்தன் பேட்டி கண்டு தொகுத்திருக்கிறார். அருணகிரி சொல்வது போல ராதா வெளிப்படையாகப் பேசுகிறார். அவரது சிறு வயது நாடக அனுபவங்கள், ஜெகந்நாதய்யர் நாடகக் கம்பெனி, என்.எஸ். கிருஷ்ணனின் நட்பு, அவருக்கு உதவி செய்த கணேசய்யர், ஈ.வெ.ரா. கறாராக இவரிடம் பணம் வசூல் செய்தது, அதற்கு பழி வாங்க இவர் மாநாட்டில் நாடகம் போட ஆயிரம் ரூபாய் சார்ஜ் செய்தது, அன்று பாய்ஸ் கம்பெனிகளில் பரவலாக இருந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் எதையும் மறைக்கவில்லை. எம்ஜிஆரை சுட்டதைப் பற்றி மட்டும்தான் பேசவில்லை.

படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை. ஆனால் சுவாரசியம் இருக்கிறது. ராதாவின் ஆளுமை வெளிப்படுகிறது. இதை டி.கே. சண்முகத்தின்எனது நாடக வாழ்க்கை” நூலோடு சேர்த்துப் படிக்க வேண்டும். அன்றைய நாடக உலகைப் பற்றி ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கும்.

சுதாங்கன் எழுதிய “சுட்டாச்சு சுட்டாச்சு”

சமீப கால தமிழக வரலாற்றில் எம்.ஆர். ராதா எம்ஜிஆரை சுட்டது போல பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்ச்சி வேறு எதுவுமில்லை. சுட்டவரும் சுடப்பட்டவரும் பிரபல சினிமா நட்சத்திரங்கள். சினிமா கவர்ச்சி உச்சத்தில் இருந்த காலம். இன்று கூட ஏன் சுட்டார் என்று தெரியாது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கு போல தமிழர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த நிகழ்ச்சி.

சுதாங்கன் போலீஸ் விசாரணை மற்றும் கோர்ட் வாக்குமூலங்களை வைத்து இதை ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் thinly disguised புனைவு போல இருந்தாலும் கடைசி முக்கால் பகுதி கோர்ட் விசாரணை மட்டுமே. அதனால் இதை அபுனைவு என்றுதான் நான் வகைப்படுத்துகிறேன். புனைவாக எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ஆரம்பப் பகுதி நினைக்க வைக்கிறது.

ஏன் சுட்டார் என்று எம்ஜிஆரும் சொல்லவில்லை, ராதாவும் சொல்லவில்லை. கோர்ட்டில் ராதா எம்ஜிஆர்தான் தன்னை முதலில் சுட்டார், தான் தற்காப்புக்காகத் திருப்பி சுட்டேன் என்று வாதாடி இருக்கிறார். ராதாவின் வக்கீல் நிறைய குட்டையைக் குழப்ப முயற்சி செய்திருக்கிறார். சில procedural irregularities இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. தற்செயலாக நடந்தவை என்றுதான் தோன்றுகிறது.

புத்தகம் எல்லாரும் விரும்பிப் படிக்கும் அளவுக்கு சுவாரசியமாக இல்லை. இது இந்த விஷயத்தைப் பற்றி curiosity உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

சில titbits : எம்ஜிஆர் தான் கோடீஸ்வரன் இல்லை லட்சாதிபதிதான் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அன்பே வா திரைப்படத்துக்கு கிடைத்த ஒன்றரை லட்சம்தான் அவருக்கு அது வரை கிடைத்த அதிகபட்ச ஊதியமாம். அசோகனுக்கு நிறைய சிபாரிசு செய்திருக்கிறார், குலதெய்வம் ராஜகோபாலுக்கு வாய்ப்பு கூடாது என்று மறுத்திருக்கிறார். ராதா எம்ஜிஆரை கடுமையாக தி.க. பத்திரிகைகளில் தாக்கி இருக்கிறார், ஆனால் தொடர்ந்து எம்ஜிஆருடன் நடித்திருக்கிறார். ராதா முன்னால் எம்ஜிஆர் உட்காரக் கூட மாட்டாராம், அவ்வளவு மரியாதையாம்.

மணா என்பவர் எம்.ஆர். ராதா பற்றி தொகுத்த/எழுதிய புத்தகத்தையும் படித்திருக்கிறேன். டைம் பாஸ்.

தொடர்புள்ள சுட்டிகள்:
விந்தனின் புத்தகம் pdf வடிவில்
எம்ஜிஆர் சுடப்பட்ட அன்று ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்
டி.கே. சண்முகத்தின் “எனது நாடக வாழ்க்கை
சுதாங்கனின் தளம்

9 thoughts on “எம். ஆர். ராதா பற்றி இரண்டு புத்தகங்கள்

 1. இரண்டையுமே படித்திருக்கிறேன். இதை அடிப்படையாக வைத்து பின்னால் சிலர் எழுதிய நூலையும் படித்திருக்கிறேன். முன்னதுக்கு இருக்கும் சுவாரஸ்யங்கள் பின்னதில் இல்லை. விந்தன் அழகாகத் தொகுத்திருக்கிறார். ராதா மிக மிக வெளிப்படையாகப் பேசியிருப்பார். முன்னது சுவாரஸ்யம். பின்னது விறுவிறுப்பு.

  Like

 2. சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும் எம்.ஜி.ஆரை ஏன் சுட நேர்ந்தது என்பதை எம்.ஆர்.ராதா வெளிப்படையாகச் சொல்லவேயில்லை.

  ஒரு முறை ராதாவை பேட்டிகண்ட ஒரு நிருபர், “எம்.ஜி.ஆர்.அவர்களை நீங்கள் சுட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க, அதற்கு ராதா சொன்னார் “என் வாழ்க்கையில் நான் அரைகுறையாக செய்த காரியம் அது ஒண்ணுதான்”.

  (எம்.ஆர்.ராதாவின் பதிலை நான் ரசிக்கவில்லை. ‘தப்பு, ராதா அண்ணே’)

  Like

 3. //புத்தகம் எல்லாரும் விரும்பிப் படிக்கும் அளவுக்கு சுவாரசியமாக இல்லை. இது இந்த விஷயத்தைப் பற்றி curiosity உள்ளவர்களுக்கு மட்டும்தான்.//

  நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் நான் தமிழில் படித்த நல்ல புத்தகத்தில் இதுவும் ஒன்று! சுவாரசியமான படைப்பு.
  என்னால் கீழே வைக்க முடியவில்லை. ஒரே ஷாட்டில் படித்தேன் என்று நினைக்கிறேன்!

  முக்கியமான ஒன்று – இந்த புத்தகத்தை படித்ததனால் எம் ஜி ஆர் என்ற மாமனிதனை பற்றி மேலும் தெரிந்துகொண்டேன்!

  Like

 4. தமிழகத்தின் ரிஷிமூலம் தெரியாத சில விசயங்கள் எம்.ஜி.ஆர்,ராதா மற்றும் லட்சுமிகாந்தன் விவகாராம்.பகிர்வுக்கு நன்றி.

  Like

 5. நோ, உங்களுக்குப் பிடித்த அளவுக்கு எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
  ராஜநட், வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.