ஐரா லெவினின் “எ கிஸ் பிஃபோர் டையிங்”

லெவினின் கதை இன்று கொஞ்சம் cliche லெவலுக்குப் போய்விட்டது. ஆனால் வெளிவந்த சமயத்தில் – 1953 – சென்சேஷனல் ஹிட்டாக இருந்திருக்கும்.

கதையின் ஹீரோ ஒரு வில்லன். ஏழைக் குடும்பத்தவன். அழகன். கொழுத்த பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகப் போக திட்டம். பணக்காரப் பெண்கள் படிக்கும் காலேஜாகத் தேர்ந்தெடுத்து அங்கே சேர்கிறான். பெரிய தொழிலதிபர் பெண் டோரதியைக் “காதலிக்கத்” தொடங்குகிறான். கர்ப்பம். அதனால்தான் திருமணம் என்று தெரிந்தால் ஒரு பைசா கூடத் தராமல் தொழிலதிபர் வீட்டை விட்டு துரத்திவிடுவார். திருமணம் செய்துகொள்ளாவிட்டால் பழி வாங்குவார். என்ன செய்வது? த்ரில்லர்களில் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது.

பெண்ணின் ஒரு அக்கா எல்லனுக்கு சில க்ளூக்கள் கிடைக்கிறது. காலேஜில் blond ஆன, நல்ல உயரமான, தங்கையின் ஆங்கில வகுப்பில் கூடப் படித்த ஒருவனைத் தேடுகிறாள். வில்லனை நெருங்கும்போது வில்லன் சுதாரிக்கிறான். தங்கையின் கதி அக்காவுக்கும்.

இன்னொரு அக்கா மரியன் கதையில் நுழைகிறாள். (இவள்தான் கடைசி, வேறு அக்கா கிடையாது) மரியனுக்கும் எல்லனின் பழைய பாய்ஃப்ரென்ட் பட் கார்லிசுக்கும் காதல் ஏற்படுகிறது. மிச்சத்தைப் படித்துக் கொள்ளுங்கள்.

எல்லன் பகுதி சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல துப்பறியும் நாவலுக்கு வேண்டிய சஸ்பென்ஸ் அந்தப் பகுதியில்தான் இருக்கிறது. டோரதி பகுதி பரவாயில்லை. என்ன செய்ய முயற்சிக்கிறான் என்று தெரிவதால் சஸ்பென்ஸ் கிடையாது, ஆனால் விறுவிறுப்பு உண்டு. மரியன் பகுதியில் முடிச்சை அவிழ்ப்பது பிரமாதமாக இல்லை. ஆனால் மரியன் மற்றும் அவள் அப்பா பாத்திரங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

சஸ்பென்ஸ் த்ரில்லர், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருப்பது கதையின் பலவீனம். ஆனால் கதையில் இன்றும் – கொஞ்சம் cliche ஆன பிறகும் – ஒரு freshness தெரிகிறது. நல்ல ஐடியா. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

4 thoughts on “ஐரா லெவினின் “எ கிஸ் பிஃபோர் டையிங்”

 1. அன்பருக்கு,

  உங்களைப் பற்றி வலைத் தளத்தில் நுழைந்து தான் தெரிந்து கொண்டேன்.Ira Levin pen எழுத்தாளர் இவர் ஒரு ஆஸ்திரிய எழுத்தாளர். .புகைப் படம் மாறி உள்ளது.நன்றி.

  சுப்ரஜா

  Like

   1. அன்பரே சிறிய தவறு….இன்னுடையது…படம் சரியானதே…மன்னிக்க மறக்க….இந்த விஷயத்தை மட்டும் …

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.