ஜெயமோகன் பரிந்துரைத்த சிறுகதை – சந்திராவின் “அறைக்குள் புகுந்த தனிமை”

ஜெயமோகன் எழுதி இருக்காவிட்டால் தெரிந்திருக்காது. நல்ல சிறுகதை. என்னை யோசிக்க வைத்தது.

சில மணி நேரங்களில் உறவு நிலை மாறிக்கொண்டிருப்பது, யார் அதிகாரம் செலுத்துவது, யார் அடங்கிப்போவது என்பது மாறுவது எனக்கு ஒரு literary device ஆகத் தெரிகிறது. மனித உறவுகளுக்குள் ஒரு சமநிலை (equillibrium) வந்த பிறகு அது மாறும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அக/புற வயமான நிகழ்ச்சிகள் அவற்றை மெதுமெதுவாக மாற்றத்தான் செய்கின்றன. இதே கதையை பல வருஷங்களில் கணவன் மனைவிக்கு ஏற்படும் உறவு நிலை மாற்றங்களாக யோசித்துப் பார்த்தேன். நிறைய சிந்திக்க வைத்தது. ஓரங்க நாடகமாக வந்தால் மிகச் சிறப்பாக வரும்.

சந்திரா தன்னைப் பற்றி சொல்வது:

நுண்ணிய ஆயுதத்தைப் போல கண்ணுக்கு தெரியாமல் ஊசியாய் வாழ்க்கை அதன் வன்மத்தை என் மேல் செலுத்தினாலும் வாழ்வின் சுவையை ஆயுதத்தின் கூர்மையில் தேடிக் கொண்டிருப்பேன். ‘பூனைகள் இல்லாத வீடு‘, ‘காட்டின் பெருங்கனவு‘ இரண்டு சிறுகதை தொகுப்புகளும், ‘நீங்கிச் செல்லும் பேரன்பு‘ என்ற கவிதை தொகுதியும் வெளிவந்திருக்கிறது.

சந்திராவின் தளத்தில் இன்னும் சில சிறுகதைகள் – சூது நகரம், தரை தேடிப் பறத்தல், தொலைவதுதான் புனிதம் – படிக்கக் கிடைக்கின்றன. சூது நகரமும், தொலைவதுதான் புனிதமும் படிக்க சுவாரசியமாக இருந்தாலும் பாயின்ட் என்ன என்று என்று புரியவில்லை. தரை தேடிப் பறத்தலின் உருவகம் நன்றாக இருந்தாலும், முடிவு கொஞ்சம் போரடிக்கிறது.

சந்திராவுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்புடைய சுட்டி: சந்திராவின் தளம்

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

4 thoughts on “ஜெயமோகன் பரிந்துரைத்த சிறுகதை – சந்திராவின் “அறைக்குள் புகுந்த தனிமை”

  1. ஒரு நல்ல சிறுகதையினை அடையாளம் காட்டியதற்கு நன்றி திரு. ஆர்.வி. “அறைக்குள் புகுந்த தனிமை”, திரு. ஜெயகாந்தன் அவர்களது நடை போல இருக்கிறது. எழுத்தாளர் நன்றாக யோசிக்கிறார்.

    R.Balaraman

    Like

  2. வழக்கம்போல ‘ஆண்கள் எல்லோருமே கார்த்திகை மாதத்து நாய்கள்’ என்பது போல எழுதப்பட்ட பெண்ணியக் கதை. பெண்ணியத்துக்கு வலு சேர்க்க இதுவல்ல வழி என்பது என் கருத்து.

    கதவைத்திறந்து விட்டதும் அவன் ஒடிப்போனான் சரி. மறு நாள் அவள் தைரியமாக வெளியில் போய் வந்தாளா என்பதை எழுத்தாளர் எழுதவில்லை. ஒரு இரவில் அடைத்து வைத்து திறந்து விட்டதே பெரிய சாதனை என்று அந்தக் கதாபாத்திரம் எண்ணிக்கொண்டாளா தெரியவில்லை.

    நானும் ஒரு பெண்ணாக இருந்தும் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய இக்கதை எனக்குப்பிடிக்கவில்லை. ஸாரி. என் பார்வையில் பெண்ணியம் என்பது இதுவல்ல.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.