தொடரும் அசோகமித்ரன் சிபாரிசுகள்

அசோகமித்ரன் சிபாரிசுகள் பதிவில் அவர் நவீனப் புனைவுகளிலிருந்து எதையுமே தேர்ந்தெடுக்காதது வியப்படைய வைத்ததைப் பற்றி எழுதி இருந்தேன். நண்பர் கோபி அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, டாக்டர் பாண்டுரங்கன் மூவரும் நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக தேர்ந்தெடுத்திருக்கும் படைப்புகளைப் பற்றி ஒரு சுட்டி கொடுத்திருந்தார். இதில் பழந்தமிழ் இலக்கியத்தோடு நின்றுவிடாமல் பல நவீன உரைநடைப் படைப்புகளும் குறிப்பிடப்படுகின்றன.

அவரது முழு பதிவையும் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். இருந்தாலும் வசதிக்காக லிஸ்டை கீழே கொடுத்திருக்கிறேன். லிஸ்டையும் என் இஷ்டத்துக்கு வரிசை மாற்றி பதித்திருக்கிறேன். (வேறு ஒன்றுமில்லை, பழந்தமிழ் இலக்கியம், கவிதைகளை ஒரு பகுதியாகவும், நவீன உரைநடை நாவல்களை இன்னொரு பகுதியாகவும் போட்டிருக்கிறேன், எனக்குத் தெரிந்தவரை காலவரிசைப்படுத்தி இருக்கிறேன். தவறுகள் இருந்தால் சொல்லுங்கள், திருத்திவிடலாம்.)

பழந்தமிழ் இலக்கியம்+கவிதைகள்

  1. குறுந்தொகை
  2. கலித்தொகை
  3. புறநானூறு
  4. முல்லைப்பாட்டு – நப்பூதனார்
  5. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
  6. திருக்குறள்
  7. திருவாய்மொழி
  8. திருவாசகம்
  9. திருமந்திரம் – திருமூலர்
  10. சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
  11. கம்ப ராமாயணம்
  12. பெரிய புராணம் – சேக்கிழார்
  13. சிவவாக்கியர்
  14. நந்தன் சரித்திர கீர்த்தனை – கோபால கிருஷ்ண பாரதி
  15. திருவருட்பா – ராமலிங்க சுவாமிகள்
  16. குயில் பாட்டு – பாரதியார்
  17. குடும்ப விளக்கு – பாரதிதாசன்

நாவல்+சிறுகதைகள்

  1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  2. பத்மாவதி சரித்திரம் – ஆ. மாதவையா
  3. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  4. தியாகபூமிகல்கி
  5. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
  6. பொய்த்தேவுக.நா.சு.
  7. வாடிவாசல் – சி.சு. செல்லப்பா
  8. மோகமுள் – தி. ஜானகிராமன்
  9. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
  10. சாயாவனம் – சா. கந்தசாமி
  11. வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்
  12. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
  13. சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்
  14. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி
  15. பதினெட்டாவது அட்சக்கோடுஅசோகமித்ரன்
  16. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
  17. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகம்மது மீரான்

இந்த சிபாரிசுகளில் குயில் பாட்டு எனக்குப் பிடித்த பாரதியார் கவிதைகளில் ஒன்று. (ஆனால் பதின்ம வயதில் படித்தது, மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.) மிச்ச கவிதை இலக்கியத்தைப் பற்றி பேசும் தகுதி எனக்கில்லை.

நவீன உரைநடை சிபாரிசுகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளக் கூடியவையே – தியாகபூமி, நாகம்மாள், குருதிப்புனல் தவிர. இவை மூன்றும் இந்த லிஸ்டில் இருக்கக் கூடாது என்பது என் கருத்து. என் டாப் டன்னுக்கும் இதற்கும் வித்தியாசங்கள் உண்டு, ஆனால் அவை ரசனை வேறுபாடுகள்.

தொடர்புடைய சுட்டிகள்:

  • அசோகமித்ரன் சிபாரிசுகள் Part 1
  • கோபியின் பதிவு
  • கோபி அப்பவே பதிக்கச் சொன்னார், எனக்குத்தான் தாமதம் ஆகிவிட்டது. கோபி மன்னிக்க வேண்டும்.

    8 thoughts on “தொடரும் அசோகமித்ரன் சிபாரிசுகள்

    1. அசோகமித்திரனின் சிபாரிகளில் நீங்கள் குறிப்பிடுவது போல சங்க இலக்கியங்கள் எல்லாம் அதிகம் வாசித்ததில்லை. வாடிவாசல், பொய்த்தேவு, புதுமைப்பித்தன் சிறுகதைகள், ஒரு கடலோர கிராமத்தின் கதை, ஒரு புளியமரத்தின் கதை வாசித்திருக்கிறேன். இந்தப் பட்டியலில் வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலையும் சேர்த்திருந்திருக்கலாம். அற்புதமான நாவல். பகிர்விற்கு நன்றி.

      Like

    2. ஆர்வி, பதிவாக இட்டமைக்கு மிக்க நன்றி.

      \\கோபி மன்னிக்க வேண்டும்.\\

      ஏன் ஏன்? உங்களுக்கு முடியும்போது தானே போட முடியும்? இதற்குப் போய் எதற்கு மன்னிப்பெல்லாம்?

      Like

      1. // இதற்குப் போய் எதற்கு மன்னிப்பெல்லாம்? // உண்மை கோபி, இந்த சம்பிரதாய வார்த்தைகளை இனி மேல் தவிர்த்துவிடுகிறேன்.
        சித்திரவீதிக்காரன், பொய்த்தேவு இத்யாதி பற்றி உங்கள் தளத்தில் எழுதி இருக்கிறீர்களா?

        Like

    3. டியர் ஆர்.வி.,

      பழந்தமிழ் இலக்கியங்களில் முழுமையாகப்படித்தது ‘சிலப்பதிகாரம்’ மட்டுமே. பெரிய புராணம் பாதிக்கிணறு. மற்ற இலக்கியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக. சிலவற்றை அறவே தொட்டதில்லை. பாரதிதாசனின் குடும்ப விளக்கு, அப்போதே புதுக்கவிதை நடையில் எழுதப்பட்ட நவீனம்.

      நாவல்களைப்பொறுத்தவரை பட்டியலில் இருப்பவற்றில் 60% படித்திருக்கிறேன். எல்லோரும் சிறப்பித்துக்கூறும் ‘பொய்த்தேவு’ படித்தாக வேண்டுமென்று தோன்றுகிறது. படித்தவற்றுள் ரொம்பவே மனதை ஒன்ற வைத்தது தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’. படிக்கும்போது நாம் அதற்குள் வாழத்துவங்கி விடுவோம். போலி அலங்காரப்பூச்சுக்கள் இல்லாத யதார்த்த நாவல். படித்ததும், தோப்பில் இன்னும் வேறென்ன நாவல்கள் எழுதியிருக்கிறார் என்று அறிய மனம் ஆவல் படும்.

      Like

    சாரதா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.