விஷ்ணுபுரம் விருது விழா – டிசம்பர் 18 ஞாயிறு அன்று கோவையில்

என் தளத்தைப் படிப்பவர்கள் யாரும் ஜெயமோகன் தளத்தைப் படிக்காமல் இருக்கப் போவதில்லை, விஷயம் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். இருந்தாலும் இங்கேயும் போட்டு வைக்கிறேன். நாஞ்சில்நாடன், எஸ்.ரா., அவர்கள் அளவு அவ்வளவாக வெளியில் தெரியாத, ஆனால் பிரமாதமாக எழுதக்கூடிய யுவன் சந்திரசேகரும் பேசுகிறார்கள். கோவை சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் மிஸ் செய்யாதீர்கள். முடிந்தால் ஜெயமோகனிடமும் கொஞ்ச நேரமாவது பேசிவிட்டு வாங்கள், அவரை போன்ற விஷயமுள்ள, பேசத் தெரிந்த ஆளுமைகள் அபூர்வம்.

பூமணி எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். ஜெயமோகன் எனக்குப் பிடித்த வாசகர்களில் முதன்மையானவர். ஜெயமோகனைச் சுற்றிச் சுழலும் விஷ்ணுபுரம் வட்டத்தினர் போன முறை ஆ. மாதவனையும் இந்த முறை பூமணியையும் விருதுக்கு தேர்ந்தெடுத்தது கண்டவர்களுக்கும் விருது கொடுக்கும் (அகிலனுக்கு ஞானபீடம், வைரமுத்துவுக்கும் கோவி. மணிசேகரனுக்கும் சாஹித்ய அகாடமி) நம் ஊரில் பெரிய ஆறுதல். விஷ்ணுபுரம் விருது மேலும் மேலும் உன்னதம் அடைய வாழ்த்துகிறேன்.

அரங்கசாமிதான் பொறுப்பெடுத்து செய்கிறார் என்று நினைக்கிறேன், அவருடன் நேரம் செலவழிக்க முடியாதது என் துரதிருஷ்டம். அவருக்கு ஒரு ஜே!

தொடர்புடைய சுட்டிகள்:
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
பூமணியின் “வெக்கை”

6 thoughts on “விஷ்ணுபுரம் விருது விழா – டிசம்பர் 18 ஞாயிறு அன்று கோவையில்

  1. //நாஞ்சில்நாடன், எஸ்.ரா., அவர்கள் அளவு அவ்வளவாக வெளியில் தெரியாத, ஆனால் பிரமாதமாக எழுதக்கூடிய யுவன் சந்திரசேகரும் பேசுகிறார்கள். //

    தமிழின் அற்புதமான கதை சொல்லி யுவன். புனைகதைகளின் உச்ச பட்ச வெற்றிகளை தன் எழுத்தில் சாதித்தவர். ஆனால் விளம்பரங்களை விரும்பாதவர். தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் நாட்டம் இல்லாதவர். சமரசங்களுக்கு ஆட்படாதவர். அப்புறம் எப்படி அவர் வெளியில் எல்லோருக்கும் தெரிவார்?

    அவரைப் படித்தவர்களாலும் அதைப் பற்றிச் சொல்பவர்களாலுமே அவர் கொஞ்சம் கொஞ்சம் அறியப்படுகிறார்.

    யுவனின் சிறுகதைகளை/நாவல்களைப் படிக்கும் போது நான் என்னையே மறந்து விடுவதுண்டு. ஜெயமோகனிடம் கூட இது சாத்தியமானதில்லை (ஜெமோ. படிக்கப் படிக்க அது பற்றி சதா ஒரு சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். அதுதான் அவரது வெற்றியும் கூட)

    யுவன் நிறைய எழுத வேண்டும். (கவிதைகள் நிறைய எழுகிறார். அதில் எனக்கு நாட்டமில்லை.) இந்த ஆண்டு புத்தகச் சந்தைக்கு என்ன வரப் போகிறது என்பது தெரியவில்லை. பார்க்கலாம்!

    Like

  2. //ரமணன், யுவன் பயன்படுத்தும் அத்தைப்பாட்டி கதை சொல்லும் டெக்னிக் அபாரமானது.//

    உண்மை. உண்மை. அப்படியே புனைவிற்குள் நம்மை அமிழ்த்தி விடும் அசத்தலான எழுத்து. அ.முத்துலிங்கத்துக்குப் பிடித்த எழுத்தாளர்களில் யுவனும் ஒருவர் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.

    யுவன் வாசகர்களின் விருப்பத்துக்கு எழுதாதவர். தன் விருப்பத்துக்கும் எழுத மாட்டார். எழுத்தின் விருப்பத்துக்கு எழுதிச் செல்லக் கூடிய ஒரே எழுத்தாளர்.

    Like

    1. சதீஷ், என் கருத்தில் அகிலன் எந்த விருதுக்கும் தகுதி அற்றவரே. வேங்கையின் மைந்தனை நான் உலக மகா போர் நாவல் என்றே கருதுகிறேன். தட்டையான பாத்திரப் படைப்பு உடைய நாவல். என் கருத்தை நீங்கள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.