சு. வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலுக்கு சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்த விஷயம் நண்பர் விமல் மூலம்தான் முதலில் தெரிந்தது. படிக்க விரும்பும் நாவல்களில் ஒன்று. ஓரளவு ஒத்த ரசனை உள்ள ஜெயமோகன் சிலாகிக்கும் புத்தகம், எனக்கும் அநேகமாகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்!
தமிழுக்கான ஜூரி உறுப்பினர்கள் என்று தமிழ்நாடன், பேராசிரியர் செல்லப்பன்,
குறிஞ்சிநாடன் குறிஞ்சிவேலன் என்று மூன்று பேரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தகுதி உள்ள படைப்பைத் தேர்ந்தெடுத்ததற்காக மூவருக்கும் வாழ்த்துக்கள். ஒரு சின்ன ஆதங்கம். அது என்ன மூன்று பேரில் ஒருவர் கூடவா எழுத்தாளராக இருக்கக் கூடாது? ஒரு இ.பா., கி.ரா., ஜெயகாந்தன், அசோகமித்திரன், சா. கந்தசாமி, நாஞ்சில்நாடன் எல்லாரும் இருக்கும்போதே இப்படியா?
போன வருஷம் நாஞ்சில், இந்த முறை காவல்கோட்டம். சாஹித்ய அகாடமியின் போக்கில் ஒரு மாற்றம் தெரிகிறதே! இது தொடர வேண்டும்…
பரிசு பெற்ற படைப்புகளில் நான் படித்து ரசித்த இன்னொன்று ராமச்சந்திர குஹா எழுதிய “இந்தியா ஆஃப்டர் காந்தி“. நல்ல தேர்வு.
கன்னடத்தில் கோபாலகிருஷ்ண பை எழுதிய “ஸ்வப்ன சரஸ்வதா“, ஹிந்தியில் காசிநாத் சிங் எழுதிய “ரெஹான் பர் ரெக்கு“, மலையாளத்தில் எம்.கே. சானு எழுதிய “பஷீர்: ஏகாந்த வீதியில் அவதூதன்” என்ற வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுக்கும் விருது. யாராவது படித்திருந்தால் சொல்லுங்களேன்!
முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்
தொடர்புடைய சுட்டிகள்:
2011-இல் விருது பெற்றவர்களின் லிஸ்ட்
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் பகுதி I, பகுதி II
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் – லிஸ்ட்
சாகித்ய அகாடமி தளம்
//ஒரு சின்ன ஆதங்கம். அது என்ன மூன்று பேரில் ஒருவர் கூடவா எழுத்தாளராக இருக்கக் கூடாது? //
EKIS 🙂
LikeLike
மனப்பூர்வ வாழ்த்துகள்.
LikeLike
மதுரையை மையமாகக் கொண்ட காவல்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது. சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள். அடுத்த வருடம் காவல் கோட்டத்தை வாசித்துவிட வேண்டுமென்று இருக்கிறேன். ‘அரவான்’ படம் காவல்கோட்டத்திலிருந்து ஒரு சிறுபகுதியை படமாக எடுத்திருக்கிறார்களாம். அதையும் பார்க்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.
LikeLike
தமிழ்நாடன் எழுதி எதையோ நூலகத்தில் படித்த நினைவு. குறிஞ்சி நாடனும் கூட ஏதோ எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். பேராசிரியர் செல்லப்பான் யார் என தெரியவில்லையே! சிலம்பொலி செல்லப்பனா? பழனியப்பா பிரதர்ஸ் செல்லப்பனா? சிதம்பரம் செல்லப்பனா? இல்லை புதுவயல் செல்லப்பனா? 😦
LikeLike
I would like all of you to go through the criticism of Kaval Kottam by S. Ramakrishnan
LikeLike
பாலா, அது என்ன EKIS? மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது!
ரமணன், தில்லுமுல்லு படத்தில் தேங்காய் அது கரகரப்ரியாவா, ஷண்முகப்ரியாவா ஸ்ரீப்ரியாவா என்று கேட்பது போல இருக்கிறதே!
ஜெயச்சந்திரன், எஸ்.ரா.வை விட ஜெயமோகனின் ரசனைக்கும் எனக்கும் அதிக இசைவு உண்டு.
LikeLike
//ரமணன், தில்லுமுல்லு படத்தில் தேங்காய் அது கரகரப்ரியாவா, ஷண்முகப்ரியாவா ஸ்ரீப்ரியாவா என்று கேட்பது போல இருக்கிறதே!//
ஹி..ஹி…
அது குறிஞ்சி நாடன் இல்லையாம். குறிஞ்சி வேலனாம்.
கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு முறையும் எஸ்.ராவின் பெயர் இறுதிப்பட்டியல் வரை வந்து பின்னர் ஏனோ தவிர்க்கப்பட்டு விடுகிறது என்பதை அறிவீர்கள் தானே!
LikeLike
என்ன கொடும இது சார்! (அதாகப்பட்டது…. வாசகர் விருது வழங்கக் கூடாதா? எழுத்தாளர்கள்தான் எழுத்தாளருக்கு விருது தேர்வு செய்ய வேண்டுமா! என்று தோணிச்சு 🙂
LikeLike
குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பாளர். எனக்குத் தெரிந்து எம். டி. வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
LikeLike
ரமணன், கோபி, குறிஞ்சிவேலன் பற்றிய தகவலுக்கும் பிழையை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி!
LikeLike