Skip to content

2012 புத்தாண்டு திட்டங்கள் – Bags

by மேல் ஜனவரி 1, 2012

ஜகா வாங்கிவிட்டான் என்று ஆர்வி சொல்வதால் அதையே சாக்காக வைத்துக் கொண்டு முழுமையாக ஜகா வாங்கிவிடலாமா என்று தோன்றும் என் எண்ணத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு இந்த பதிவை இடுகிறேன்.

சில மாதங்களாக நான் ஜகா தான் வாங்கியுள்ளேன். அதறக்கு புற காரணங்களும், அகக் காரணங்களும் உண்டு. என்றாலும் இப்பொழுது இரண்டு தான் முன்னால் நிற்கிறது. ஒன்று, ஆர்வமிருந்தாலும் தரமாக எழுத நான் இன்னும் நீண்ட பயணம் மேற் கொள்ள வேண்டும்.  இரண்டாவது, நேரத்தை ஒருங்கிணைப்பது. இரண்டையும் கருத்தில் கொண்டு முயற்சி எடுப்பது தான் இவ்வருட new year resolution.

2011ல் சில முக்கிய நூல்களைப் படித்தேன். ஆழி சூழ் உலகு, Crime and Punishment ( 2009ல் நூலக ebookல் படித்து காலம் கடந்ததால் பாதியில் கைவிட்டது – இப்பொழுது சொந்தமாகவே வாங்கி விட்டேன்) குறிப்பிடத்தக்கது.

இதுவரை பட்டியல் போட்டுப் படித்ததில்லை. என்றாலும் இம்முறை பட்டியல் போடலாமே என்று ஒரு முயற்சி. என் சிந்தனைக்கு உகந்ததாக இருப்பது இவை. இதில் வரிசையெல்லாம் கிடையாது. எந்த புத்தகம் மாட்டுகிறதோ அது தான்.

1. One hundred years of solitude – Gabriel García Márquez
2. The name of the Rose – Umberto Eco
3. War and Peace – Leo Tolstoy
4. The selfish Gene – Richard Dawkins
5. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
6. கொரில்லா – ஷோபா சக்தி
7. பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
8. வோல்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சங்கிரீத்யாயன் (ஆங்கிலத்தில் படிக்கலாமா? தமிழில் படிக்கலாமா?)
9. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
10. பிறகு – பூமணி

11.  Breaking India – Rajiv Malhotra and Aravindhan Neelakantan

12. The Hindu – Wendi Doniger

13. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்

14. உப பாண்டவம் – எஸ் ரா (பாதியில் நிற்கிறது)

15. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்

பார்க்கலாம் எப்படி போகிறதென்று.

Advertisements

From → Uncategorized

3 பின்னூட்டங்கள்
  1. The selfish Gene – Richard டாவ்கின்ஸ் – ஃ ப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.
    6. கொரில்லா – ஷோபா சக்தி – நூலகம் தளத்தில் கிடைக்கிறது.
    8. வோல்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சங்கிரீத்யாயன் (தமிழில் என்னிடம் இருக்கிறது)
    9. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு (அன்பரசன் புத்தகம் என்னிடம்தான் இருக்கிறது)
    10. பிறகு – பூமணி (என்னிடம் இருக்கிறது)

    13. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் (என்னிடம் இருக்கிறது)

    Like

  2. Bags permalink

    Selfish Gene is with me.

    Like

  3. Sirodai permalink

    வோல்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சங்கிரீத்யாயன் (ஆங்கிலத்தில் படிக்கலாமா? தமிழில் படிக்கலாமா?)

    >>> படிக்காமல் இருப்பதுதான் நல்லது. நரி இடமா போன நல்லதா இல்லை வலமா போன நல்லதான்னு பாக்கறத விட மேல விழுந்து புடுங்காம போன நல்லதுன்னு நினைக்கறது நல்லது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: