2012 புத்தாண்டு திட்டங்கள் – RV

புது வருஷம் என்றால் திட்டங்கள் போடுவதும் இரண்டு நாள் போனதும் அவற்றை மறந்துவிடுவதும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து நடந்து வரும் பழக்கம். போன வருஷம் போட்ட திட்டங்கள் சிரிக்கத்தான் பயன்படுகின்றன. வழக்கம் போல கொஞ்சம்தான் நடந்தது. இந்த வருஷம் திட்டம் போட வேண்டிய வேலை மிச்சம்.

2012 -இல் எனக்கு முக்கியமாகத் தோன்றுபவை.

  1. கையில் கிடைத்ததைப் படிப்பதை எல்லாம் குறைத்துக் கொள்ள வேண்டும். பதிவுகளின் quantity முக்கியம் இல்லை, quality-தான் முக்கியம். இந்தத் தளத்தைப் பார்ப்பவர்களுக்கும் அது கொஞ்சம் relief ஆக இருக்கும். 🙂
  2. முடிந்த வரை சீரிசாக எழுத வேண்டும். எழுதும் பதிவுகளுக்கு ஒரு தீம் இருக்க வேண்டும். அது என்ன என்று முடிவு செய்யவில்லை. ஜெயமோகன் சிபாரிசு செய்யும் நாவல்கள், எஸ்.ரா. சிபாரிசு செய்யும் நாவல்கள், மகாபாரதப் படைப்புகள், இல்லை நானே படித்த, படிக்க விரும்பும் புத்தகங்களை ஒரு லிஸ்ட் போட்டு அவற்றைப் பற்றி ஒரு சீரிசாக போட்டால் நன்றாக இருக்கும்.
  3. சிலிகான் ஷெல்ஃப் குழுமம் இங்கே ஓரளவு டெவலப் ஆகி இருக்கிறது. ஆனால் இந்தத் தளத்தில் எழுதுவது அனேகமாக நான் மட்டுமே. சக பொறுப்பாளனான பக்ஸ் கூட ஜகா வாங்கிவிட்டான். மற்ற குழும உறுப்பினர்களை எழுத வைக்க வேண்டும். ((அருணகிரி, திருமலைராஜன் ஆகியோர் பல இணைய தளங்களில் அவ்வப்போது எழுதுகிறார்கள். மயிலேறி ஒரு ப்ளாக் நடத்துகிறார்.)
  4. எழுதுவதை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

2011 திட்டங்கள், மற்றும் படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள் என்று இரண்டு லிஸ்ட் போட்டிருந்தேன். மொத்தமாக 22 புத்தகங்களை சொல்லி இருந்தேன். அதில் படித்தது ஐந்துதான். (ஆழிசூழ் உலகு, வீரபாண்டியன் மனைவி, சுண்ணாம்பு கேட்ட இசக்கி, வீரபாண்டியன் மனைவி, வாசவேஸ்வரம், புளியமரத்தின் கதை (மறு வாசிப்பு). உண்மையில் மிச்சப் பதினேழு மற்றும் விஷ்ணுபுரம், Six Acres and a Third, சாஹேப் பீபி குலாம் புத்தகங்களை மட்டும் இந்த வருஷம் படித்தால் அதுவே போதும். பழக்க தோஷம் விடாது, அதனால் ஜனவரியில் பழைய பாணியில் இரண்டு நாளுக்கு ஒரு பதிவு என்ற பாணி தொடரும். அதற்கப்புறம் தெரியாது.

இந்த வருஷம் படிக்க வேண்டிய புத்தகங்கள்:

  1. வார் அண்ட் பீஸ் (War and Peace)
  2. க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட் (Crime and Punishment)
  3. ஐவோ ஆண்ட்ரிச் எழுதிய ப்ரிட்ஜ் ஆன் தி ட்ரினா (Bridge on the Drina)
  4. கோபோ அபே எழுதிய உமன் இன் த ட்யூன்ஸ் (Woman in the Dunes)
  5. பிபூதிபூஷன் பட்டாசார்யா எழுதிய பதேர் பாஞ்சாலி (Pather Panchali)
  6. கொற்றவை
  7. கடலுக்கு அப்பால் + புயலிலே ஒரு தோணி
  8. ஜே ஜே சில குறிப்புகள் (மறு வாசிப்பு)
  9. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  10. பாலகுமாரனின் உடையார் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  11. நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  12. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  13. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  14. பாலகிருஷ்ண நாயுடுவின் டணாய்க்கன் கோட்டை (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  15. பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  16. கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  17. தேவனின் சி.ஐ.டி. சந்துரு (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  18. விஷ்ணுபுரம் (மறுவாசிப்பு)
  19. ஃபகீர் மோகன் சேனாபதி எழுதிய Six Acres and a Third (ஒரிய மொழிப் புத்தகம் – கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  20. பிமல் மித்ரா எழுதிய சாஹேப் பீபி குலாம்
  21. ஜெயமோகனின் இன்றைய காந்தி (முதல் முறை போட்ட லிஸ்டில் விட்டுப்போய்விட்டது, இதுவும் கைவசம் இல்லை)

தொடர்புள்ள சுட்டிகள்:
2011 திட்டங்கள்
படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள்
நண்பர் நட்பாசின் வாழ்த்து

21 thoughts on “2012 புத்தாண்டு திட்டங்கள் – RV

  1. ரத்னவேல், ஐபாடில் pdf தரவுகளை படிப்பதில் பிரச்சினை இருக்காது. ஆனால் நான் பர்சனலாக பயன்படுத்தியதில்லை. தெரிந்தவர்கள் யாராவது ரத்னவேலுக்கு இன்னும் சொல்லுங்கப்பா!
    ரமணன், நட்பாஸ், மற்ற நண்பர்கள் எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    Like

  2. சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் இன்றுதான் வாசிக்கத்தொடங்கியிருக்கிறேன். மதுரை குறித்த நாவல் எனும் போது மகிழ்வாயிருக்கிறது. கொற்றவையை இந்தாண்டு மறுபடியும் வாசிக்க வேண்டும். உங்கள் பட்டியலில் உள்ள புத்தகங்களை வாசித்து முடிக்க வாழ்த்துகள்.

    Like

  3. சித்திரவீதிக்காரன், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அது சரி, நீங்க, ரமணன், நட்பாஸ், சிமுலேஷன், திருமலைராஜன், சுந்தரேஷ், அருணா, ஜடாயு, விசு, பாலாஜி, பாஸ்டன் பாலா யாரும் லிஸ்ட் போடலையா?

    Like

    1. நாங்கல்லாம் லிஸ்ட் போடறதில்லீங்க. அவங்க அவங்க டேஸ்டுக்கெத்த மாதிரி கன்னா பின்னான்னு புஸ்தகத்தை வாங்கிருவோம். அப்புறம் நிதானமா ஒவ்வொண்ணா படிப்போம். இதுல புனைவு, அபுனைவு, ஆன்மீகம், எஸ்.ரா, ஜெயமோகன், அ.முத்துலிங்கம், அசோகமித்திரன், சுஜாதா, யுவன் அது இதுன்னு எல்லாமே இருக்கும்.

      போன தடவை போயிட்டு போட்ட லிஸ்ட் (சும்மா படம் காட்டிருக்கேன்)

      http://ramanans.wordpress.com/2011/01/13/34%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/

      பழைய லிஸ்ட் :

      http://ramanans.wordpress.com/2010/01/11/33%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/

      ஆனா எளக்கிய பொஸ்தகம் எல்லாம் தனியா எடுத்து வச்சிருக்கேன். அதை லிஸ்ட் போடலை.

      போன தடவை வாங்கின ஏழாம் உலகத்தையும், முத்து மீனாளோட ‘முள்’ளையும் படிச்சு ஒரு மாதிரி ஆயிருச்சி. அப்புறம் யுவன் சந்திரசேகரோட எல்லா புக்ஸையும் வாங்கி(கவிதை தவிர்த்து) மாய்ஞ்சு மாய்ஞ்சு படிச்சுதான் ரிலாக்ஸ் ஆக முடிஞ்சது. இந்த தடவை என்னா வாங்கறதுன்னு இன்னும் முடிவு பண்ணலை. ஆனா இதுவரைக்கும் வாங்கின மாதிரி கன்னா பின்னான்னு இந்த தடவை வாங்கறதில்லைன்னு முடிவு பண்ணியாச்சி. ;-(

      Like

  4. Hai RV,
    //தேவனின் சி.ஐ.டி. சந்துரு (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)//
    Please avoid reading this book. Waste of time.. i remember its around 500+ pages.. While in middle i realize this is rubbish. i cant either read it further or throw it away..finally i completed it with great disappointment on Devan (but Thuppariyum Sambu & Sreeman sundaram are good). nothing to grasp from this book..

    Like

    1. சாம்புவின் ரசிகனான நான் இதை ஆமோதிக்கிறேன். சி.ஐ.டி.சந்துரு கொஞ்சம் இல்லை, நிறையவே அறுவை. நிச்சயம் ஆர்வி பொறுமை இழந்து விடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

      Like

  5. ஆர்.வி – லிஸ்ட் எல்லாம் போடும் வழக்கம் இல்லை. ஆனால் இந்தியா வந்த பின் படிப்பது நிச்சயம் அதிகரித்துள்ளது. அதனால், நாஞ்சில் நாடன், அசோகமித்ரன், லா.ச.ரா, பி,ஏ. கிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன், தி.ஜா,J. M. Coetze, Rana Dasgupta, Amitav Ghosh, Anita Desai, Ishugiro, Michael Ondatje, Amitav Chaudhuri ஆகியோரின் அனைத்து ஆக்கங்களையும், Haruki Marukami யின் சிலவற்றையும் முழுவதுமாக படிக்க ஆசை. இவர்கள் அனைவருமே எனக்கு மிக பிடித்த எழுத்தாளர்கள். நான் இவர்களின் நிறைய படைப்புகளை படித்தும் இருக்கிறேன். மீதியையும் படித்து முடிக்க வேண்டும் என்று விருப்பம். முடியும் என எண்ணுகிறேன். பார்க்கலாம்.

    ஜெ.மோ வில் இன்னும் படிக்க விரும்பி படிக்காதவை கொற்றவை மட்டுமே. பக்கத்தில் போகவே பயமாக இருக்கிறது. விஷ்ணுபுரம் மறுவாசிக்க ஆசை. இன்னும் ஒரு வருடம் போகலாம் என்றும் தோன்றுகிறது. இதை தவிர கொற்கையும், காவல் கோட்டமும் கையில் இருக்கிறது. படிக்க ஆசை தான். மற்றும் யூமா வாசுகி, அ.க.பெருமாள், கண்மணி குணசேகரன், சோ. தருமன், பெருமாள் முருகன் ஆகியோர்களின் சில முக்கிய படைப்புகளை கண்டிப்பாக சீக்கிரமே படிக்க வேண்டும் என நினத்துக் கொண்டிருக்கிறேன்.

    இதற்கு நடுவில் எதயாவது படித்து விட்டு யாரவது கிளப்பிவிடும் சிபாரிசுகளையும் புறந்தள்ள முடியாது. அடுத்த ஆண்டு யாராவது சில பேர் மிக நல்ல சில புத்தகங்களை எழுதி வேறு நம்மை படுத்துவார்கள்.

    சினிமாவிற்கு நிஜமாகவே ஒரு பெரிய லிஸ்ட் வைத்து இருக்கிறேன். அதை எல்லாம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் . உஸ்ஸ்ஸ் அப்பாடா, இப்பவே கண்ணை கட்டுதே என்ற பொன்மொழி ஞாபகத்திற்கு வருகிறது.

    நான் சும்மா இருந்தேன். என்ன லிஸ்ட் எல்லாம் கேட்டு இப்ப பாருங்க. புது வருடத்தில் வேலையை நான் ராஜினாமா செய்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு ஆர்.வி.

    புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙂

    Like

  6. ஆர். வி – நேற்று பாரதி மணி சாருடன் அவர் வீட்டில் மிக நீண்ட அரட்டை. அவர் புத்தகம் எல்லாரும் படிக்க ஆசைப்படுகிறார்கள் என்று கேட்டால் ரொம்ப சந்தோஷப்படுவார். இந்தியா வந்தால் நீங்கள் சந்திக்க வேண்டிய interesting personality.

    Like

  7. நல்லூரான் மற்றும் ரமணன், ஒரு காலத்தில் நெருங்கிய நண்பனும் இன்னொரு துப்பறியும் கதைப் பிரியனும் ஆன சுந்தர நாராயணன் சி.ஐ.டி. சந்துருவை தமிழின் “முதல்” துப்பறியும் கதை என்று சொல்வான். அப்போதிலிருந்தே தேடுகிறேன், கிடைப்பதில்லை.

    அருணா, பாரதி மணியை சந்திக்க ஆசைதான்…

    ரமணன், வாங்கிய புத்தகங்களின் லிஸ்டையாவது மறக்காமல் போடுங்கள்!

    Like

    1. நிச்சயம் போடுகிறேன். இந்த முறை தேடித் தேடி வாங்கப் போகிறேன். புதியவற்றுடன் பழசையும், குறிப்பாக பழைய கால எழுத்தாளர்களின் நூல்களை வாங்கலாம் என இப்போது தோன்றுகிறது. கடந்த முறை தியாகி சுப்ரமண்ய சிவா எழுதிய (ஒரே நூல்) அரிதான ஒரு நூலை வாங்கினேன். பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் நல்ல நகைச்சுவை.ஜமீன்/பிராமின் பற்றிய ஜாலி கிண்டல் செமையாக இருக்கிறது

      Like

    2. இன்னும் படிக்க ஆர்வமாக இருந்தால், சி.ஐ.டி. சந்துரு என்னிடம் உள்ளது. Sacramento பக்கம் வரும் திட்டம் ஏதும் உள்ளதா? அல்லது நான் அந்தப் பக்கம் வரும்போது சந்தர்ப்பம் அமைந்தால் தங்களையும், சிலிகான் செல்ப் குழுமத்தையும் சந்திக்க ஆவல்.

      -பாலாஜி.

      Like

  8. hello RV,
    Happy new year! It’s nice to see the list! I just had a weird idea of collecting S.Ra’s list of 100 best novels in tamil!Tried to find out the publishers of the books that S.Ra mentioned and could find only few! Only few of them are available online for purchase! can you help me with the list? tedious job huhh???

    Like

    1. 1.கிளாரிந்தா – மாதவையா

      2. நாகம்மாள் – ஆர் சண்முக சுந்தரம்

      3.வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்

      4. சயாம் மரண ரயில் – ரெ. சண்முகம்.

      5. லங்காட் நதிக்கரை – அ.ரெங்கசாமி

      6. தீ.- எஸ். பொன்னுதுரை.

      7.பஞ்சமர் – டேனியல்

      8.கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்

      9.வாடாமல்லி – சு.சமுத்திரம்.

      10. கல்மரம் – திலகவதி.

      11. போக்கிடம் – விட்டல்ராவ் is it possible to tell where from i can get these books
      Thanks:)

      Like

  9. இனியா, வீரபாண்டியன் மனைவி சென்னை மீனாட்சி காலேஜுக்கு எதிரே உள்ள பிரேமா பிரசுரத்தில் கிடைக்கிறது. என்னிடம் ஒரு காப்பி இருக்கிறது. நீங்கள் சான் ஃபிரான்சிஸ்கோ அருகே வசிப்பவராக இருந்தால் தாராளமாக இரவல் வாங்கிக் கொள்ளலாம்.
    நாகம்மாள் – http://noolaham.net/project/30/2931/2931.pdf

    பாலாஜி, இப்போதைக்கு சாக்ரமெண்டோ வரும் திட்டம் இல்லை, ஆனால் டாஹோ போனாலும் போவோம். அப்படிப் போனால் உங்களை சந்திக்க முயற்சி செய்கிறேன்.

    Like

  10. புத்தகக் கண்காட்சி – நான் கட்டாயம் வாங்க நினைத்திருக்கும் புத்தகங்கள்:

    கொற்கை

    காவல் கோட்டம்

    சில இறகுகள் சில பறவைகள் (வண்ணதாசன்)

    லா.ச.ரா சிறுகதைகள் (உயிர்மை)

    வான் மழை போற்றுவோம் (மணிமேகலை பிரசுரம்)

    பசித்த பொழுது

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.