Skip to content

பி. ஏ. கிருஷ்ணனின் “திரும்பிச் சென்ற தருணம்”

by மேல் ஜனவரி 7, 2012

இது தோழி அருணா எழுதிய பதிவு. இன்னும் நிறைய எழுதுங்கள், அருணா!

சென்னையில் என் அப்பா ஒரு புது புத்தக அலமாரி வாங்கி அதில் அவர் புத்தகங்களை அடுக்கியுள்ளார். நான் நினைத்ததைவிட நிறைய வைத்திருக்கிறார். பி.ஏ. கிருஷ்ணன் கையொப்பமிட்ட திரும்பிச் சென்ற தருணம் அதில் ஒன்று.

மனிதர் உயர் அரசு பதவிகளில் இருந்து உலகம் சுற்றியவர் என தெரிகிறது. பயணம், வாழ்க்கை, வரலாறு, திரைப்படங்கள், மனிதர்கள், மற்றவை என மொத்தம் 25 கட்டுரைகள். மணியன் பயணக்கட்டுரைகள் போல் இல்லாத நல்ல பயண, அனுபவக் கட்டுரைகள் தமிழில் அதிகமாக கிடையாது என்பது என் எண்ணம். பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் இந்த வகையில் நான் படித்ததில் நல்ல முன்மாதிரி. இவ்வகை கட்டுரை எழுத தேவையான வாழ்க்கைப் பின்புலமும், இலக்கிய புலமும் நிறைய பேருக்கு அமைவதில்லை. பி.ஏ. கிக்கு ரெண்டுமே அமைந்திருக்கிறது.

பயணம் தொகுதியில் உள்ள பாலிடானா ஜையின் கோவில் சரித்திரம், அந்தமான் சிறையில் சுதந்திர போராளிகளின் நிலை, போர்ட் பிளேரில் ஜராவா பழங்குடியின் இன்றைய நிலை, கம்போடிய அங்கோர்வாட், எகிப்து என எல்லா கட்டுரைகளுமே மிக விரிவான, சுவாரசியமானவை. அல்கட்ராஸ் என்னைக் கவரவில்லை. திரும்பிச் சென்ற தருணம் பயண கட்டுரையை தாண்டிய நல்ல இலக்கியம்.

சுய வாழ்க்கை கட்டுரைகளாக உள்ள 2 கட்டுரைகளும் மிக நன்றாக இருந்தது. 1857ல் தெற்கு ஏன் வெடிக்கவில்லை மற்றும் மருது பாண்டியர் இரண்டுமே மிக நன்றாக ஆராயப்பட்டு, அதிகம் தெரியாத விவரணைகள் அடங்கிய ஆனால் உணர்ச்சி மிகுந்த கட்டுரைகள். திரைப்படங்களை பற்றிய 5 கட்டுரைகளுமே நன்றாக இருந்தது ஆனால் என்னை அவ்வளவு கவரவில்லை. இதில் உள்ள தகவல்களை நான் ஏற்கனவே அறிந்திருந்ததாலும் இருக்கலாம்.

தான் கம்யூனிஸ்ட் என்று கூறும் இவர் சவர்க்காரை பற்றிய மதிப்பீடுகளையும் கூட உண்மை சார்ந்து எழுதுகிறார். காந்தீய போராட்டவாதிகளின் ஈடுபாட்டையையும், சேவையும் அரசியல் சாராத மனிதாபிமானத்தோடு சொல்கிறார். பி.ஏ.கி யின் தமிழ், ஆங்கில புலமை, இலக்கிய ஈடுபாடு, பயண அனுபவம், இவற்றோடு அவரின் தீவிர ஆராய்ச்சியையும் நம்மால் உணர முடிகிறது. கண்டிப்பாக படியுங்கள், முடிந்தால் வாங்கி வைத்து கொள்ளுங்கள் என சிபாரிசு செய்கிறேன்.

புத்தகத்தை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. விலை 180 ரூபாய். நூல் உலகம் தளத்தில் பத்து சதவிகிதம் தள்ளுபடியோடு கிடைக்கிறது.

Advertisements
3 பின்னூட்டங்கள்
  1. நல்ல விமர்சனம்.
    நன்றி.

    Like

  2. பி.ஏ.கிருஷ்ணனின் ‘திரும்பிச்சென்ற தருணம்’ குறித்து நல்ல அறிமுகம். வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.

    Like

  3. இந்த கட்டுரை நூல் என்னிடமும் இருக்கிறது. ஆனால் படிக்க ஆரம்பிக்கவில்லை.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: