வோர்ட்பிரஸ் இந்தத் தளத்தைப் பற்றி உருவாக்கிய 2011 ரிப்போர்ட்டைப் பார்த்தேன். போன வருஷம் எழுதியவற்றில் மிகப் பாப்புலரான பதிவு கல்கியின் வாரிசுகள் என்ற பதிவாம். அந்த சரித்திர நாவல்கள் சீரிஸ் பதிவுகளை எனக்கும் பிடிக்கும். மிச்ச டாப் பதிவுகள்:
- சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்
- எழுத்தாளர் தளங்கள் II
- தமிழில் சரித்திர நாவல்கள்
- மகாபாரதம் சார்ந்த படைப்புகள்
ஜெயமோகன் தளத்திலிருந்தும், தமிழ்மணம் திரட்டியிலிருந்தும் நிறைய பேர் வந்து பார்த்திருக்கிறார்களாம். இந்தியாவிலிருந்தும், அமெரிக்காவிலும் வாசகர்கள் இருப்பது ஆச்சரியமில்லை, ஆனால் அர்ஜென்டினா, சிலி, அல்ஜீரியா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும் படிக்கிறார்கள் என்பது வியப்புதான். நிறைய மறுமொழிகள் எழுதிய ரமணன், ஸ்ரீனிவாஸ், ஜெயமோகன், சாரதா, சிமுலேஷன், மற்ற எல்லாருக்கும் நன்றி!
படித்ததில் எது நல்ல படைப்பு என்பதுதான் முக்கியம், 2011-இல் என்னத்தைப் படித்தேன் என்பதெல்லாம் எனக்கே மேட்டர் இல்லை. இருந்தாலும் போன வருஷம் என்னதான் எழுதி இருக்கிறோம் என்று ஒரு அவசரப் பார்வை பார்த்தேன். போன வருஷம் எழுதிய பதிவுகளில் எது நல்ல நாவல் பற்றியது, எது நல்ல சிறுகதை பற்றியது என்று கீழே. சிறுகதைகள் பேரைக் கிளிக்கினால் அந்த சிறுகதையைப் படிக்கலாம்.
நாவல், நாடகம், அபுனைவு இத்யாதி
நாவல்கள்:
- சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”
- லா.ச.ரா.வின் “அபிதா”
- சுஜாதாவின் “நைலான் கயிறு”
- அசோகமித்ரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு”
- பாலகுமாரனின் “காதல் வெண்ணிலா”
- ராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”
- கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானுடம்”
- ஜோ டி க்ரூஸின் “ஆழிசூழ் உலகு”
- பாலகுமாரனின் “அகல்யா”
- சம்பத்தின் “இடைவெளி”
- ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்”
- இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்”
சரித்திர நாவல்கள்:
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”
நாடகங்கள்:
மெரினாவின் “மாப்பிள்ளை முறுக்கு”
சோ ராமசாமியின் “சாத்திரம் சொன்னதில்லை”
சுஜாதாவின் “டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு”
ஆங்கிலப் புத்தகங்கள்:
John Carlin’s “Playing the Enemy”
Jane Austen’s “Pride and Prejudice”
Stuart Neville’s “Ghosts of Belfast”
Frederick Forsyth’s “Dogs of War”
சிறுவர் புத்தகங்கள்:
Roald Dahl’s “BFG”, “Enormous Crocodile”, “Matilda”, “Fantastic Mr. Fox”
Rudyard Kipling’s “Junglebook”
Calvin and Hobbes
R.L. Stevenson’s “Treasure Island”
அபுனைவுகள்:
சுந்தர ராமசாமியின் நினைவோடை சீரிஸ் – “ஜீவா”
யதுகிரி அம்மாளின் “பாரதி நினைவுகள்”
அ.கா. பெருமாளின் “சுண்ணாம்பு கேட்ட இசக்கி”
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
LikeLike
நன்றி! இனிய மகர சங்கராந்தி – பொங்கல் நல் வாழ்த்துகள்
LikeLike
சென்றாண்டை விட இந்தாண்டு நிறைய புத்தகங்கள் குறித்து எழுத வாழ்த்துகள். தங்கள் சிலிகான் ஷெல்ஃப் இலக்கியவட்டம் இன்னும் சிறக்கட்டும்.
LikeLike