அருணாவின் புத்தகக் கண்காட்சி அனுபவங்கள்

அமெரிக்காவில் இருக்கும்போது அருணாவை நினைத்து பெருமூச்சுதான் விட முடிகிறது! ஓவர் டு அருணா!

புத்தகக் கண்காட்சிக்கு 8-ஆம் தேதி போய் விட்டு வந்தேன். டிஸ்கவரி புத்தக கடையில் ஒரு புத்தகத்தை பாரதி மணி சார் வெளியிட்டார். அவருடன் போய்விட்டு சரியாக 15 நிமிடத்தில் அங்கு இருந்த கூட்டத்தில் அவரைத் தவறவிட்டேன். நாஞ்சில்நாடன் சார் அப்போதுதான் தமிழினியில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றார். பாரதி மணி சார் தமிழினி வசந்தகுமாரை அறிமுகம் செய்து வைத்தார். கடைக்கு வந்தவர்கள் எல்லாம் காவல்கோட்டம் இருக்கிறதா என கேட்ட வண்ணம் இருந்தார்கள். தீர்ந்து போயிருந்தது. பாரதி மணி சாரை தவறவிட்டு நான் தனியாகவே சுற்ற ஆரம்பித்தேன். ஞாயிறு மாலை என்றதால் பயங்கர கூட்டம்.

ஒரு திருவிழா போல் அங்கங்கே குடும்பத்துடன் உட்கார்ந்து சோளம் சாப்பிடுபவர்களே அதிகம் பேர். உயிர்மையில் பெரும்பாலும் சுஜாதா புத்தகங்களிலேதான் கூட்டம். கிழக்கில் அவர்களின் வெளியீடே பெரும்பாலும் இருந்தது. ஜடாயுவிற்காக அ. நீயின் கம்யூனிஸம் – பஞ்சம், படுகொலை, பேரழிவு என்ற புத்தகம் வாங்கினேன். அப்புத்தகம் நன்றாக விற்பது போல் தெரிந்தது.

பின் காலச்சுவடில் சில புத்தகங்கள் வாங்கினேன். அ.கா. பெருமாளின் சிவாலய ஓட்டம் எடுத்து தந்தவர் நல்ல ஆன்மிக புத்தகம் மேடம் என்று சொல்லி என்னை பயமுறுத்தினார். வானதியில் அம்மாவிற்காக சிவகாமியின் சபதமும், ராஜம் கிருஷ்ணனின் ஏதோ இரண்டு புத்தகங்களும் வாங்கினேன். கல்கியின் புத்தகங்கள் இன்றும் நிறைய பேரால் வாங்கப்படுவது கண்கூடாக தெரிகிறது.

எல்லா புத்தகங்களையும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கவிதா வெளியீடு வரை போனால் அ.மியின் மொத்த சிறுகதை தொகுப்புக்களும் விற்று போயிருந்தது.

சந்தியாவில் சென்று யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் இருக்கிறதா என விசாரித்தேன். அது இப்ப பதிப்புல இல்லைம்மா என யாரோ சொன்னார்கள். யாரென்று பார்த்தால் வண்ணதாசன். முந்தைய நாள்தான் அவருக்கும் வண்ணநிலவனுக்கும் அளிக்கப்பட்ட சாரல் விருதில் சந்தித்து இருந்தேன். சிறிது நேரம் புத்தக விழாவையும், பதிப்புக்களையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

நாஞ்சிலாரின் நாவல்கள் வாங்க விஜயா சென்றால் அவர்கள் பணம்தான் கொடுக்க வேண்டும் என்றார்கள். எல்லாவற்றையும் தீர்த்தாகி விட்டது. சொல்புதிது குழுமத்தில் இருக்கும், சென்னையில் வசிக்கும் செந்தில் குமரன் தேவன் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதாக text செய்து கொண்டே இருந்தவர் வந்து சேர்ந்தார். அவரிடம் பணம் வாங்கி விஜயாவில் புத்தகங்கள் வாங்கினேன். பின்னர் சாகித்ய அகாடமி கடையில் சென்று மேலும் சில புத்தகங்கள் வாங்கி விட்டு வெளியேறினோம்.

செந்தில் சொன்னார், கிடைக்க பெறாத புத்தகங்களை மட்டுமே கண்காட்சியில் வாங்க வேண்டும் என்றும், இல்லை என்றால் உடுமலையில் online-இலேயே வாங்கலாம் என. முதல் தடவை என்பதால் ஆர்வத்தில் வாங்கி விட்டு பின்னர் அதை பெங்களூர் வரை எடுத்தும் வர வேண்டி இருந்தது.

எஸ்.ரா உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார். சுற்றி நல்ல கூட்டம். எனக்கு கூட்டம், வெயில் எல்லாம் தாங்கவே முடியவில்லை. நானும் செந்திலும் ஒரு வழியாக ஒரு coffee shop-இல் சென்று தஞ்சம் அடைந்தோம். பாரதி மணி சார் கூப்பிட்டு எங்கம்மா இருக்க நானும் உன்னை ரொம்ப நேரமா தேடிண்டிருக்கேன் என்றார்!

நான் வாங்கிய புத்தகங்கள்:

 1. க்ரியாவின் தற்கால தமிழகராதி
 2. உயிர்த்தண்ணீர் – கண்மணி குணசேகரன்
 3. ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
 4. வண்ணநிலவன் கதைகள் தொகுப்பு – வண்ணநிலவன்
 5. நாவல் கோட்பாடு – ஜெ. மோ
 6. மிதவை – நாஞ்சில்நாடன்
 7. மாமிச படைப்பு – நாஞ்சில்நாடன்
 8. என்பிலதனை வெயில் காயும் – நாஞ்சில்நாடன்
 9. சிவாலய ஓட்டம் – அ.கா. பெருமாள்
 10. மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன் – தொகுப்பு – தியோடர் பாஸ்கரன்
 11. ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
 12. சில இறகுகள் சில பறவைகள் – வண்ணதாசன்
 13. ஒளியிலே தெரிவது – வண்ணதாசன்
 14. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
 15. சு. ரா – சிறுகதைகள் – முழுத்தொகுப்பு
 16. மாதொருபாகன் – பெருமாள் முருகன்
 17. யுகத்தின் முடிவில் – ஐராவதி கார்வே – தமிழில் – இராக. விவேகானந்த கோபால்
 18. இனி நான் உறங்கட்டும் – பி. கெ – பாலகிருஷ்ணன் – தமிழில் – ஆ. மாதவன்
 19. பருவம் – எஸ். எல். பைரப்பா – தமிழில் – பாவண்ணன்

பி.ஏ. கிருஷ்ணனின் கலங்கிய நதியை பாரதி மணி சாரும், ஆங்கில மூலமான Muddy River-ஐ நான் வாங்குவதாகவும் ஏற்பாடு. ஆங்கிலத்தில் காலச்சுவடில் கிடைக்கவில்லை. வேறு எங்கு கிடைக்கும் என தெரியவில்லை.

ஜெமோவின் அறம் தொகுப்பு கிழக்கில் நன்றாக விற்கிறது. அவருக்கு வாசலில் ஒரு பெரிய போஸ்டரும் வைத்திருந்தார்கள். ஆதவனின் காகித மலர்களும் வாங்கினேன்.

16 thoughts on “அருணாவின் புத்தகக் கண்காட்சி அனுபவங்கள்

 1. >>ஆங்கிலத்தில் காலச்சுவடில் கிடைக்கவில்லை. வேறு எங்கு கிடைக்கும் என தெரியவில்லை

  – You can get it in Flipkart (I heard their service is good and safe). Link to “The Muddy River” :http://www.flipkart.com/books/9380658568?_l=gWxQa0snNjHUHKJhnj_y0w–&_r=cG3%20QNhCMalNYu5r55fhxg–&ref=4b4570aa-f24c-4aa8-91fb-cbb96cc2c7c7

  Like

 2. ஆர். வி – உங்களை entice பண்ணி இங்க வர வைக்கத்தான் இந்த பதிப்பெல்லாம். அடுத்த வருடம் வந்துடுங்க. சேர்ந்தே போகலாம்.

  Like

 3. புத்தகக் கண்காட்சியை பார்த்த நிறைவு ஏற்பட்டது சற்று முன்கூட்டியே
  இந்த பதிவைப் படித்திருந்தால் புத்தகம் தேடி அலையும் கால விரயத்தை
  தவிர்திருக்கமுடியும், நன்றி

  Like

 4. // ஜடாயுவிற்காக அ. நீயின் கம்யூனிஸம் – பஞ்சம், படுகொலை, பேரழிவு என்ற புத்தகம் வாங்கினேன் //

  இந்தப் புத்தகத்தைப் படித்து விமர்சனமும் எழுதிவிட்டேன் –
  http://www.tamilhindu.com/2012/01/aravindan-neelakandan-communism-book-review/

  Like

 5. //சந்தியாவில் சென்று யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் இருக்கிறதா என விசாரித்தேன். அது இப்ப பதிப்புல இல்லைம்மா என யாரோ சொன்னார்கள். //

  புதிய பதிப்பு சந்தியாவிலேயே கிடைக்கிறதே. விலை 45/-ரூபாய்.

  //ஜெமோவின் அறம் தொகுப்பு கிழக்கில் நன்றாக விற்கிறது. //

  ”அறம்” தமிழினி வெளியீடு ஆயிற்றே…கிழக்கில் அதை விற்கிறார்களா என்ன?

  நான் பார்த்தவரை பலர் “காவல் கோட்டம்” ஆவலுடன் வாங்கிச் சென்றார்கள்.

  நிஜமாகவே புரிந்து, படிப்பார்களோ? 😉

  Like

 6. ரமணன்ஸ் – கிழக்கிலும் பார்த்ததாக தான் ஞாபகம். காவல் கோட்டம் படிப்பார்களா என தெரியாது. ஆனால் சாகித்ய அகாடமி விருது ஒரு நல்ல விளம்பரம். வாங்கியவர்களில் பாதி பேர் படித்தால் கூட நல்லது தான்.

  ஜடாயு – படித்து விட்டு சொல்கிறேன்.

  Like

 7. ஆர். வி – நீங்க வேற. அதுல பாதி நீங்களும் நானும் போட்ட பின்னூட்டம் தான். Thousand splendid suns க்கு வந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன். புத்தக அறிமுகமும் படிப்பும் தான் எனக்கு பிடிக்கிறது.

  Like

 8. அருணா! உன்னை அன்று புத்தக விழாவில் தவறவிட்டு, இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்….எங்கே இருக்கிறாய்?

  Like

 9. அருணா, நீங்க தொழிலுக்கு புதுசு, நிறைய எதிர்பார்க்கறீங்க. 🙂 நூறு பேர் படிச்சா ஒரு கமென்ட் வரும்… நாம் எல்லாம் என்ன பாரதி மணி சாரா?

  பாரதி மணி சார், ஒரு வேண்டுகோள். உங்கள் மாமனார் பற்றி கொஞ்சம் கொஞ்சம் எழுதி இருக்கிறீர்கள்; அவர் புத்தகங்களைப் பற்றியும் எழுதுங்களேன்! (எனக்கு அவரது படித்திருக்கிறீர்களா புத்தகம் பர்சனலாக மிகவும் முக்கியமானது)

  Like

 10. பாரதி மணி சார் – ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டீங்க! சுகாவோட புது புத்தகம் கிடைக்கல சார். உங்க கிட்ட இருந்தே ஓசி வாங்கிண்டு வந்துருக்கலான்னு இப்ப தோணறது.

  ஆர். வி – நீங்க சொல்றதும் சரி தான். ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச புத்தகத்த நாம சொன்னோன்னு யாராவது படிக்க மாட்டாங்களாங்கற நப்பாசை தான்!

  Like

 11. அன்புள்ள ஆர்வி:

  நீங்கள் கவனித்திருக்கலாம்….க.நா.சு.வை ஒரு மனிதராக, என் மாமனாராக நான் பார்த்து உணர்ந்ததை மட்டுமே இது வரை எழுதியிருக்கிறேன். அவரது இலக்கிய விமர்சனங்களைப்பற்றியோ, புத்தகங்களைப்பற்றியோ ஒரு வரி கூட எழுதியதில்லை. I scrupulously avoided it! More than my strength, I know my weaknesses!.அதிகமாக எழுத ஆரம்பித்தால், mera poth khul jaayegaa! என் சாயம் வெளுத்துவிடும். அது எனக்கு நன்றாகவே தெரியும்!

  அதைப்பற்றியெல்லாம் எழுத நிறையப்பேர் இருக்கிறார்கள். விளம்பரமேதுமில்லாமல் போன ஜனவரியிலிருந்து, 12 மாதங்களாக மாதமொரு முறை 40, 50 பேர் கூடி இலக்கிய விசாரம் நடத்தி கநாசு நூற்றாண்டுவிழாவை மனமாரக்கொண்டாடும் டி. லக்ஷ்மிபதி போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள். க.நா.சு.வை ‘கரைத்துக்குடித்தவர்கள்!’

  பாரதி மணி

  Like

 12. பாரதிமணி சார்,
  // அவரது இலக்கிய விமர்சனங்களைப்பற்றியோ, புத்தகங்களைப்பற்றியோ ஒரு வரி கூட எழுதியதில்லை //
  அதனால்தான் கேட்டுக் கொண்டேன். 🙂 சாயம் வெளுத்துவிடும் என்று நீங்களே சொன்னால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது? 🙂 By the way, இ.பா.வின் தந்திர பூமியின் ஆல் இன் ஆல் ஹீரோவுக்கு நீங்கள்தான் inspiration என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது உண்மைதானா?

  // கநாசு நூற்றாண்டுவிழாவை மனமாரக்கொண்டாடும் டி. லக்ஷ்மிபதி போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் // பாருங்கள், தெரியக் கூட மாட்டேன் என்கிறது. உண்மையில் இது அவருடைய நூற்றாண்டு என்பதே தற்செயலாகத்தான் தெரிந்தது. விழா பற்றி எங்காவது தகவல் கிடைக்குமா?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.