சுஜாதாவின் “மீண்டும் ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)

கணேஷுக்கு பத்து மணி வாக்கில் ஒரு ஃபோன் வருகிறது. பேசுவது பெரிய பணக்காரத் தொழிலதிபர். உன் உதவி வேண்டும், உடனடியாக என்னை வந்து பார், என்னைக் கொல்ல சதி நடக்கிறது என்கிறார். கணேஷ் பதினோறு மணிக்குப் போவதற்குள் அவர் இறந்து கிடக்கிறார். அவரது சொத்துக்கு நாலைந்து வாரிசுதாரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் அருணாசலம் – இவருக்கு திருமணம் செய்து கொள்ள இருக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்தவன் – மேல் விழுகிறது. அருணாசலம் ஃபோன் வந்த நேரத்துக்கு அருகில் வீட்டுக்கு வந்து போயிருக்கிறான். அதற்கப்புறம் வேறு யாரும் வரவில்லை. பிடிபட்டதும் அப்போதே அவர் இறந்து கிடந்தார், தான் பயந்து ஓடி வந்துவிட்டேன் என்று அழுகிறான். அருணாச்சலத்தின் கேசை கணேஷ் எடுத்துக் கொள்கிறார். Obviously, அருணாசலம் நிரபராதி. யார் குற்றவாளி, எப்படி கொலை நடந்தது என்று கண்டுபிடிப்பதுதான் கதை.

சிம்பிளான, யூகிக்கக்கூடிய முடிச்சுதான். ஆனால் சுவாரசியமாக எழுதி இருக்கிறார்.

இந்த குறுநாவல் வெளியான காலம் மாத நாவல்களின் பீக் என்றுதான் சொல்ல வேண்டும். ராணிமுத்து தவிர நாவல்கள் சகாய விலையில், சுலபமாக எல்லா கடைகளிலும் கிடைப்பது அப்போதெல்லாம் அபூர்வம். ராணிமுத்துவின் பாப்புலாரிட்டிக்கே அதில் வந்த ஆயிரம் ரூபாய் பரிசுப் போட்டியும் ஒரு முக்கிய காரணம். அதிலும் பாதி நாவல்களை சுருக்கிப் போடுவார்கள். அப்புறம் பி.டி. சாமி, அமுதா கணேசன் போன்றவர்கள் எழுதிய நாவல் எல்லாம் வரும். இந்த நிலையில் மாலைமதி என்ற பேரில் மாதாமாதம் சுவாரசியமான வணிக நாவல்கள் – சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், சவீதா, மகரிஷி மாதிரி பலரும் எழுதியவை – வர ஆரம்பித்தது ஒரு small scale புரட்சிதான். அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலியே (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை), மேற்கே ஒரு குற்றம் உள்ளிட்ட சில பல கணேஷ்-வசந்த் நாவல்கள் நினைவு வருகின்றன. எழுபதுகளின் இறுதியில் வர ஆரம்பித்தன என்று நினைக்கிறேன். ஒரு ரூபாயோ என்னவோ விலை. அது எனக்கு சின்ன விஷயம் இல்லை. எனக்கு அப்போதெல்லாம் வருஷத்துக்கு மூன்று ரூபாய் பாக்கெட் மணி கிடைக்கும். அதை அனேகமாக கால் இறுதி, அரை இறுதி, ஆண்டு இறுதி பரீட்சைகள் முடிந்த அன்று ரெயில்வே காண்டீனில் இரண்டு மசாலா தோசை சாப்பிட செலவழிப்பேன். சைதாப்பேட்டையிலிருந்து தாம்பரம் வரைக்கும் உள்ள ரெயில்வே காண்டீன்களில் எங்கே மசாலா தோசை நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் குழுவில் பெரிய ஆராய்ச்சி நடந்திருக்கிறது. (மகா மோசம் – மீனம்பாக்கம் ஸ்டேஷன். பெஸ்ட் – தாம்பரம்)

NHM தளத்தில் கிடைக்கிறது. விலை 50 ரூபாய்.

என்னைப் போல நாஸ்டால்ஜியா நினைவுகள் (புத்தகத்தைப் பற்றி எழுதியதை விட மசாலா தோசை பற்றிதான் நிறைய இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.) இல்லாதவர்களும் படிக்கலாம். கணேஷ்-வசந்த் ரசிகர்கள் மிஸ் செய்யக்கூடாத புத்தகம்.

3 thoughts on “சுஜாதாவின் “மீண்டும் ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)

  1. சுஜாதாவின் பல கதைகள் படித்து மறந்து போய் விட்டது. நீங்கள் மீண்டும் ஞாபகப்படுத்துகிறீர்கள். இதைக் கூட முன்பே படித்ததாக ஞாபகம். அவர் எழுதி குமரி பதிப்பகம் பதிப்பித்த ஆரம்ப கால நூல்களில் சில இன்னமும் அச்சில் வரவில்லை என்றே நினைக்கிறேன். தனியாக லிஸ்ட் பொட்டு வைத்திருந்தேன். எங்கோ தொலைந்து போய் விட்டது. தேசிகன் வைத்திருக்கலாம்.

    சுஜாதாவின் அந்த ரொமாண்டிச நடைக்காகவே மீண்டும் படிக்கலாம் (பிற்காலத்தில் அவர் எழுதிய இதன் பெயரும் கொலை மாதிரி புஸ்தகங்கள் செம போர்)

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.