லலிதாராமின் “துருவ நட்சத்திரம்” – படிக்க விரும்பும் புத்தகம்

லலிதாராமின் இசை மேதைகள் பற்றிய எழுத்துகள் மிகவும் முக்கியமானவை. இவை புகழ் பாடும் hagiographies என்ற நிலையைத் தாண்டுவதில்லைதான். ஆனால் முக்கியமான ஆவணங்கள். அவரைப் போன்ற மகானுபாவர்கள் இல்லாவிட்டால் மான்பூண்டியா பிள்ளை என்ற பேரைக் கூட கேட்டிருக்கமாட்டேன். அவருக்கு ஒரு ஜே போட்டுவிடுகிறேன்!

கல்கியில் வந்த நூல் அறிமுகத்தை (புலிக்கால் தேசிகன் என்பவர் எழுதி இருக்கிறார்) அனுப்பி வைத்த நண்பர் ஸ்ரீனிவாசுக்கு நன்றி!

இசை ரூபத்தை எழுதுவது எளிதல்ல

கர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளை என்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா. அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம்.

மிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய விவகாரங்களை அறிந்தோர், அறியாதோர் என இருசாரார் மனத்தையும் கொள்ளை கொண்ட மகா கலைஞன் பழனி சுப்புடு. இந்த நாத மயமான லயமயமான குண ரூப (abstract) உலகை எழுத்தில் எழுதிக் காட்டுவது எளிதல்ல. இத்தகைய சவாலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார் லலிதாராம். இசைக் கலைஞனது வரலாற்றினூடே அவனது பாட்டினை அல்லது வாசிப்பை, தனியாக அவற்றுக்கே உரிய சங்கீத நுட்பங்களுடன் விளக்கி அவற்றை ஆவணப்படுத்துவதை லலிதாராம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இது தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.

16 அத்தியாயங்கள், 224 பக்கங்களில் புதுக்கோட்டைப் பள்ளியின் மூலக் கலைஞர்கள் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை ஆகியவர்களின் குணச்சித்திரங்களைப் புனைகதை உத்திகளுடன் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மிருதங்க மேதை முருகபூபதி பற்றிய தனி அத்தியாயமும், பழனி சுப்புடுவின் நாம் அறியாத முகங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. போதும்… இனி வளர்த்தப் போவதில்லை. வாங்கிப் படித்துப் பாருங்கள்! சுப்புடுவினது மிருதங்க கும்காரமும் ரீங்காரமும் உங்கள் காதுகளில் நிச்சயம் கேட்கும்!

– துருவ நட்சத்திரம், லலிதா ராம், சொல்வனம் பதிப்பகம்,விலை: ரூ 150/

தொடர்புடைய சுட்டிகள்:
லலிதாராமின் தளம்
புத்தகத்திலிருந்து ஒரு excerpt
மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை, முருகபூபதி பற்றி லலிதாராம்
லலிதாராமின் ஜிஎன்பி புத்தகம்

3 thoughts on “லலிதாராமின் “துருவ நட்சத்திரம்” – படிக்க விரும்பும் புத்தகம்

  1. நான் வாங்க வேண்டுமென்று நினைத்து இரண்டாம் முறை சென்றும் தவற விட்ட புத்தகம். நல்ல வேளையாக “எல்லார்வி” எழுதிய இசை மணிகள் தொகுப்பு கிடைத்தது. அதில் ”பழனி சுப்புடு” பற்றிய கட்டுரை இருக்கிறது. நியூபுக்லேண்ட்ஸ் செல்லும் போது “துருவ நட்சத்திரத்தை” வாங்க வேண்டும். லலிதா ராமின் ஜி.என்.பி பற்றிய நூலையும் (விகடன் பிரசுரம்) படித்திருக்கிறேன். மிகச் சுவையாக எழுதியிருப்பார்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.