Skip to content

ஜெயமோகனின் “அவதாரம்” (பிடித்த சிறுகதை)

by மேல் பிப்ரவரி 1, 2012

அவதாரம் உக்கிரமான சிறுகதை. முதல் இரண்டு பாராவும் மெதுவாகப் போகிறது. ஆசீரான் கதைக்குள் வந்ததுமே சூடு பிடிக்கிறது. ரவுடிகளின் டெக்னிக்குகள் – காலுறச்சு நிற்பது, உடலைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, பார்வை, இடது கைப்பழக்கம் என்றெல்லாம் விவரித்து அசத்துகிறார்.

வேறு எங்கோ போவது போல நடந்த ஆசீரான் சட்டென்று பிரபாவின் பின்பக்கத்தைப் பற்றி ஒரு அமுக்கு அமுக்கினான். அவள் ‘ச்சீ” என்று சீறியபடி திரும்ப அப்படியே அள்ளிப் பிடித்து மார்பை அள்ளிக் கசக்கினான்

என்று சர்வசாதாரணமாக ஒரு அநீதியை இரண்டு வரியில் எழுதிச் செல்கிறார்.

நேர்மாறாக பயந்தாங்கொள்ளி கோலன் அப்பு. ஒரு கால் வேறு ஊனம். பிரபாவின் சகோதரன். பிரபாவுக்கு நடந்ததைக் கேட்டு அவன் ஆசீரானோடு மோத வரும்போது நீ என்ன செய்ய முடியும் என்றுதான் தோன்றுகிறது.

கதையின் உச்சக்கட்டமாக அந்த சண்டை. சண்டை கிண்டை என்றெல்லாம் சொன்னால் சரிப்படவில்லை. போர், யுத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நுணுக்கமாக விவரிக்கப்படும் வன்முறை.

ஜெயமோகனின்வாழ்விலே ஒரு முறை” என்ற சிறுகதைத் தொகுப்பில்தான் இந்தக் கதையை முதன்முதலாகப் படித்தேன். எப்போது எழுதப்பட்டது என்று தெரியவில்லை. சிறுகதையைப் பதித்திருக்கும் தமிழ் தொகுப்புகள் தளத்தின் ஒருங்கிணைப்பாளர் சிங்கமணிக்கு ஒரு ஜே!

என் anthology-யில் இடம் பெறும் சிறுகதை. கட்டாயம் படித்துப் பாருங்கள்.

தொடர்புடைய சுட்டி:
அவதாரம் சிறுகதை

Advertisements
6 பின்னூட்டங்கள்
  1. Singamani permalink

    Thank you so much for your appreciation………….. will do better thanks for visit………….

    Like

  2. Singamani permalink

    ஆர்.வி.,

    தமிழ் தொகுப்புகள் தளத்தை புதிய தளத்திற்கு மாற்றியுள்ளேன் பார்த்தீர்களா.

    Like

    • சிங்கமணி, புதிய தளம் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்!

      பொதுவாக தளம் மாறும்போது broken links பெரிய பிரச்சினை. அது இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அது பெரிய உதவி!

      Like

      • Singamani permalink

        நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்……

        Like

  3. அருணா permalink

    ஆர். வி – இக்கதை இதற்கு முன் படித்ததில்லை. இது anthology சேர்க்கும் அளவிற்கு என்ன இருக்கிறது என புரியவில்லை. இதை விட உக்கிரமான மிக சிறந்த கதைகளை ஜெ.மோ எழுதி இருக்கிறார் என்பது என் எண்ணம். ஒரு வன்முறையும் அதன் விளைவாக வேறு ஒரு வன்முறையும் நுட்பமாக சொல்லபட்டிருக்கிறது. ஆனால் ஒரு சிறுகதையாக எனக்கு நீங்கள் சிலாகிக்கும் அளவு ஏனோ பிடிக்கவில்லை. கூட கூட () வரும் சில உபரி தகவல்கள் கதை ஓட்டத்தை சிதற வேறு அடித்தது என நினைத்தேன். என் புரிதலின் போதாமையாக கூட இருக்கலாம்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: