சி. சுப்ரமணியத்தின் “திருப்புமுனை” – படிக்க விரும்பும் புத்தகம்

என்னை fascinate செய்யும் தலைவர்கள் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான். சி. சுப்பிரமணியம் அவர்களில் ஒருவர். அவர் தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார் என்ற விஷயமே இந்தப் பதிவைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. திருப்புமுனை என்று பேராம். படித்தவர்கள் யாராவது இருந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன்!

புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கே பதித்திருக்கிறார்கள் – பகுதி 1, பகுதி 2.

முல்லைப் பெரியார் பற்றி இத்தனை பிரச்சினை இருக்கும் இன்றைக்கு சி. சுப்பிரமணியம் பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தை கேரளத்தின் ஒத்துழைப்பை திறமையாகப் பெற்று செயல்படுத்திய இந்த சம்பவம் “அந்தக் காலம் மாதிரி வருமா” என்று ஏங்க வைக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகத்திலிருந்து சில பகுதிகள் – பகுதி 1, பகுதி 2
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனைப் பற்றி சில பதிவுகள்
காமராஜைப் பற்றி சில பதிவுகள்

8 thoughts on “சி. சுப்ரமணியத்தின் “திருப்புமுனை” – படிக்க விரும்பும் புத்தகம்

 1. தன்னுடன் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றபின்னும் தனக்கு இணையாக cs -ஐ காமராஜ் நடத்தினார்.rv யும் cs -ம் காமராஜர் வழிகாட்டலில் தமிழ்நாட்டில் கல்வி,தொழில் மற்றும் விவசாய புரட்சிகளை செய்தனர்.rv பல இடங்களில் காமராஜர் எங்களுக்கு கொடுத்த அதிகாரத்தினால்தான் இவையெல்லாம் சாத்தியமாயிற்று என்று நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.ஆனால் cs அவர்களோ தன்னுடைய சுயசரிதையில்,காமராஜருக்கு கல்வி அறிவோ,நிர்வாக திறனோ இல்லை,அதனால்தான் எங்களை மந்திரிசபையில் சேர்த்துகொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்{பக்கம் 274 திருப்புமுனை}.இந்நூல் 1962 -ம் ஆண்டோடு முடிகிறது,இல்லாவிட்டால் இவர் அரூர் பாராளுமன்ற இடைதேர்தலில் வாங்கிய அடியும்,நாஞ்சில் மனோகரன்,சஞ்சய் காந்தி போன்ற அரசியல் பொறுக்கிகளிடம் இவர் பட்ட அவமானமெல்லாம் எழுதவேண்டிவந்திருக்கும்.

  Like

  1. சி எஸ்ஸுக்கும் காமராஜுக்கும் கொஞ்சம் பனிப்போர் இருந்திருக்கும் போலத் தெரிகிறது. தகவல்களுக்கு நன்றி, விஜயன்! இதையும் பாருங்கள். http://koottanchoru.wordpress.com/மதிப்பீடுகள்/ஆர்வி-பக்கம்/ http://koottanchoru.wordpress.com/மதிப்பீடுகள்/3714-2/

   Like

 2. இரண்டு சமமான மனிதர்களுக்கிடையே நடப்பதுதான் போர்,ஒருவேளை ராஜாஜிக்கும் காமராஜருக்கும் நடந்ததுவேண்டுமானால் போர் என்று ஒத்துக்கொள்ளலாம்,CS க்கு இருந்தது எல்லாம் கல்வி கற்றோம் என்ற கர்வமும்,ஆதிக்க சாதி மனோபாவமும்தான்.காமராஜர் மறைந்த போது நீதியரசர் V .S .கிருஷ்ணா அய்யர் காமராஜரைப்பற்றி சொன்னது இப்பொழுது நினைவு படுத்திகிறேன்,:A COMMONMAN’S MAN WITH AN UNCOMMON COMMONSENSE.

  Like

  1. விஜயன், சிஎஸ்ஸைப் பற்றி எனக்கு மேலோட்டமான ஒரு பிம்பம்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் சொல்வது கொஞ்சம் அதிர்ச்சி தருகிறது.

   Like

 3. காமராஜருக்கும் சி.சுப்ரமணியத்துக்கும் நிறையவே நேரடி எதிர்ப்பு இருந்தது. ஆனால் அவை நேரடியானதாகவும், அரசியல் சார்ந்ததாகவும் கீழ்தரமற்றதாக இல்லாமலும் இருந்தது. சி.சுப்ரமணியம் ராஜாஜியை பின் பற்றி வந்தவர். காமராஜர் சத்தியமூர்த்தியை பின் பற்றி வந்தவர். ராஜாஜியும் சத்தியமூர்த்தியும் பரம எதிரிகள். சி.சுப்ரமணியம் ஓரளவு தேசியவாதி. ஆனால் இந்தி பிரச்சார சபாவுக்கு தமிழக தலைமை வகித்தாலும் கட்டாய இந்தி திணிப்பை தடுத்ததில் முக்கிய பங்காற்றியவர். அது பற்றியும் இன்னோரு பதிவிட்டிருக்கிறேன்.

  காமராஜரை எதிர்த்து கட்சி தேர்ததில் தோற்றாலும், காமராஜர் அவரது திறமையை மதித்து அவருக்கு தனது அமைச்சரவையில் முக்கிய பதவிகளை கொடுத்தார். அது மட்டுமன்றி நடுவண் அரசில் முக்கிய அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்தார். இந்தியா உணவுக்காக வெளி நாடுகளை கையேந்திய போது, உணவு அமைச்சராக எவருமே வர பயந்த போது, சி.சுப்ரமணியம் உணவு அமைச்சர் பதவியை பெற்று பசுமை புரட்சியை நிர்வாக ரீதியாக குறைந்த காலத்தில் திறமையாக செயல்படுத்தி வெற்றியை ஈட்டினார்.

  அவருடைய புத்தகத்தின் தமிழ் பதிப்பு வெளியில் கிடைக்கவில்லை. நான் வைத்திருப்பது, சி.சுப்ரமனியம் அவர்கள் வைத்திருந்த சொந்த புத்தக காப்பி.தற்போது அவருடைய மகன் புத்தகத்தை மேலும் அதிக காப்பி வெளியிட முயன்று வருகிறார். நியூ சென்ச்யூரி பதிப்பகம் அவருடைய புத்தகத்தை வெளியிட்டிருந்தது. அவருடைய புத்தகத்தின் இரண்டாவது பகுதி எனக்கு கிடைக்கவேயில்லை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.