Skip to content

மயிலிராவணன் கதை

by மேல் மார்ச் 17, 2012

நவராத்திரி படம் பார்த்திருக்கலாம். அதில் ஒரு நாடகக் காட்சி வரும். “ஆஹா! பளபளா! இவள் இடையழகும் நடையழகும் உடையழகும் என் நெஞ்சை விட்டகலா நிற்கிறதே!” என்கிற மாதிரி நடையில் வசனம் பேசி நடிப்பார்கள். அனேகமாக சங்கரதாஸ் சுவாமிகள் மாதிரி யாராவது எழுதிய நாடக வசனமாக இருக்கும். கொஞ்சம் கதா காலட்சேபப் பாணியை நினைவுபடுத்தும், ஆனால் பிராமண வழக்கு இல்லாத நடை.

Mayiliravanan Kathaiசமீபத்தில் ஏறக்குறைய அதே மாதிரி நடையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் – “மயிலிராவணன் கதை” – இணையத்தில் கிடைத்தது. எழுதியவர் பெயர், எந்த வருஷம் வெளிவந்தது என்று தெரியவில்லை. B. ரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் “பெரிய எழுத்து” பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். சில படங்களும் உண்டு. கொஞ்சம் தஞ்சாவூர் பாணியை நினைவுபடுத்தும் அந்த ஓவியப் பாணியை நான் பெரிய எழுத்து புத்தகங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

உண்மையில் மயில்ராவணன் தொன்மம் வெறும் சாகசக் கதை மட்டுமே. ஆனால் எனக்கு எப்போதுமே தொன்மங்களின் மீது கொஞ்சம் பித்து உண்டு. அதுவும் அந்த நடைக்கு ஒரு ஸ்பெஷல் charm இருக்கிறது. நான் ரசித்துப் படித்தேன்.

ராவணனின் ஒன்றுவிட்ட தம்பியும், மாயாவியும், பாதாள இலங்கையின் மன்னனுமான மயில்ராவணன் ஒரு இரவில் ராம லட்சுமணர்களை மயக்கத்தில் ஆழ்த்தி, கடத்திப் போய் காளிக்கு பலி கொடுக்க ஏற்பாடு செய்கிறான். மயில்ராவணனைக் கொல்வது எளிதல்ல, அவன் உயிர் ஐந்து வண்டுகளில் இருக்கிறது. ஹனுமான் பல வீர சாகசங்களை நிகழ்த்தி, அந்த வண்டுகளையும் மயில்ராவணனையும் கொன்று, ராம லட்சுமணர்களை மீட்பதுதான் கதை. இந்தத் தொன்மத்தில்தான் பிரம்மச்சாரியான ஹனுமான் தனக்கும் ஒரு மகன் – மச்சவல்லபன் – இருப்பதை அறிகிறார்.

தமிழ்நாட்டில்தான் மயில்ராவணன் என்று பெயர் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டுக்கு வெளியே அஹிராவணன். மச்ச்சவல்லபன் பெயரும் மகரத்வஜன் என்று மாறிவிடுகிறது. இருபது வருஷங்களுக்கு முன்னால் இதிகாசங்கள், புராணங்கள், எல்லாவற்றையும் என்னை விட ஒரு படி அதிகமாகவே கரைத்துக் குடித்திருந்த என் ஆந்திர நண்பன் முஹம்மது ஃபர்ஹாத் ஜாமாவிடம் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்போது ஒரே தொன்மத்தை வேறு வேறு பெயர்களுடன் இருவரும் அறிந்திருக்கிறோம் என்று தெரிந்த கணம் படுகுஷியாக இருந்தது. சரி முன்னூறு ராமாயணம் இருக்கிறது, பேர் மாற்றம் எல்லாம் ஒரு பெரிய விஷயமா?

என் மாதிரி தொன்மப் பித்தோ, இல்லை இந்த நடையில் விருப்பமோ இல்லாதவர்களுக்கு, இதெல்லாம் படிக்க லாயக்குப்படாது. நானோ புத்தகம் கிடைத்தால் வாங்கிவிடுவேன்.

தொடர்புள்ள சுட்டிகள்:
மயிலிராவணன் கதை – மின்னூல்

Advertisements

From → Legends

5 பின்னூட்டங்கள்
 1. vijayan permalink

  டாக்டர்.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “முச்சந்தி இலக்கியம்”படித்து பாருங்களேன்.

  Like

  • விஜயன், “முச்சந்தி இலக்கியம்” படித்திருக்கிறேன். பிடித்த புத்தகம். எப்போதாவது அதைப் பற்றி எழுத வேண்டும்.

   Like

 2. ரெங்கசுப்ரமணி permalink

  ஸ்ரீராம நவமி ஸ்பெஷல் போல.

  இந்த கதையை எனது பக்கத்து வீட்டு பாட்டி மடியில் தலைவைத்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டு கேட்டது ஞாபகம் வருகின்றது.

  இந்த கதை சொல்லும் முறையும் பிரமாதம், ஒரு 50, 60 வருடத்திற்கு முன்பு இருந்த நடை. ஏதோ தெருக்கூத்து, நாடகம் (நவராத்திரயில் வரும் நாடகம்) பார்ப்பது போல இருக்கின்றது.

  முதல் பக்கம் வரை மச்சகர்ப்பனாக இருந்தவன் அடுத்த பக்கத்தில் எப்படி மச்சவல்லபனாக மாறினான் எனத்தெரியவில்லை.

  இதைப் படிக்கும் போது வரும் ஒரே வருத்தம், நமது குழந்தைகளுக்கு இந்த கதையெல்லாம் எப்படி போய்ச்சேரும். இப்போதைய பாட்டிகளுக்கே இந்த கதையெல்லாம் தெரியுமோ என்னவோ.

  Like

  • // இதைப் படிக்கும் போது வரும் ஒரே வருத்தம், நமது குழந்தைகளுக்கு இந்த கதையெல்லாம் எப்படி போய்ச்சேரும். இப்போதைய பாட்டிகளுக்கே இந்த கதையெல்லாம் தெரியுமோ என்னவோ. //

   ரெங்கசுப்ரமணி, நாம் சொல்ல வேண்டியதுதான்…

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: