Skip to content

எழுத்தாளர் அகஸ்தியன்/கடுகுவுக்கு வயது எண்பது!

by மேல் ஏப்ரல் 4, 2012

சின்ன குளறுபடி. இது விஷ்ணுபுரம் சீரிசுக்கு அப்புறமாக வெளியிட இருந்த பதிவு. சீரிஸில் இது நெருடுவதாகத் தோன்றலாம், மன்னிக்கவும்.

பி.எஸ். ரங்கநாதன் என்கிற அகஸ்தியன் என்கிற கடுகு எழுதிய தொச்சு-கமலா கதைகளை நான் சிறு வயதில் ரசித்திருக்கிறேன். இப்போதும் அவரது தளத்தில் அவ்வப்போது படிக்கும்போது புன்னகைக்கிறேன்.

அகஸ்தியன் நான் படித்த செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் படித்தவர். எனக்கு ஒரு இருபத்தைந்து வருஷம் சீனியராக இருப்பார். அவருடன் கூடப் படித்தவர்கள் பிரபல இயக்குனர் ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும். நான் படிக்கும்போது ஸ்ரீதர் படித்த பள்ளி என்று பெருமை அடித்துக் கொள்வார்கள். அப்போது அகஸ்தியன் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தாலும் இவரும் படித்த பள்ளி என்று தெரியாமல் போய்விட்டது.

அவர் ஃப்ரீமான்ட் பக்கம் போன வருஷம் வந்திருந்தபோது சந்திக்க முடியாமல் போய்விட்டது. சரி திரும்பி வராமலா போய்விடுவார்?

அவருடைய திவ்ய பிரபந்த உரை மிகவும் சிறப்பானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சென்னை போகும்போது வாங்க வேண்டும். “கமலாவும் நானும்” புத்தகமும்தான்.

அவருக்கு எண்பது வயதாகிவிட்டதாம்! நூறு வயது வாழ வாழ்த்துக்கள்!

கடுகுவின் எழுத்து பொழுதுபோக்கு மட்டும்தான். படித்துவிட்டு மறந்துவிடக் கூடியவைதான். என் கண்ணில் அப்படிப்பட்ட எழுத்துகள் தேவையானவையே. அதுவும் நல்ல டீசன்டான நகைச்சுவை எழுத்து என்பது தமிழில் மிக அபூர்வம், கல்கி, எஸ்.வி.வி., தேவன், நாடோடி, துமிலன், சாவி போன்றவர்கள் ஆரம்பித்து வைத்த பாரம்பரியத்தை தொடர்ந்தவர் இவர். என் கண்ணில் கல்கி, தேவன், எஸ்.வி.வி. ஆகிய மூவருக்கும் அடுத்த இடத்தில் இருக்கிறார். இந்த எழுத்துப் பாணி மறைந்து கொண்டிருப்பது நமக்கு நஷ்டமே.

நண்பர் உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஹிந்துவில் வந்த இந்த கட்டுரை சுட்டியை அனுப்பி இருந்தார், அவருக்கு நன்றி!

தொடர்புடைய சுட்டிகள்:
கடுகுவின் தளம்
ஹிந்து கட்டுரை

Advertisements

From → Tamil Authors

11 பின்னூட்டங்கள்
 1. அன்புள்ள ஆர்வி,

  ‘கமலாவும் நானும்’ கூடுதல் பிரதிகள் சில என்னிடம் உள்ளது. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கடுகு அன்புடன் கொடுத்தது. நீங்கள் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

  ஒரு சிறிய திருத்தம்…

  >>அகஸ்தியன் நான் படித்த செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் படித்தவர். எனக்கு ஒரு இருபத்தைந்து வருஷம் சீனியராக இருப்பார்.

  அவர் உங்களுக்கு 35 வருடம் சீனியர் என்று நினைக்கிறேன் 🙂

  Like

  • நன்றி ஸ்ரீனிவாஸ், உங்களை அடுத்த முறை சந்திக்கும்போது வாங்கிக் கொள்கிறேன்…

   Like

 2. ஆர்வி… ஆச்சரியமான தகவல் எனக்கு – நீங்களும் செயிண்ட் ஜோசப்பில் படித்தவர் என்பது ! எந்த வருடம் ? எத்தனை வருடம் ?நான் பிறந்து வளர்ந்து படித்து வேலைக்குப் போனதெல்லாம செங்கல்பட்டிலிருந்துதான். அதுதான என் சொந்த ஊர். எங்கள் குடும்பத்தினர் அத்தனை பேரும் செயிண்ட் ஜோசப், செயிண்ட் மேரீஸ் மாணவர்கள். நான் பல சந்தர்ப்பங்களில் நம் பள்ளியைப் பற்றி எழுதியிருக்கிறேன். இன்று நான் என்னவாக் இருக்கிறேனோ அதில் நம் பள்ளியின் பங்கு மிகப்பெரியது. செங்கல்பட்டில் உங்கள் வீடு எங்கே இருந்தது ? நாங்கள் சின்ன மணியக்காரத்தெரு, பிராமணத்தெரு, கவரைத்தெரு, பின்னர் வேதாசலம் நகர் என்று பல இடங்களில் இருந்திருக்கிறோம். ஆனந்த விகடனில் தொடராக வெளியான என் தவிப்பு நாவலில் செங்கல்பட்டு ஒரு முக்கிய பாத்திரமாக வருகிறது.

  Like

  • ஞானி சார், இன்னொரு செயின்ட் ஜோசஃப் மாணவரை சந்திப்பது பெரிய சந்தோஷமாக இருக்கிறது. இப்போது உங்கள் தவிப்பு நாவலைத் தேட வேண்டும்.

   79-81 காலகட்டம், ப்ளஸ் டூ அங்கே படித்தேன். கூடுவாஞ்சேரியில் இருந்து ரயிலில் வந்து போவேன். கடைசி ஆறு மாதம் எங்கள் ஃபிசிக்ஸ் ஆசிரியர் நடராஜனோடு சின்ன மணியக்காரத் தெருவில் தங்கி இருந்தேன். அப்போது அங்கே எம்.ஈ. ஸ்ரீரங்கன் என்பவர் உதவி தலைமை ஆசிரியர். கே.வி. ஸ்ரீனிவாசன், ஜெயசீலன், ராகவன், தேவசியா, அரங்கநாதன், வேணுகோபால், சினிமாவுக்கு அவ்வப்போது பாட்டு எழுதிக் கொண்டிருந்த சிதம்பரநாதன் (ஏரிக்கரை பூங்காத்தே) ஆசிரியர்கள்.

   எனக்கு ஸ்கூலை விட்டால் அப்போது அங்கிருந்த நான்கு தியேட்டர்களைத்தான் நன்றாகத் தெரியும். 🙂 அங்கமுத்து அப்போதெல்லாம் “புது” தியேட்டர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த பீனா ஹோட்டலில் ராத்திரி பதினோரு பன்னிரண்டு மணிக்கு ரெகுலராக டீ குடிப்போம். 🙂

   Like

 3. கடுகு அகஸ்தியனின் சகோதரர் ஜகந்நாதன் ( வழக்கறிஞர்) என் நண்பர். இருவரும் நாடகப்பிரியர்கள். பழைய மாணவர் சங்கத்தில் கொஞ்ச நாள் ஒன்றாக வேலை செய்தோம்.

  Like

 4. ஞாநியின் ‘தவிப்பு’ – நாவல் விமரிசனம்
  http://vinavu.wordpress.com/2008/12/19/thavib2/

  தவிப்பு:
  ஆனந்த விகடனில் 1998ல் வெளியான தொடர்கதை – நாவல். முதல் வெளியீடு: அறிவாலயம் சென்னை 14. இரண்டாம்பதிப்பு: விகடன் பிரசுரம். ஆகஸ்ட் 2007. மூன்றாம் பதிப்பு: ஞானபாநு வெளியீடாக டிசம்பர் 2010-ல்.

  Like

 5. ஆர்வி… எம்.ஈ. ஸ்ரீரஙகன்தான் சித்ராலயா கோபுவின் அண்ணன். அவர், கே.வி.சீனிவாசன், ஜீ.வேணுகோபால் ஆகியோர்தான் என்னை நாடகக்காரனாக்கினவர்கள். தேவசியாதான் ஆங்கில இலக்கியம் படிக்கக் காரணமானார். அண்மையில் குரோம்பேட்டையில் எங்கள் பரீக்‌ஷா குழு நாடகம் நடித்தபோது அந்தப்பகுதியில் கே.வீ.சீனிவாசன் குடியிருப்பதைஅறிந்து அவரைக் கண்டுபிடித்து நாடகம பார்க்க வரச் செய்தோம். அந்த மகிழ்ச்சியைப் பற்றி என் ஓ பக்கங்களில் எழுதியிருக்கிறேன். நீங்கள் என்னை விட பத்து வருடமாவது இளையவராக இருக்க வேண்டும். நான் பதினோராவது என்பது எஸ்.எஸ்.எல்.சியாக இருந்தபோது அதை முடித்த வருடம் 1969.

  Like

  • ஞானி சார், இத்தனை வருஷம் கழித்துத்தான் எம்.ஈ.எஸ். சார் சித்ராலயா கோபுவின் அண்ணா என்று தெரிகிறது! எம்.ஈ.எஸ்., தேவசியா இருவரும் எங்களுக்கு ஆங்கில ஆசிரியர்கள். கே.வி.எஸ்.தான் எனக்கு கணக்கு ஆசிரியர். ஆனால் இவர்கள் யாரும் பாடப் புத்தகத்துக்கு வெளியே போகவில்லை. பெரிய தாக்கம் என்பது ஃபிசிக்ஸ் ஆசிரியர் நடராஜனும் (சொந்தமாக யோசிப்பதை ஊக்குவித்தவர்) பயாலஜி ஆசிரியர் ஜெயசீலனும் (எதிர்த்துப் பேசினால் காது கொடுத்துக் கேட்பார்.)

   எனக்குத் தெரிந்த செங்கல்பட்டு இன்னும் இருக்க வாய்ப்பில்லை. எனக்கு இன்னும் பல வருஷங்கள் தெரிந்திருந்த கூடுவாஞ்சேரியே இன்று இல்லை. ஆனால் அந்த சந்தோஷமான நாட்கள் மறக்காது. கடைசியாக உருப்படியாக கற்றுக் கொண்ட நாட்களும் அவைதான். 🙂

   Like

 6. ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை நடக்கும் “அக்கறை” கூட்டத்தில் கடுகு அவர்களும் ஒரு உறுப்பினர். அவரது எண்பதாவது பிறந்த நாள கடந்த மாதம் புத்தக வெளியீடு போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ஹிந்தி பிரச்சார சபாவில் நடந்தது. ஆனால் என்னால் செல்ல முடியவில்லை. பிப்ரவரி மாத அக்கறை மீட்டிங்கிற்கு வந்தவருக்கு வாழ்த்துச் சொன்னேன். “கமலாவும் நானும்” ஒரு காப்பி கொடுத்தார். இதில் பலப் பல சுவையான விஷயங்கள் உள்ளன. குறிப்பாக டெல்லி வாழ் தமிழ்ப் பிரபலங்களான க.நா.சு, சுப்புடு, சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடனான தொடர்புகள் பொறாமை ஏற்படுத்தும். அப்புறம் கடுகு அவர்களின் கடிதம் ஒன்றினை குஷ்வந்த் சிங் தனது புத்தகத்த்ல் பிரசுரித்திகிறார். – சிமுலேஷன்

  Like

  • சிமுலேஷன், என் கண்ணில் கடுகு மறைந்து கொண்டிருக்கும் தமிழ் நகைச்சுவை genre எழுத்தின் ஒரே பிரதிநிதி. அவர் போன்றவர்களின் முக்கியத்துவம் இன்னும் முழுதாக உணரப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.

   Like

Trackbacks & Pingbacks

 1. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: