ஆர்.எல். ஸ்டீவன்சன் எழுதிய “டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்”

1886-இல் வெளி வந்த குறுநாவல். ஸ்டீவன்சனின் மாஸ்டர்பீஸ் என்று இதைத்தான் கருதுகிறேன். எனக்கு மிகவும் பிடித்த gothic novel-உம் இதுதான். ஃப்ராங்கன்ஸ்டெய்னைப் போல, ட்ராகுலாவைப் போலவே சிம்பிளான ஐடியா, ஆனால் ஃப்ராங்கன்ஸ்டெய்னை விட, ட்ராகுலாவை விட மிகச் சிறந்த எழுத்து.

தைச்சுருக்கம் எல்லாம் தேவையே இல்லை. ஜெகில்/ஹைட் கதை தெரியாதவர்கள் கிடையாது. கதையை உயர்த்துவது understated ஸ்டைலில் எழுதப்பட்டிருப்பதுதான். அதுவும் அந்த வக்கீல் அட்டர்சன் பாத்திரம் – ஒரு colourless, drab மனிதரின் கண் மூலமாக ஒரு அமானுஷ்ய நிகழ்ச்சியை விவரிப்பது inspired.

இதைப் பற்றி பெரிதாக விவரிப்பு எதுவும் தேவை இல்லை. ஒரு கிளாசிக் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

இந்தக் கருத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது – சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய gothic கதையான “உற்று நோக்கும் பறவை“யில் கூட இந்தக் கருவை காணலாம். சினிமாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். சாப்ளினின் சிடி லைட்சிலிருந்து ஷங்கரின் அந்நியன் வரைக்கும் தொடரும் தீம்.

இந்தப் பதிவை எழுதக் காரணமாக இருந்தது 1931-இல் ஃப்ரெடரிக் மார்ச் நடித்து வெளிவந்த திரைப்படத்தை சமீபத்தில் பார்த்ததுதான். சினிமாவுக்காக ஒரு ஹீரோயின், ஒரு vamp மசாலா எல்லாம் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் மார்ச் ஹைட் பாத்திரமாக சிறப்பாக நடித்திருப்பதும், ஒளிப்பதிவும் படத்துக்கு ப்ளஸ் பாயிண்டுகள். மார்ச் இந்தப் படத்திற்காக சிறந்த நடிகர் ஆஸ்கார் விருது பெற்றார். இந்த மாதிரிப் படத்துக்கெல்லாம் கறுப்பு வெள்ளைதான் சரிப்படுகிறது!

படிக்காதவர்கள் இருக்க முடியாது. அப்படி இருந்தால் கட்டாயம் படியுங்கள், நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டி: ஆர்.எல். ஸ்டீவன்சனின் “ட்ரெஷர் ஐலன்ட்”