லா.ச.ரா.வைப் பற்றி நண்பர் ஜடாயு ஒரு அருமையான கட்டுரை (பகுதி 1, பகுதி 2) எழுதி இருக்கிறார். பிரமாதமான அலசல். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
அவ்வளவு பெரிய கட்டுரை படிக்க சோம்பேறித்தனம், நாலு வரியில் லா.ச.ராவைப் பற்றி சொல்லு என்றால்: லா.ச.ரா.வை ஒரு திறமை வாய்ந்த பொற்கொல்லருக்கு, மினியேச்சர் ஓவியம் வரைபவருக்கு ஒப்பாக சொல்வேன். நகாசு வேலைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பவர். மனிதரின் களம் மிகவும் சின்னது. அவர் குடும்பம், பிராமணப் பின்புலத்தைத் தாண்டிப் போகமாட்டார். எப்போதாவது பிற ஜாதியினரைப் பற்றி எழுதினாலும் அதில் பிராமணப் பார்வை தெரியும். ஆனால் அவர் காட்டும் உலகம் மிகவும் பெரியது. எந்த microcosm-த்திலும் மனித உணர்ச்சிகள் ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொள்ள அவர் எழுத்து போதும். அவர் காட்டும் மனிதர்கள் மன அழுத்தம் நிறைந்தவர்கள், உணர்ச்சி கொந்தளிக்கும்; ஜாலியான ஒரு extrovert பாத்திரத்தைக் காண்பது மிக அரிது. சொற்களைப் பொறுக்கி பொறுக்கி எழுதுவார். தீ என்று எழுதினால் வாசகனுக்கு சுடவேண்டும் என்று நினைப்பவர். சொகுசான மொழி அவரது பலம்; பலவீனமும் கூட. சமயங்களில், அதுவும் சின்ன வயதில், அவரது மொழி, பாயின்ட் புரியாதபோது யோவ் கிழவா என்னய்யா சொல்ல வரே என்று ஒரு கடுப்பு கிளம்பும். என்றாவது அவர் எழுதிய பாற்கடல் போல என் குடும்பத்தைப் பற்றி நான் எழுதிவிட்டால் என் ஜன்மம் சாபல்யம் அடையும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா.
தொடர்புடைய சுட்டி: அபிதா
அருமை.
LikeLike
லா.ச.ரா-வைப் பற்றிய ஒரு ஆழமான ஆராய்ச்சி. அவரின் தொகுப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டதால், tamilvu.org-ல் கிடைக்கிறது. http://tamilvu.org/library/nationalized/html/naauthor-12.htm. உயிர்மை அவரின் சிறுகதைகளைத் 2 தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார்கள்.
LikeLike
தொடர் பற்றி ——————— தமிழ் எழுத்தாளர்களை பற்றிய முழுமையான தொகுப்பை உருவாக்குவது என்பது இமைமுடியை கட்டி இமயமலையை இழுப்பதற்கு ஒப்பாகும். இந்த பேருண்மை புரிந்தும் நாங்கள் இத்தகைய ஒரு முயற்சியில் இறங்கியிருப்பதற்குக் காரணம், எவ்வித சார்பும் அற்று இதுவரை இதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்படவில்லை என்ற ஆதங்கம் தான். இதுவரை நிகழ்ந்துள்ள தொகுப்பு முயற்சிகள் ஏதேனும் ஒரு துறை சார்ந்தோ, பிரிவு சார்ந்தோ, அல்லது ஒரு இசம் சார்ந்தோ மட்டுமே நடந்துள்ளன. நாங்கள் எந்த இசத்துக்குள்ளும் சிக்காதவர்கள். இப்பணி தமிழின் செழுமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான சிறிய தொடக்கப்புள்ளி. படைப்பாளிகளுக்குள்ளான பகிரதலுக்கும், படைப்பு மேம்பாட்டுக்கும் இது உதவக்கூடும். இதுவும் பல காரணங்களால் சர்ச்சைக்குள்ளாகலாம். ஆனால் தவறுகள் சுட்டப்படுமானால் அவைகளை திருத்திக்கொள்வதில் நமக்கு எந்த பிரச்னையும் இருக்கப்போவதில்லை. கூடுமானவரை அத்தகைய சூழல் ஏற்படாத வண்ணம் உழைக்க சித்தமாக இருக்கிறோம். இது நீண்டகால வேலை. உங்களின் விமர்சனங்கள் இப்பணியை மேம்படுத்தவும், எங்களை ஊக்கப்படுத்தவும் உதவும். மூன்று பிரிவாக எழுத்தாளர்களை வரிசைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 1. பாரதிக்கு முன்னான எழுத்தாளர்கள். 2 பாரதிக்கு பின்னான எழுத்தாளர்கள். 3. சமகால எழுத்தாளர்கள். தொடக்கத்தில் வரிசைப்படுத்துவதில் சில தவறுகள் நேரலாம். ஆனால் எதிர்காலத்தில் உன்னதமான வெளிப்பாடாக இது அமையும் என்று நம்புகிறோம். அதைக் காலமும், வாசகர்களும் தான் தீர்மானிக்கப் போகிறார்கள்.
LikeLike
சில்வர் ப்ரைஸ், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
ராஜ், சுட்டிக்கு நன்றி!
LikeLike