சுஜாதா காப்பி அடித்த சிறுகதை

இரண்டணா என்ற சிறுகதையை – சுஜாதாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று – சமீபத்தில் ஸ்ரீனிவாஸ் தன் தளத்தில் பதித்திருந்தார். இது ஸ்ரீரங்கத்துக் கதைகளில் ஒன்று. நோபல் பரிசு பெற்ற பிரபல எகிப்திய எழுத்தாளர் நக்யூப் மஃபூஜ் எழுதிய “The Conjurer Made off with the Dish” என்ற கதையின் நேரடி காப்பி. கதை எகிப்தில் நடக்கவில்லை, ஸ்ரீரங்கத்தில் நடக்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம். சுஜாதாவின் கதையில் வித்தை காட்டுபவன் சிறுவனின் கிண்ணியைப் பிடுங்கிக் கொள்வதை மஃபூஜின் தலைப்பு நினைவுபடுத்துகிறது.

காப்பி என்றாலும் சிறந்த எழுத்து. முன்னால் மஃபூஜின் கதையைப் படித்திருந்தது எந்த விதத்திலும் என் enjoyment-ஐக் குறைக்கவில்லை.மாறாக திறமை வாய்ந்த ஒரு எழுத்தாளர் அரைத்த மாவையே எவ்வளவு பிரமாதமாக அரைக்கிறார் என்ற வியப்புதான். மஃபூஜின் எழுத்தை விட இதோடு ஒன்றுவது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது.

சுஜாதாவின் எழுத்துகளில் அங்குமிங்கும் பிற எழுத்துகளின் பாதிப்பு இருப்பதைப் பார்க்க முடியும். திசை கண்டேன் வான் கண்டேன் புத்தகத்தில் டக்ளஸ் ஆடம்சின் Hitchiker நாவல்களின் பாதிப்பு தெரியும். சரளா என்ற நாடகம் (எதன் தழுவல் என்று நினைவில்லை), வில்லியம் சரோயனின் ஒரு கதை, Flowers for Algernon சிறுகதை, Rabbit Trap என்ற நாடகம் (சுஜாதா வைத்த பேர்கள் நினைவில்லை) ஆகியவை தழுவல்கள் எனபதை அவரே சொல்லி இருக்கிறார். ஆனால் அப்பட்டமான காப்பி என்பது இதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டு version-களையும் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

“Flowers for Algernon” சிறுகதையின் தழுவலுக்கு சுஜாதா வைத்த பேர் “மிஸ்டர் முனுசாமி 1.2.1” என்று ராஜ் சந்திரா தகவல் தருகிறார். 2001: A Space Odyssey திரைப்படம்/நாவலைத் தழுவி “ஆகாயம்” என்று ஒரு சிறுகதையை எழுதி இருக்கிறார் என்று நல்லூரான் தகவல் தருகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: சுஜாதா பக்கம், தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டி: அசோகமித்திரன் காப்பி அடித்த சிறுகதை

4 thoughts on “சுஜாதா காப்பி அடித்த சிறுகதை

  1. >>Flowers for Algernon சிறுகதை, Rabbit Trap என்ற நாடகம் (சுஜாதா வைத்த பேர்கள் நினைவில்லை)

    Flowers for Algernon சிறுகதை = மிஸ்டர் முன்சாமி 1.2.1…
    அறிவியல் கதைகள் தொகுப்பில் இருக்கிறது. ஒரிஜினல் படிக்கவில்லை.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.