Skip to content

சிலிக்கன் ஷெல்ப் மே மாதக் கூட்டம் – பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

by மேல் ஜூன் 12, 2012

(இது முதல் பகுதி. விசு இன்னொரு பகுதியை தயார் செய்கிறார். )

2009ல் ஜெயமோகன் வந்து போன பிறகுதான் ஆர்வமடைந்து நாங்கள் இலக்கிய மன்றம் வைத்து செயல் பட ஆரம்பித்ததெல்லாம். 2011 ஜனவரியிலிருந்து இது வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் உற்சாகத்துடன் நடந்து வந்திருக்கிறது. இன்றும் ஒரு சிறந்த நிகழ்ச்சியே. ராஜன் ஒரு இலக்கிய சீசனை ஜூன் ஜூலை மாதங்களில் எங்களுக்கெல்லாம் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். நாங்களும் முழுமையாக ஈடுபாட்டுடன் இதை நடைமுறை படுத்த ஒத்துழைக்கிறோம் என்று நினைக்கிறேன். இதில் உறுப்பினர்கள் தவறாமல் பங்கு பெறுவதே நிகழ்ச்சியின் வெற்றிக்கு பங்களிக்கிறது. சுந்தரேஷ், பாலாஜி, நான், விசு, ராஜன், ஆர்வி, காவேரி, சித்ரா, நித்யா – இவர்களெல்லாம் தவறாமல் ஆஜர் ஆகும் உறுப்பினர்கள். பாராட்டுகள்.

இன்று விசுவும் அருணும் முதலில் ஆஜர். அருண் ஆஸ்தான் வீடியோகிராஃபராக நியமிக்கப்பட்டார். இரண்டு மணிக்கு ராஜன், சுந்தரேஷுடன் பி.ஏ.கே. வந்தார். பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். பிஏகே உற்சாகமாக இருந்தார். ஒரு பெரிய “அரியாசனம்” (சிங்கிள் கவுச்) அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் வந்தவுடன் அதைப்பார்த்தார். அதில் உட்காராமல் மற்றொன்றில் அமர்ந்தார்.

”ஸார் உங்க சீட் அங்கே”

“I have abdicated my throne”

அப்பொழுதே களை கட்டிவிட்டது. இது சிலிக்கன் ஷெல்ஃப் மே மாத கூட்டம். அலசலுக்கு ஒதுக்கப் பட்டிருந்த புத்தகம் Muddy River. PAKயும், பாலாஜியும் இணைந்து வழங்குவதாக இருந்தது. பாலாஜிக்கு திடீரென்று குடும்பக் கடமை. அதனால் மற்றவர்கள் ஆரம்பித்து வைத்தனர். கூட்டம் ”அலை மோதியது” – ஒரு கட்டத்தில் 20 பேர். எதிர்பார்த்தது 15 பேர். ஆனால் இருபதைந்து பேர் வரை ஹால் தாராளமாக தாங்கும். ஒரு சிறிய இன்ஃபார்மல் அறிமுகத்துடன் தொடங்கியது. ஒருவர் ஒருவராக கதை சொல்ல ஆரம்பித்தனர். நான், விசு, ஆர்வி மற்றும் பிறர். சுந்தரேஷ் கேள்வி கணைகளை வீசிக் கொண்டிருந்தார். பல எதிர் வாதம் தான். ஆனால் வேலிட் பாயிண்ட்ஸ். பிஏகே சலிக்காமல் பதில் சொன்னார். சில கருத்துகளை (குறிப்பாக மார்க்சியம் பற்றி) எழுத்தில் இன்னும் சிறப்பாக வாதம் செய்யமுடியும் என்ற எண்ணம் அவருக்கிருக்கிறது.

அரசாங்கத்தில் இருந்த ஒரு பிரபல அதிகாரி எவ்வளவு trivialஆன விஷயங்களில் தன் கவனத்தை செலுத்தியிருக்கிறார் என்பதை பற்றி சொன்னார். பெரிய அரசாங்க சீர்திருத்தவாதியாக எண்ணியிருந்த அந்த அதிகாரியின் பிம்பம் என் மனதில் உடைந்தது. அஸ்ஸாம் காந்தியவாதி (சரத் சந்திர சின்ஹா) பற்றி கூறினார். எப்படி தன் முதல் மந்திரி பதவி முடிந்த அன்று அவர் இல்லத்திற்கு கிளம்பி சென்றார் என்பதைப் பற்றி Muddy Riverல் ஒரு குறிப்பு வருகிறது. அது எவ்வளவு உண்மை என்பதை விவரித்தார். பிஏகே அரசாங்கத்தின் போக்கு நன்மையை நோக்கி மாறும் என்று உறுதியாக நம்புகிறார். ”எப்பொழுது என்பதை எளிதில் சொல்லிவிட முடியாது.”

மார்க்ஸிய சித்தாந்தம் பேச ஆரம்பிக்கப் பட்ட பொழுது விவாதம் மிகவும் சூடு பிடித்தது. குறைகளிருப்பினும் அதுவும் ஒரு பாஸிபிள் சொல்யூஷன் என்று பிஏகே சொல்கிறார். சுந்தரேஷ் அதனை முழுமையாக எதிர்த்தார். கேபிஸியும் அதற்கெதிரான குரலே கொடுத்தார். மார்க்ஸியம் பற்றி பெரிதாக எதுவும் தெரியாவிட்டாலும் என்னுடைய இரண்டு செண்ட்டும் சென்று சேர்ந்தது. என்னுடைய தரப்பு – சமுதாயம் ஒரு பெரிய யானை; சித்தாந்தவாதிகள் குருடர்கள்; வேறு யாரும் இதைப் பற்றி பேசவில்லை.

சில ஆங்கிலத்தில் ஒத்துக் கொள்ளப்பட்ட வார்த்தைகளை தமிழாக்கம் செய்வதால் கதையோட்டத்தில் தடங்கள் வருவது அல்லது வேகம் குறைகிறது என்று சுந்தரேஷ் கிரிட்டிக் பண்ணினார். பிஏகே தன் நண்பருடன் (பெயர் மறந்து விட்டேன் – ஓவியர் ஜீவா?) பல முறை டிஸ்கஸ் செய்தபின்னரே அதை அப்படி வைப்பது என்று முடிவு செய்ததாக சொல்கிறார். முதல் சந்திப்பில் இருவர் தாமஸ் ஹார்டி மற்றும் அவர் கவிதைகள் பற்றிய கருத்து பரிமாற்றம் செய்வதாக கதையில் இடம் பெறுவது நம்பகத்தன்மையை குறைப்பதாக இருக்கிறது என்றார் பாலாஜி. பிஏகே அது நடைமுறையில் சாத்தியம், நடந்திருக்கிறது என்பதால் தான் கதையில் இடம்பெறுகிறது என்றார்.

அங்கதம் – அருண் தனக்கு 28 வயது என்பதை (மற்ற அனைவரும் கிழவர்கள்) மீண்டும் மீண்டும் பூடகமாக ஒரு கேள்வியில் நுழைத்தார். ஆர்வி உடனே பாய்ந்து அதை “ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்” என்றான்.  அருண் சொல்ல வந்தது நடைமுறைக்கு சாத்தியமான முதலாளித்துவத்தை விட்டு தான் ஏன் மார்க்சிய சிந்தனைகளை தழுவ வேண்டும் என்பது போன்றது. ஆம். இதற்கும் 28 வயதிற்கும் என்ன சம்பந்தம்? அருண், இது அநியாயம். 🙂

விசுவின் விளக்கத்தில் மூன்று சரடுகள் கதை ஓட்டத்தில் இருப்பதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினார். திருமதி. ரேவதி கிருஷணன் சில பாய்ண்ட்களை பிஏகேவிற்கு நினைவு கூர்ந்தார்.

தரமான நான்கு மணி நேரம். மேலும் ஒரு மணி நேரம் ஆகியது சபை கலைவதற்கு. இடையில் சித்ராவின் சிற்றுண்டி ஏற்பாடு. நான் விருப்பப்படும் எதையும் சிரமேற்று நடத்திக் கொடுக்கும் குணம் சித்ராவிற்கு. உடல் நிலை சரியில்லாவிட்டாலும் அதை பெரிது படுத்தாமல் நிகழ்ச்சியை வெற்றியடைய செய்த பெருமை அவளை சாரும். செல்வி மற்ற பெண்களின் உதவிகளும் பாராட்டுக்குரியது.

காவேரி, விஜயா, செல்வி(ராஜனின் மனைவி), சித்ரா, திருமதி ரேவதி கிருஷ்ணன் (திரு கிருஷணனின் மனைவி),  KB Chandrasekahar (தொழிலதிபர்) & சுகன்யா சந்திரசேகர், திருமதி & திரு. பாலசுப்ரமணியன், திருமதி & திரு ரவி (மற்றும் அவர்கள் பதினம வயது பெண்), உப்பிலி சீனிவாசன்(பால்ஹனுமான் ப்ளாகர்), பாலாஜி, செந்தில் (புதிய உறுப்பினர்), ராஜன் , ஆர்வி, சுந்தரேஷ், விசு, அருண் (மற்றும் நான்) ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். உறுப்பினரில் மிஸ் ஆனது நித்யவதி சுந்தரேஷ். அவர் தமிழ் மாநாட்டில் பிஸி.

ராஜன் முயற்சியும், எங்கள் ஒத்துழைப்பும் ஒரு பக்கம் என்றாலும் நிகழ்ச்சியின் வெற்றியின் வேறு பரிமானம் என்ன என்று சிந்தித்துப் பார்க்கிறேன் – நேற்று வந்து போன ஜெயமோகனாகட்டும், இன்று வந்திருக்கும் P.A. Krishnan ஆகட்டும் – அவர்களின் எளிமையும் நாங்கள் கேட்கும் கேள்விகளுகெல்லாம் (சில சமயம் அபத்தங்களுக்கெல்லாம்) பொறுமையாக பதில் கூறும் தன்மையினால் கிடைக்கும் அவர்களின் ஒத்துழைப்பும் கூட எங்களை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்து இது போனற நிகழ்ச்சிகளை தொடர செய்கிறது.

இன்னும் பிஏகிருஷணன் நிகழ்ச்சிகள் உள்ளன. புதன் அன்று வானொலி நிகழ்ச்சி இருக்கிறது. மேலும் பயணங்களும், ஒரு பொதுக் கூட்டமுமிருக்கிறது. நாஞ்சில் நாடனும் 19ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வருகிறார். கோடை இலக்கிய சீசன் அமோகமாக ஆரம்பித்துவிட்டது. இன்னும் இருபது நாட்கள் கொண்டாட்டமே.

Advertisements

From → P.A. Krishnan

3 பின்னூட்டங்கள்
  1. அருணா permalink

    ஆர். வி – வரவர VIP ஸ் வச்சு மட்டுந்தான் கூட்டம் நடத்தறீங்க போல:) நீங்கள் யாராவது விரிவாக எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

    Like

Trackbacks & Pingbacks

  1. சிலிக்கன் ஷெல்ஃப் மே கூட்டம் – பாகம் 2 (பி.ஏ.கே.யுடன் ஒரு சந்திப்பு) « சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: