Skip to content

லீ சைல்டின் ஜாக் ரீச்சர் நாவல்கள்

by மேல் ஜூன் 22, 2012

லீ சைல்ட் (Lee Child) ஒரு த்ரில்லர் எழுத்தாளர். அவர் கதைகளின் ஹீரோ ஜாக் ரீச்சர் (Jack Reacher). ஜாக் ஒரு எக்சென்ட்ரிக். முன்னாள் ராணுவ வீரன். கை சண்டை, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் எக்ஸ்பர்ட். ஜாக் எந்த ஊரிலும் வாழ்வதில்லை, அட்ரசே கிடையாது. கால் போன போக்கில் போவான். போகிற இடத்தில் எல்லாம் பிரச்சினை வரும், துப்பறிந்து, சண்டை போட்டு தீர்ப்பான். டைம் பாஸ் நாவல்கள், ப்ளேனில் படிக்க ஏற்றவை.

ரீச்சரை ஒரு விதத்தில் வெஸ்டர்ன் ஹீரோ என்று சொல்லலாம். எங்கிருந்தோ வரும் ஒருவன் ஊரில் உள்ள குற்றச் சூழ்நிலையை ஒழிக்கும் கருவைத்தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய கதை இல்லை. டிபிகல், ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமான, த்ரில்லர் எழுத்து. Pulp fiction. ஆனால் அந்த எங்கிருந்தோ வரும் வெஸ்டர்ன் ஹீரோ இமேஜில் ஒரு கவர்ச்சி இருக்கிறது.

இது வரை 16 17 நாவல்கள் வந்திருக்கின்றன.

  1. Killing Floor, 1997
  2. Die Trying, 1998
  3. Tripwire, 1999
  4. Running Blind, 2000
  5. Echo Burning, 2001
  6. Without Fail, 2002
  7. Persuader, 2003
  8. The Enemy, 2004
  9. One Shot, 2005
  10. The Hard Way, 2006
  11. Bad Luck and Trouble, 2007
  12. Nothing to Lose, 2008
  13. Gone Tomorrow, 2009
  14. 61 Hours, 2010
  15. Worth Dying For, 2010
  16. Affair, 2011
  17. A Wanted Man, 2012
  18. Never Go Back, 2013
  19. Personal, 2014
  20. Make Me, 2015
  21. Night School, 2016

jack_reacherஒவ்வொரு கதைக்கும் கதைச்சுருக்கம் எழுதும் அளவுக்கு முக்கியமானவை இல்லை. ஒரே ஒரு கதை படிக்க வேண்டுமென்றால் One Shot என்ற கதையை பரிந்துரைப்பேன். ஐந்து கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவன் மீண்டும் மீண்டும் சொல்வது – “நான் குற்றமற்றவன், Get me Jack Reacher” ஆனால் ரீச்சர் அவன் குற்றவாளி என்று நினைக்கிறான். என்னாகிறது என்பதுதான் கதை. இது திரைப்படமாகவும் வரப்போகிறது வந்துவிட்டது, டாம் க்ருய்ஸ் நடிக்கப் போகிறார் நடித்திருக்கிறார். One Shot நாவலை திரைப்படம் ஆக்கி இருக்கிறார்கள்.

Killing Floor என்ற கதையையும் படிக்கலாம். இதுதான் முதல் நாவல். தற்செயலாக ஒரு சின்ன ஊரில் ரீச்சர் இறங்குகிறான். Of course, ஊரில் பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. ரீச்சர் கொலை செய்துவிட்டான் என்று கைது செய்யப்படுகிறான். ஜெயிலில் நடக்கும் சண்டைக்காட்சிகள் திரில்லிங் ஆக இருக்கும். வெளியே வந்த பிறகு அவனுக்கு இறந்தவன் தன் அண்ணன் என்று தெரிகிறது. பிறகு வழக்கம் போல சண்டை, எல்லா வில்லனையும் ஒழித்துக் கட்டுகிறான்.

சிறந்த வில்லன் – ஹுக் ஹோபி – வருவது Tripwire என்ற கதையில். ஹோபி ரீச்சரையும், ரீச்சரின் முன்னாள் பாஸ் கார்பரின் மகள் ஜோடியையும் கொல்ல முயற்சி செய்கிறான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: லீ சைல்டின் தளம்

From → Thrillers

2 பின்னூட்டங்கள்
  1. RV i want to read sujata’s ebooks. can you give me the links? bala

    • tkb1936rlys, சுஜாதாவின் புத்தகங்கள் காப்புரிமை பெற்றவை. வாங்க வேண்டுமென்றால் http://www.writersujatha.com தளத்தைப் பாருங்கள். நண்பர் பாலஹனுமானின் தளத்தில் (http://balhanuman.wordpress.com) சில சிறுகதைகள் கிடைக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: