நாஞ்சில்நாடனுக்குப் பிடித்த அவரது படைப்புகள்

நாஞ்சில்நாடனிடம் அவருக்குப் பிடித்த அவருடைய நாவல் எது, சிறுகதை எது என்று கேட்டேன். எழுத்தாளனுக்கு தன் எந்தப் படைப்பு மிகப் பிடித்தது என்று கேட்பதில் பொருளில்லை என்று வெகு மென்மையாக இடித்துரைத்தார். நமக்கு இந்த இங்கிதம், நாகரீகம் எல்லாம் கொஞ்சம் மட்டுதான் – ஒரு வாசகனாக உங்களுக்கு எது பிடிக்கும் என்று விடாக்கண்டனாகக் கேட்டேன். ஏறக்குறைய அவர் சொன்ன விதத்திலேயே கீழே கொடுத்திருக்கிறேன்.

நான் ஆறு நாவல்கள் எழுதி இருக்கிறேன் – தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் போலக் காயுமே, மாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்கக் குதிரைகள், எட்டுத் திக்கும் மதயானை.

எனக்கு மிகவும் பிடித்த மூன்று நாவல்கள்: மிதவை, சதுரங்கக் குதிரைகள், எட்டுத் திக்கும் மதயானை

மிகவும் பிடித்த இரண்டு: சதுரங்கக் குதிரைகள், எட்டுத் திக்கும் மதயானை

மிகவும் பிடித்தது: எட்டுத் திக்கும் மதயானை

அவருக்குப் பிடித்த சிறுகதைகள் என்பதற்கு அவர் அவ்வளவு திட்டவட்டமாகப் பேசவில்லை. ஆனால் தன்ராம்சிங் சிறுகதைக்கு அவர் மனதில் ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு என்பதை உணர முடிந்தது. பாம்பு இன்னொன்று. எனக்குப் பிடித்தது வனம் என்று சொன்னேன். அவரிடமிருந்து எந்தக் கமெண்டும் இல்லை. 🙂 வனத்தில் அவர் ஒரு வரியில் கதையின் போக்கையே மாற்றுவார் – ஒரு மாஸ்டரால்தான் அது முடியும். இயக்குனர் பாலா “இடாலாக்குடி ராசா” தன் வாழ்க்கையை மாற்றிய கதை என்று சொல்லி இருக்கிறார். அதைப் பற்றியோ, புகழ் பெற்ற “மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும்” பற்றி எல்லாம் அவர் (என்னிடம்) எதுவும் கண்டுகொள்ளவே இல்லை. பொதுவாக அவரது படைப்புகளைப் பற்றி நாங்கள் பேசும்போது ஒரு புன்சிரிப்போடு கேட்டுக் கொள்வாரே தவிர அவராக எதுவும் சொல்லமாட்டார். தன்னடக்கம் அதிகம், அவரது வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்க வேண்டும்.

நாஞ்சில்நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை என்ற அபுனைவை தன்னுடைய குறிப்பிடப்பட வேண்டிய சாதனையாகக் கருதுகிறார்.

சீக்கிரம் எல்லா புத்தகங்களையும் (இரவலாவது) வாங்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: இடலாக்குடி ராசா சிறுகதையும் இயக்குனர் பாலாவும்

சிறுகதைகள்:
தன்ராம்சிங்
பாம்பு
வனம்
இடாலாக்குடி ராசா
மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும்

9 thoughts on “நாஞ்சில்நாடனுக்குப் பிடித்த அவரது படைப்புகள்

 1. Five years before accidentally read a short story in Vikatan which moved me to tears and had an everlasting impact on me literally.Unfortunately,I failed to notice the writer and also the name of the story;from there on I tried many times to figure out the writer but in vain.By God’s grace last month I chanced upon a reader’s email(Aravind) in Jeyamohan’s blog who too had the same effect on reading that story.That was truly an Eureka moment for me and I was stunned to know the writer is “Nanjil Nadan”.

  The Story is “Dhanram Singh”. Its nice to know that its one of the favt for the Master Nanjil himself.

  Like

 2. நாஞ்சில் நாடனின் படைப்புகள் எதையும் படித்ததில்லை. அவரின் தளத்தை பார்த்ததுண்டு, காரணம் அவரின் தலைகீழ் விகிதங்கள் நாவல். அதைத் திரைப்படமாக கண்டு நொந்ததால், அழகி பாதிப்பில் சென்று எரிச்சலாகி வந்தோம். அதனாலே படிக்க விருப்பமில்லாமலிருந்தது. இன்றுதான் அவரின் கதைகளை படித்தேன். தாமதமான அறிமுகம். முன்னரே படித்திருக்க வேண்டியவை. இதற்குதான் உங்களின் தளத்திற்கு அதிகம் வருவது. பி.ஏ.கிருஷ்ணனுக்கு அடுத்த எனக்கு நல்ல அறிமுகம் நன்றி.

  மலையடிவார ஊரில் இருந்து வந்ததால் காடு, மலை பற்றிய கதைகள் எப்போழுதும் எனக்கு பிடிக்கும். எங்கள் ஊர் கேரளா அருகில், தேக்கடி 2 மணி தூரம், மூணாறு 4 மணி, மேகமலை 2 மணி நேரம். இப்பொது சில தினங்களுக்கு முன் ஜெயமோகன் குறிப்பிட்ட குறவன் குறத்தி சிலை இருக்கும் ராமக்கல் மெட்டுக்கு நேர் கீழ் இருக்கும் ஊர்தான் என் ஊர். அந்த பெயருக்கு காரணம், என் அப்பா பூஜை செய்து வரும் ரெங்கநாதர் கோவில். இத்தனை இருந்து நான் எங்கும் சென்றதில்லை. அருகிலிருந்து அதை அனுபவிக்க முடியாததால், படிக்கும் போது மிகவும் நெருக்கமாக உணர்கின்றேன். அந்த வகையில் வனம் பிடித்ததாகிவிட்டது. ஜெயமோகன் கதைகளை படித்ததால் அந்த தமிழும் பழகிவிட்டது

  இந்த கூர்க்காக்கள் உண்மையில் வித்தியாசமானவர்கள்தான். எங்கிருந்தோ வந்து வீடு வீடாக சென்று அலைந்து ஒரு வாழ்க்கை. நமது மக்களும் அவர்களுக்கு தரும் சம்பளம் அடடா, 2 ருபாய், 5 ரூபாய். ஆனால் அதையும் அவர்கள் அதே புன்சிரிப்புடன் வாங்கி கொண்டு ஒரு சலாம் வைத்து செல்வதுதான் ஆச்சரியம். நம்மூர் பிச்சைக்காரர்கள் கூட 2 ரூபாய் குடுத்தால் நம்மை அவனுக்கு போட்டியாக வர தகுதி ப்டைத்தவனோ என்றுதான் பார்ப்பார்கள். ஆனால் இவர்கள் அந்த புன்சிரிப்புடன் செல்கின்றார்கள். இதைப் படித்ததும் எனக்கு நினைவிற்கு வருவது என்வீட்டிற்கு வரும் கூர்க்காதான். ஒரு சிரிப்பு, அவன் பேசும் மொழி எனக்கு புரியாது, நான் பேசுவது அவனுக்கு புரியாது, ஒன்று தான் புரியும் “பால் பச்சேஸ் சாப்”. நாமும் தினமும் பலரைப் பார்க்கின்றோம், ஆனால் நினைவில் வைப்பதில்லை. எழுத்தாளர்களின் பார்வை நமக்கு கற்று தருகின்றது, நமது பார்வையையும் மாற்றுகின்றது. அவர்களைப் போல் எழுத்தில் வடிக்கமுடியாவிட்டாலும், நமக்குள் உணர்ந்தால் போதும்.

  அறிமுகத்திற்கு நன்றி

  Like

 3. வெகுநாட்களுக்கு முன்பே சதுரங்கக் குதிரை படித்து ரசித்தேன். அவரது வலைப்பூவில் இதர படைப்புகளையும் படித்துவிட்டேன். அவருக்கு பிடித்த வரிசைதான் எனக்கும் பிடித்த வரிசை என்பது ஆச்சர்யம்.

  Like

 4. ஆர். வி – நாஞ்சிலின் எட்டு திக்கும் மத யானையைத் தவிர அவருடைய மீதி எல்லா நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் அபுனைவுகளையும் படித்திருக்கிறேன் / வைத்திருக்கிறேன். என் மனதுக்கு மிக மிக நெருக்கமான எழுத்து அவருடையது. அவரை தனிப்பட்ட முறையிலும் கொஞ்சம் தெரியும். அவருக்கும் அவர் எழுத்திற்குமான இடைவெளி மிகக்குறைவு என்று தோன்றும். அவரின் அமெரிக்க பயணத்தின் போது அங்கு இல்லாமல் போனது பெரிய இழப்பு தான்.

  Like

 5. என்ன ஆர்வி சார். நாஞ்சில் நாடனின் அறச் சீற்ற அவதாரமான கும்ப முனியை விட்டுட்டீங்களே. வன்மையாகக் கண்டிக்கிறேன் 🙂

  Like

 6. கே: பல இலக்கியவாதிகளோடு நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள்.
  உங்களுக்குப் பிடித்தவர் யார்?

  ப: ஜானகிராமன், மௌனி, சி.சு. செல்லப்பா, இந்திரா பார்த்தசாரதி,
  சுஜாதா தொடங்கி பலரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். பலரும்
  எனக்குப் பிடித்தமானவர்கள்தான். இதில் மிகவும்
  ஆத்மார்த்தமானவர் என்று சொன்னால் அது
  நாஞ்சில்நாடன் தான். அவர் எனக்குத் தம்பியைப் போன்றவர்.

  –பாரதி மணி – (ஆகஸ்ட், 2012 தென்றல் மாத இதழ் நேர் காணலில்…)

  Like

 7. நாஞ்சில்நாடனின் நாவல் எதுவும் வாசித்ததில்லை. நாஞ்சில்நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, கான்சாகிப் மற்றும் இன்னும் கொஞ்சம் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாசித்திருக்கிறேன். எனக்கு அவருடைய எழுத்து நடை மிகவும் பிடிக்கும். கும்பமுனி கதைகள் வாசிக்கும் போது விழுந்துவிழுந்து சிரித்திருக்கிறேன்.

  Like

 8. மகேஷ், உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் நாஞ்சிலார் சந்தோஷப்படுவார்!
  ரெங்கசுப்பிரமணி, உங்கள் பின்னூட்டத்தைக் கண்டு நானும் சந்தோஷப்பட்டேன். இப்படிப்பட்ட பின்னூட்டங்கள்தான், அலசல்கள்தான், எழுத ஊக்கம் தருகின்றன.
  எஸ் கே என், எனக்கு அவர் காலம் செல்லச் செல்ல தன் படைப்புகளில் மெருகு ஏறுகிறது என்று நினைக்கிறார் என்று தோன்றியது. அவருக்கு மிகவும் பிடித்த படைப்பு கடைசியாக எழுதிய நாவல், அடுத்தது அதற்கு முன் எழுதிய நாவல்…
  அருணா, என்ன ஊரில் இருந்துகொண்டு குறைப்படுகிறீர்கள்? பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் எவ்வளவு தூரம்?
  ரமணன், அவர் என்னிடம் குறிப்பிட்டவற்றை மட்டும்தான் இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன். என்னிடம் அவர் கும்பமுனி சிறுகதைகளைப் பற்றி பெரிதாக பேசவில்லை. ஆனால் அவர் கும்பமுனி சிறுகதைகளை தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பயன்படுத்துகிறார் என்று புரிந்து கொண்டேன்.
  ஸ்ரீனிவாஸ், பாரதி மணிக்கும் நாஞ்சிலாருக்கும் உள்ள பந்தத்தைப் பற்றிய தகவலுக்கு நன்றி!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.