எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (சின்ன பட்டியல்)

எஸ்.ரா.வின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். என் reference-களில் ஒன்று. நூறு சிறுகதையை எப்படி நினைவு வைத்துக் கொள்வது என்று யோசிப்பவர்களுக்காக இந்தப் பதிவு.

சமீபத்தில் எஸ்.ரா. மலேசியாவில் சிறுகதை பயிலரங்கு ஒன்றை நடத்தி இருக்கிறார். அங்கே பங்கேற்றவர்களுக்காக பத்து உதாரண சிறுகதைகளை வைத்து பாடம் நடத்தி இருக்கிறார். அந்தப் பட்டியல் கீழே:

  1. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன்
  2. அக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன்
  3. எங்கள் டீச்சர் – சுந்தர ராமசாமி
  4. பாயசம் – தி. ஜானகிராமன்
  5. மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
  6. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
  7. எஸ்தர் – வண்ணநிலவன்
  8. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
  9. சோற்றுக் கணக்கு – ஜெயமோகன்
  10. புத்தனாவது சுலபம் – எஸ்.ராமகிருஷ்ணன்

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: எஸ்.ரா. பக்கம், தமிழ் சிறுகதைகள், சிபாரிசுகள்

தொடர்புடைய சுட்டிகள்: எஸ்.ரா.வின் நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியல்