Skip to content

எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (சின்ன பட்டியல்)

by மேல் ஓகஸ்ட் 9, 2012

எஸ்.ரா.வின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். என் reference-களில் ஒன்று. நூறு சிறுகதையை எப்படி நினைவு வைத்துக் கொள்வது என்று யோசிப்பவர்களுக்காக இந்தப் பதிவு.

சமீபத்தில் எஸ்.ரா. மலேசியாவில் சிறுகதை பயிலரங்கு ஒன்றை நடத்தி இருக்கிறார். அங்கே பங்கேற்றவர்களுக்காக பத்து உதாரண சிறுகதைகளை வைத்து பாடம் நடத்தி இருக்கிறார். அந்தப் பட்டியல் கீழே:

 1. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன்
 2. அக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன்
 3. எங்கள் டீச்சர் – சுந்தர ராமசாமி
 4. பாயசம் – தி. ஜானகிராமன்
 5. மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
 6. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
 7. எஸ்தர் – வண்ணநிலவன்
 8. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
 9. சோற்றுக் கணக்கு – ஜெயமோகன்
 10. புத்தனாவது சுலபம் – எஸ்.ராமகிருஷ்ணன்

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: எஸ்.ரா. பக்கம், தமிழ் சிறுகதைகள், சிபாரிசுகள்

தொடர்புடைய சுட்டிகள்: எஸ்.ரா.வின் நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியல்

Advertisements
9 பின்னூட்டங்கள்
 1. நல்லதொரு தொகுப்பை பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா !

  Like

 2. ஆவணி ஒண்ணாம் தேதியிலிருந்து தினம் ஒரு சிறுகதை வாசிக்க வேண்டும் என்று எண்ணி வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் முதல்நாள் வாசித்த கதை. எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தனாவது சுலபம்’தான். இதில் உள்ள எல்லா கதைகளையும் இந்த வாரத்தில் வாசித்துவிடுவேன். இணைப்புடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

  Like

 3. பகிர்வுக்கு நன்றிகள். அதிலும் கதைகளின் விக்கிமூலம் மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றிகள் பல.

  Like

 4. இனியா permalink

  அம்மா ஒரு கொலை செய்தாள்-வாசித்து, நீண்ட நாட்கள் என்னை உலுக்கிய சிறுகதை.என் நண்பர்கள் அனைவரிடமும் ஓயாமல் இக்கதையைப் பற்றி பேசியுள்ளேன். அ.வெண்ணிலா எழுதிய “வெளிய”(தலைப்பு சரியா??) சிறுகதையும் இக்கதையின் கருப்பொருளை ஒட்டியே இருக்கும்.

  கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்,அக்கினிப் பிரவேசம்,புத்தனாவது சுலபம்,எஸ்தர்-எனக்கு பிடித்த சிறுகதைகள்.

  எங்கள் டீச்சர்,மரி என்கிற ஆட்டுக்குட்டி,புலிக்கலைஞன்-வாசிக்க வேண்டும்.

  Like

 5. இனியா, எனக்கு அம்மா ஒரு கொலை செய்தாள் ஒரு cliche ஆக தெரிகிறது. அதை விட பல சிறந்த கதைகளை அம்பை எழுதி இருக்கிறார் என்று karuthukIRen.

  சித்திரவீதிக்காரன், படித்த பிறகு எழுதப் போவதை எதிர்பார்க்கிறேன்.

  Like

 6. அருணா permalink

  ஆர்.வி – அம்மா ஒரு கொலை செய்தாள் cliche எனவா நினைக்கிறீர்கள்? முடிவு ஒரு விதத்தில் ஊகிக்கமுடிவது என்றாலும் அக்கதை மிக உக்கிரமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்னில். என் அம்மாவின் மதிப்பீடுகளை மறுபரீசீலனை செய்து பார்க்க வைத்தது. அம்மாவை பீடத்தில் இருந்து இறக்கி ஒரு தனி மனுஷியாக பார்க்க தோன்றியது எனவே சொல்லலாம். அம்பையின் கதைகளில் எனக்கு மிக பிடித்தது.

  கடவுளும் கந்தசாமி பிள்ளையும் தங்க ஒருவும் ஏதோ ஒரு விதத்தில் ஒரே மாதி என தோணுவதுண்டு.

  Like

 7. இனியா permalink

  RV,
  I go with Aruna.

  எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படித்திய கதை’ அம்மா ஒரு கொலை செய்தாள்.
  பெண் குழந்தைகள், அவர்களுக்கு எதிர்படக்கூடிய உடல் ரீதியான மாற்றங்களுக்கு மனதளவில் தயார்படுத்தபடுவது இல்லை(Atleast in our society) .திடீரென்று நடக்கும் மாற்றங்களால் களவரமடையும் அக்குழந்தை திரும்புவது தன் அன்னையை நோக்கியே!அங்கே தன் எதிர்பார்ப்பு உடையும் போது ஏற்படும் வலி,குழப்பம். இக்கதையில் நான் அதை உணர்ந்தேன் RV.
  உளவியல் ரீதியாக நிறைய யோசிக்க வச்ச கதை.

  Like

 8. அருணா, இனியா, அம்மா ஒரு கொலை செய்தாள் எனக்கு cliche ஆகத் தோன்றுவதற்கு நான் ஆணாக இருப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 🙂

  Like

 9. kesavamani permalink

  ஜெயகாந்தனின் அக்னி பிரவேசம் அந்த காலகட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இப்போது அது நம்மில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இன்று மனிதர்கள் மாறிவிட்டார்கள். இன்று மனிதனிடம் பொய்யும் வஞ்சனையும் குடிகொண்டுவிட்டது. எனவே அக்னி பிரவேசம் காலாவதியான ஒரு கதை.
  எஸ்.ராவின் உறுபசி படித்தேன். அதன் விமர்சனம் புத்தக அலமாரியில் காணலாம்: http://wp.me/p2NYDZ-7B

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: