காஜுலு லக்ஷ்மி நரசிம்ம செட்டியார் – முன்னோடி

காஜுலு லக்ஷ்மி நரசிம்ம செட்டியார் என்ற பேரை நான் முன்னால் கேட்டதே இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். ஆங்கில அரசு நிலைப்ப்படும்போது சட்ட ரீதியாக குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் தாதாபாய் நௌரோஜி என்று சொல்லலாம். கிழக்கிந்திய கம்பெனிக்கும் விக்டோரியா மகாராணிக்கும் பெட்டிஷன் போட்டது, பத்திரிகை நடத்தியது எல்லாம் குறிப்பிட வேண்டியவை. பெட்டிஷன்களில் பத்து பதினைந்தாயிரம் கையெழுத்துக்கள்! அந்தக் காலத்தில் இத்தனை பேரை ஒன்று சேர்த்து குரல் கொடுப்பது எத்தனை கஷ்டமாக இருந்திருக்க வேண்டும்! இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது, ஆனால் எந்த விவரமும் தெரியவில்லை. கூகிள் செய்து பார்த்தேன், மலர்மன்னன் எழுதிய ஒரு கட்டுரையில் இவரைப் பற்றி இரண்டு வரி வந்திருக்கிறது, அவ்வளவுதான். மலர்மன்னன் வார்த்தைகளில்:

அரசு அதிகாரிகள் ஆதரவுடன் மிஷனரிகளின் மத மாற்ற நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதைக் கண்டு ஹிந்துக்களின் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் காஜுலு லக்ஷ்மநரசு என்ற தெலுங்கு வணிகர் ‘க்ரெசன்ட்’ என்ற பெயரில் 1844-ல் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அவரது முயற்சிக்கு மெட்ராஸ் நேடிவ் அஸோசியேஷன் என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்தது. சென்னை வணிகர்கள் முன்னின்று நடத்திய இச்சங்கம், கிழக்கு இந்தியக் கம்பெனி வர்த்தகத்திற்கு விசேஷச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. 1858-ல் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து அதிகாரத்தை மேற்கொண்டு நேரடியாக ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டதால் க்ரெசென்ட்டின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. 1868-ல் லக்ஷ்மநரசு இறந்துவிட, அவரது பத்திரிகையும் நின்று போனது.

ந. சஞ்சீவி எழுதி இருக்கும் “இரு பெரும் தலைவர்” என்ற புத்தகம் ஒன்றும் பேசப்பட வேண்டியதில்லை. காஜுலுகாருவைப் பற்றி விவரங்கள் இல்லை என்றால் இந்தக் குறிப்பே கூட வந்திருக்காது. புத்தகத்தை இணைத்திருக்கிறேன். காஜுலுகாருவைப் பற்றி தெரிந்தவர்கள் எழுதுங்களேன்!

பதிவர் ராமநாதன் காஜுலுகாருவைப் பற்றி இன்னொரு சுட்டி கொடுத்திருக்கிறார், அதில் நிறைய விவரங்கள் இருக்கின்றன. அவருக்கு நன்றி! நானும் இணையத்தில் தேடிப் பார்த்தேன், எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. எப்படி கிடைக்கும், நான் தேடியது Kajulu-காரு. அவரோ Gazulu! தெலுகில் z ஒலி கிடையாது, அது என்ன Gazulu என்று தெரியவில்லை.

சஞ்சீவியின் இரண்டாவது பெரிய தலைவர் சேலம் ராமசாமி முதலியார். உ.வே. சாமிநாதய்யரை ஜீவக சிந்தாமணியைத் தேட வைத்ததே இவர்தான். முதலியார் பற்றி உ.வே.சா. தனது சுயசரிதையில் சொன்னதையே சஞ்சீவி ஏறக்குறைய திருப்பி எழுதி இருக்கிறார், அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சஞ்சீவியின் புத்தகம் – மின்னூல்
மலர்மன்னன் கட்டுரை
Madras Ramblings கட்டுரை

11 thoughts on “காஜுலு லக்ஷ்மி நரசிம்ம செட்டியார் – முன்னோடி

    1. ராமநாதன், உங்கள் மறுமொழிக்கு நன்றி! நான் Kajulu-காருவைப் பற்றி தேடித் பார்த்து ஒன்றும் இல்லை என்று நினைத்துவிட்டேன், அவர் பேர் Gazulu என்பது உங்கள் உதவியால்தான் தெரிய வந்தது.

      Like

  1. Talking about Gazulu, in one of my mail interactions with a professor in Australia (in another context), he remarked that, “In Anantapur district, Gutturu was the singular village that manufactured glass and hence came to be known as Gãzulu Gutturu, the term gãzulu referring to glass.”

    Like

  2. அன்புள்ள ஸ்ரீ ஆர்.வி., சில நணபர்கள் சொன்னதன் பேரில் உங்களுடைய இந்த தளத்தைப் பார்த்தேன். ஸ்ரீ லக்ஷ்ம நரசு பற்றிய உங்கள் ஆதங்கம் நன்கு புரிகிறது. காஜுலு என்றால் வளையல்தான். வாணியச் (எண்ணெய்) செட்டியார் என்பதுபோல அவர் வளையல் செட்டியார் பரம்பரை. நான் எழுதிய கட்டுரை நம்ம சென்னை என்ற பத்திரிகைக்காக. அதில் மிகவும் விரிவாக எழுத இடம் போதாது. எனவே சுருக்கமாகத்தான் அவரைப் பற்றிக் குறிப்பிட முடிந்தது. சென்னையின் முன்னோடி ஹிந்து சமூக நல இயக்கங்களென்ற தலைப்பில் தனி நூலே எழுதத்தொடங்கினேன். அதில் லக்ஷ்ம நரசு பற்றி நிறையவே தகவல்கள் உண்டு. ஆனால் வேறு பல அவசர எழுத்து வேலைகள் குறுக்கிட்டு விட்டன. திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் எழுதி முடிப்பதற்குள் சுவாமி விவேகானந்தரின் டாக்டர் சீடர் என்ற தலைப்பில் எம் ஸி நஞ்சுண்ட ராவ் பற்றி ஸ்ரீ ராம கிருஷ்ண மடத்துக்கு ஒரு புத்தகம் எழுதிக் கொடுக்கும்படி ஆயிற்று. அதை முடித்துக்கொடுப்பதற்குள் சிந்தனையாளர் ராமலிங்கர் என்ற தலைப்பில் வடலூர் வள்ளலார் பற்றி எழுதித் தரும்படி நிர்பந்தம் செய்து எழுதவும் ஆரம்பித்தாயிற்று. அதற்குள் யோகி ராம்சூரத் குமார்ஜி பற்றி எழுதித் தாருங்கள் என்று ஒருவர் கேட்கத் தொடங்கி விட்டார். கிழக்குப் பதிப்பகத்தின் ஆழம் மாத இதழ், நம்ம சென்னை மாத இதழ் ஆகியவை என் எழுத்து பயன் தருவதாக இருக்கும் எனக் கருதுவதால் அவற்றுக்கும் எழுதி வருகிறேன். எப்படியும் லக்ஷ்ம நரசு பற்றி விரிவாகவே எழுதிவிடுவேன். எனது விருப்பம் சென்னையின் முன்னோடி ஹிந்து இயக்கங்கள் என்ற தலைப்பில் தனிப் புத்தகமே எழுத வேண்டும் எனபதே. அந்த அளவுக்கு என்னிடம் தகவல்கள் உள்ளன. அதே சமயம் நலிந்துபோன இந்த சரீரத்தைத் தூக்கி எறியவும் துடிதுடிக்கிறேன்! சிகிச்சை செய்துகொள் என அனைவரும் வற்புறுத்துகிறார்கள். எனக்குச் சலிப்பாய் இருக்கிறது. மருத்துவச் செலவைப் . பார்த்தால்
    போயும் போயும் எதற்காக இந்த வீண் செலவு என்று தோன்றுகிறது. அதுவும் நிதி வசதி எதுவும் இல்லாத நான் எதற்காக சிரமப்பட்டு இப்படிக் காசை வீணடிக்க வேண்டும்? ஒருவிதத்தில் பணம் இல்லாததே நல்லதாகத் தெரிகிறது. மருத்துவ சிகிச்சை என்ற சாக்கில் பண விரயம் செய்ய வேண்டியிருக்காது அல்லவா?
    அன்புடன்,
    மலர்மன்னன்

    Like

    1. மலர்மன்னன், உங்களை இந்தத் தளத்தில் பார்ப்பது மகிழ்ச்சி!

      என்ன இது நீங்களா இப்படி விரக்தியோடு பேசுகிறீர்கள்? உங்கள் உற்சாகமும் ஊக்கமும் உங்களை விட சிறிய வயதினனான எனக்கே கிடையாது, நீங்களே இப்படி அலுத்துக் கொண்டால் எப்படி?

      Like

  3. இதில் விரக்தி எங்கே வந்தது? மற்றவர்கள் கட்டாயப் படுத்துகிறார்களே என்பதற்காக ஏன் பழுதாகிப் போன கருவியைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் எனச் சொல்கிறேன் அவ்வளவுதானே? இப்பொழுதும் இடைவிடாது இக்கருவியைப் பயன்படுத்திக்கொண்டுதன் இருக்கிறேன். சிந்தனையாளர் ராமலிங்கர் எழுதி முடியும் தறுவாயில் உள்ளது.

    Like

    1. மலர்மன்னன், உங்கள் உற்சாகத்தை வியப்பவன் நான். என் வாழ்த்துக்கள்! புதிய புத்தகங்கள் வெளிவரக் காத்திருக்கிறோம்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.