Skip to content

கி.வா. ஜகன்னாதன்

by மேல் ஓகஸ்ட் 15, 2012

கி.வா.ஜ. உ.வே.சாமிநாதய்யரின் சீடர். சம்பிரதாயமான தமிழ் பண்டிதர். சிலேடையாகப் பேசுவதில் வல்லவராம். ‘சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.‘ என்று அவரது சிலேடைப் பேச்சை ஒரு புத்தகமாகவே போட்டிருக்கிறார்கள். கலைமகள் ஆசிரியராக வெகு நாள் இருந்தவர். வீரர் உலகம் என்ற புத்தகத்துக்காக சாஹித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அவரது புத்தகங்கள் பொதுவாக ஏதாவது சங்கக் கவிதை விளக்கமாகவோ, அல்லது முருகன் துதி விளக்கமாகவோ இருக்கும். சம்பிரதாயமான இலக்கிய விளக்கம் எல்லாம் நமக்கு கொஞ்சம் தூரம், ஜெயமோகன் மாதிரி ஆள்தான் சரிப்பட்டு வருகிறது. அவரை மறந்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன். அவரது சில புத்தகங்களை கொஞ்சம் தம் கட்டிப் பிடித்தேன். அவற்றைப் பற்றி:

புது மெருகு: பல தொன்மக் கதைகள் – எல்லாம் புலவர்கள் பற்றியது. தொல்காப்பியரிலிருந்து ஆரம்பிக்கிறது. எனக்குப் பிடித்திருந்தது.

தமிழ்த் தாத்தா: உ.வே.சா.வைப் பற்றிய சம்பிரதாயமான வாழ்க்கை வரலாறு. இதை விட உ.வே.சா.வின் சுயசரிதையையே படித்துக் கொள்ளலாம்.

என் ஆசிரியப்பிரான்: உ.வே.சா.வைப் பற்றிய துதி நூல் என்றே சொல்லலாம். கி.வா.ஜ.வைப் பற்றியும் குறை சொல்வதற்கில்லை, உ.வே.சா. அவருக்கு ஏறக்குறைய தெய்வம்தான். ஆனால் உபயோகமான தகவல்கள் எதுவும் இல்லை, உ.வே.சா.வை யார் பாராட்டினார்கள், என்ன சொன்னார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்: கி.வா.ஜ.வுக்கு கல்கியே தமிழ் நாவலின் உச்சம். அவரது கருத்துகளை இன்றைக்கு பொருட்படுத்த வேண்டியதில்லைதான், ஆனால் ஓரளவு ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான பல தமிழ் நாவல்களைப் பற்றி கொஞ்சம் விவரம் கிடைக்கிறது.

வாருங்கள் பார்க்கலாம்: பாடல் பெற்ற சிவஸ்தலங்களை சுற்றிப் பார்த்திருக்கிறார். சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருவாமூர், திருவெண்ணெய்நல்லூர், திருவதிகை என்று பல ஸ்தலங்கள். எனக்கும் இப்படி கோவில் கோவிலாக சுற்ற வேண்டும் என்று இப்போதெல்லாம் ஒரு ஆசை இருக்கிறது. ஜெயமோகனால் வந்த வினை.

சிறுகதைகளையும் முயற்சித்திருக்கிறார். கலைஞனின் தியாகம் என்று ஒன்று கிடைத்தது. எதுவும் குறிப்பிடும்படி இல்லை.

என் கண்ணில் கி.வா.ஜ. பொருட்படுத்தப்பட வேண்டிய ஆசிரியர் இல்லை. ஆனால் அவர் போன்ற பண்டிதர்கள் தேவை. இல்லாவிட்டால் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றி யாரிடம் போய் கேட்பது? கலைமகள் ஒரு காலத்தில் நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதைகள், நாவல்களைப் பதித்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (எழுபதுகளில் அப்படி எல்லாம் இல்லை.) அதற்கு அவரது பங்களிப்பும் இருந்திருக்கும். அவர் வீடு சென்னை மந்தவெளியில் இருந்தது. சிறு வயதில் ஒரு முறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். நான் பார்த்த முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான். அதற்கப்புறம் நான் தமிழ் எழுத்தாளர்கள் பக்கம் தலை வைத்துப் படுக்க ரொம்ப நாளாயிற்று. 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

Advertisements

From → Tamil Authors

4 பின்னூட்டங்கள்
 1. கிவாஜ பற்றிய குறிப்பு இப்போதைய காலத்துக்கு தேவையான ஒன்று என எண்ணுகிறேன். அவர் நூல்களைப் பற்றிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரே ஒரு நெருடல். கட்டுரை முழுதும் எள்ளல் தொனி இருந்தது. அதை தவிர்த்திருக்கலாம். நன்றி.

  Like

 2. பகிர்வுக்கு மிக்க நன்றி சார்…

  Like

 3. ஆர்.வி.

  நீங்கள் அவரது “விடையவன் பதில்கள்” நூலைப் படித்ததில்லையா? அது ஒரு இலக்கியப் பொக்கிஷம் என்று சொல்லலாம். அவருடைய “புது டயரி” “தேன்பாகு” உள்ளிட்ட சில நூல்களைப் படித்திருக்கிறேன். ”பட்டையச் சாத்திட்டான், நாமம் போட்டுட்டான், பூச்சாண்டி” என்பன போன்று மக்கள் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுக்கு, பழமொழிகளுக்கு ஆராய்ந்து விளக்கம் கூறியிருக்கிறார். ”அநுத்தமா” உள்ளிட்ட பல எழுத்தாளர்களை ஆதரித்தவர்; ஊக்குவித்தவர்.

  முந்தைய கால கட்ட இலக்கிய வளர்ச்சியில் இவருக்கு நல்லதொரு பங்கிருப்பதை மறுப்பதற்கில்லை.

  உங்கள் இந்தக் கட்டுரையில் சற்றே கிண்டல் தொனிக்கிற மாதிரி இருக்கிறது ஏனோ?.

  😦

  Like

 4. ஹேம்கன், எள்ளல் தொனி இருந்தால் அது என்னை அறியாமல் வந்தது. தமிழ் பண்டிதர்கள் மீது எனக்கு கொஞ்சம் அலர்ஜி!
  ரமணன், நீங்கள் சொல்லும் புத்தகங்களை நான் படித்ததில்லை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: