வா.மு. கோமு எழுதிய “கள்ளி”

இந்த நாவலின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமானது. பின் நவீனத்துவ நாவலில் காலம் முன்பின்னாக இருந்தாலும், கதை என்று ஒன்று தொடர்ச்சியாக இருக்கும். இதையோ பத்து தொடர்புள்ள சிறுகதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். கோமு கள்ளி # 1, 2, 3… என்று இந்த சிறுகதைகளை வரிசைப்படுத்துகிறார். அவை காலவரிசைப்படித்தான் நடக்கின்றன. ஒரு கள்ளியில் வரும் பாத்திரங்கள் பிறவற்றிலும் வருகின்றன. ஒரே கிராமத்தில்தான் நடக்கின்றன். ஆனால் இவற்றை எல்லாம் இணைக்கும் கண்ணி என்று ஒன்று இல்லை.

ஆனாலும் புத்தகம் படு சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு கள்ளியும் பாத்திரங்களின் சித்தரிப்புதான். அறுப்பு வேலை செய்பவர்களை கூலியில் ஏமாற்றப் பார்க்கும் முத்தாக் கவுண்டர், அவரிடம் பண்ணையம் பார்க்கும் மல்லி, ஊர் மேயும் மைனர்கள் சுரேந்திரன் மற்றும் பழனிச்சாமி, சுரேந்திரனின் ஓய்வு பெற்ற வாத்தியார் அப்பா சரக்கு அடித்துவிட்டு பண்ணும் அழும்பு, ஊரில் முடிச்சு போட்டுவிடும் வண்ணான் ராமசாமி, முத்தாக் கவுண்டரின் பெண்ணோடு ஓடிவிடும் மல்லியின் மகன் சண்முகம், படுக்கத் தயாராக இருக்கும் சிகாமணி, சுந்தரி, விஜயா என்று பல பெண்கள் என்று பாத்திரங்களின் சித்தரிப்புதான். அது பிரமாதமாக இருக்கிறது. தண்ணி அடிப்பதும், பெண்ணுக்கும் ஆணுக்கும் அலைவதும் நிறைய. பச்சை பச்சையாக பேசுகிறார்கள், திட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அது வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

கதையின் களம் ஒரு வாய்ப்பாடி என்ற ஒரு சின்ன கிராமம். திருப்பூர், சென்னிமலை அருகில். “கீழ்” சாதியினரான மாதாரிகள் திருப்பூரில் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள். நாவிதர்கள் வீட்டுக்கு வராமல் சலூன் வைக்கிறார்கள். கவுண்டனை விட்டால் சாப்பாட்டுக்கு வழியில்லை என்ற நிலை இல்லை. மாறாக கவுண்டர்களுக்கு வேலைக்கு ஆள் தேடுவதில் கொஞ்சம் சிரமம். கவுண்டர்களின் பாலியல் மீறல்கள் நிறைய என்றாலும் மாதாரிகளுக்கும் கவுண்டர் பெண்களோடு உறவு இல்லாமல் இல்லை. பழைய ஜாதி சார்ந்த பொருளாதாரம் உடைய ஆரம்பித்திருப்பது நாவலின் பின்புலமாக இருக்கிறது.

கதையின் பலம் பலவீனம் இரண்டுமே அது சித்தரிப்போடு நின்றுவிடுகிறது என்பதுதான். அருமையான சித்தரிப்பு என்றாலும் நாலைந்து கள்ளிக்குப் பிறகு கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. கூறியது கூறல்!

கோமு ஆர். சண்முகசுந்தரம், சி.ஆர். ரவீந்திரன், பெருமாள் முருகன் பரம்பரைக்காரர். எனக்கு இவர்களில் பெ. முருகன்தான் டாப் என்றாலும் கோமுவுக்கும் நிச்சயமாக இடம் உண்டு.

கள்ளி உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 120 ரூபாய். வாங்கலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

எட்றா வண்டியை என்ற இன்னொரு நாவலும் கிடைத்தது. சாமிநாதன் விரும்பும் பெண்கள் எல்லாரும் அவனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தட்டிப் போகிறார்கள். படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.

பிற்சேர்க்கை: கோமுவின் சில கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. எனக்கு எந்தக் கதையும் பிரமாதமாகத் தெரியவில்லை. பிலோமி டீச்சர் கள்ளியின் தொடர்ச்சி மாதிரியே இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்: வா.மு. கோமுவின் தளம்

9 thoughts on “வா.மு. கோமு எழுதிய “கள்ளி”

 1. பரவாயில்லையே…வா.மு.கோமுவின் எழுத்துக்களையும் ரசிக்க ஆரம்பித்து விட்டீர்கெளே. இவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்பு படித்தேன். சில கதைகள் பரவாயில்லை, மற்றபடி ஏனோ என்னைக் கவரவில்லை. இவருடைய கூட்டாளி கன்னிவாடி சிவகுமார் மிக நன்றாக எழுதுகிறார். இவருடைய எழுத்தில் என்னவோ இடிக்கிறது. ஷண்முகசுந்தரம், பெருமாள் முருகனோடு எல்லாம் தயவு செய்து இவரை ஒப்பிடாதீர்கள்.

  Like

 2. இவரது எழுத்துக்கள் ஒரு மாதிரி கிண்டலாக, நல்ல பகடியோடு இருப்பதை ரசித்திருக்கிறேன். ஆனால் ’பகடி’ மட்டும் இலக்கியம் ஆகி விடாதே! இவரது சிறுகதைகள் பலவற்றில் ’ஆழம்’ இல்லை என்பது என் கருத்து. என்னைப் பொறுத்தவரை ‘லைட் ரீடிங்’ ஆகவே இருக்கிறது.

  இவரது சமகால எழுத்தாளர்களான கீரனூர் ஜாகிர் ராஜா, க.சீ. சிவகுமார் இவர்களது படைப்போடு ஒப்பிடும்போது இவரது எழுத்தில் ’ஜீவன்’ குறைவுதான்.

  திறமையான எழுத்தாளர்தான். ஆனால் சீரியஸான பார்வை கொண்ட எழுத்தாளர் இல்லையோ (அல்லது விடலைப்பருவ குறும்பு கொண்டவரோ) என்று எனக்குப் படுகிறது. இது எனது கருத்து மட்டுமே.

  Like

  1. ரமணன், வா.மு. கோமுவின் எழுத்தில் ஆழம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் உண்மை இருக்கிறது, அதுவே என்னைக் கவர்கிறது.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.