Skip to content

சுப்ரபாரதிமணியன் தேர்வுகள்

by மேல் ஓகஸ்ட் 29, 2012

சுப்ரபாரதிமணியனின் ஒரு பதிவிலிருந்து கட் பேஸ்ட் செய்தது.

தமிழின் சில முக்கிய நாவல்கள்

 1. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
 2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்ஜெயகாந்தன்
 3. ஒரு நாள் – க.நா. சுப்ரமணியம்
 4. மோகமுள் – தி. ஜானகிராமன்
 5. ஒரு புளிய மரத்தின் கதைசுந்தர ராமசாமி
 6. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்
 7. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
 8. மானசரோவர் – அசோகமித்திரன்
 9. வெக்கைபூமணி
 10. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
 11. துறைமுகம் – தோப்பில் முகமது மீரான்
 12. காகித மலர்கள் – ஆதவன்
 13. சாயாவனம் – சா. கந்தசாமி
 14. புயலில் ஒரு தோணி – ப. சிங்காரம்
 15. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
 16. தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில்நாடன்
 17. வாக்குமூலம் – நகுலன்
 18. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
 19. மண்ணகத்துப் பூந்துளிகள் – ராஜம் கிருஷ்ணன்
 20. செடல் – இமயம்
 21. யாமம் – எஸ். ராமகிருஷ்ணன்
 22. ரப்பர்ஜெயமோகன்
 23. மூன்று விரல் – இரா. முருகன்
 24. அலெக்சாண்டரும், ஒரு கோப்பைத் தேனீரும் – எம்.ஜி. சுரேஷ்
 25. மணியபேரா – சி.ஆர். ரவீந்திரன்
 26. நல்ல நிலம் – பாவை சந்திரன்
 27. கங்கணம்பெருமாள் முருகன்
 28. ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
 29. நீர்த்துளி – சுப்ரபாரதிமணியன்

கடந்த ஆண்டின் (2011) சில சிறந்த நாவல்கள்

 1. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ. முத்துலிங்கம்
 2. கொற்கை – ஜோ டி குரூஸ்
 3. ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்
 4. கால்கள் – அபிலாஷ்
 5. நிழலின் தனிமை – தேவிபாரதி
 6. கண்ணகி – தமிழ்ச்செல்வி
 7. வல்லினமே மெல்லினமே.. – வாசந்தி
 8. மறுபக்கம் – பொன்னீலன்
 9. படுகளம் – ப.க. பொன்னுசாமி
 10. குவியம் – ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)
 11. விடியல் – அ. ரங்கசாமி (மலேசியா)
 12. சூதாட்டம் ஆடும் காலம் – ரெ.கார்த்திகேசு (மலேசியா)

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தக சிபாரிசுகள்சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: சுப்ரபாரதிமணியன் தளம்

4 பின்னூட்டங்கள்
 1. நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி…

 2. ரெங்கசுப்ரமணி permalink

  மானசரோவர் சமீபத்தில் படித்த புத்தகம். சினிமா பிண்ணணியில் ஒரு அற்புதமான கதை. இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள், மாறி மாறி இருவரின் பார்வையில் செல்லுகின்றது. வழக்கமான எனது வாசிப்புப் படி, வரிகளை தாண்டி தாண்டி படிக்க முற்பட்டு தோல்வியடைந்தேன். ஒவ்வொரு வரியும் கதையில் தவிர்க்க முடியாத பங்கு. ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை சர்வ சாதரணமாக ஒரு வரியில் கூறிவிட்டு, உடனே அடுத்த நிகழ்ச்சிக்கு செல்கின்றார். நிறைய எழுதலாம்,

  வானம் வசப்படும் & மானுடம் வெல்லும், அனைவராலும் பாராட்டப்படும் இந்த இரண்டும் வாங்கி வைத்து படிக்க முடியவில்லை. கதையின் உள்ளே போகவே முடியவில்லை. ஏகப்பட்ட பெயர்கள், துண்டு துண்டான கதைகள். கொஞ்சம் எரிச்சலூட்டும் நடை. இதில் அவரின் முன்னுரை வேறு, சரித்திர நாவல் இல்லை என்ற வசை என்னால் போனது. பொறுமையாக படிக்க வேண்டும் போல

  புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் இரண்டும் சேர்ந்து ஒரே புத்தகமாக கிடைக்கின்றது. கதையின் கால வரிசைப்படி புயல் முதலிலும் கடல் இரண்டாவதாகவும் வருகின்றது. ஆனால் புத்தகத்தில் மாறி உள்ளது, இதனால் கடலை முதலில் படித்தால், பாதி வார்த்தைகள் புரிவதில்லை, அனைத்திற்கும் விளக்கம் அடுத்த கதையில் உள்ளது. மறுபடியும் முழுதாக படித்தால் தான் புரியும் போல

  மோகமுள் முதலில் படிக்கும் போது, ஒரு இசையை கேட்பது போன்ற நினைவுதான். கதையில் அடித்தளம் இசையும் காதலும். சினிமாவில் இசை இளையராஜாவுடன் நின்றுவிட்டது, கதையில் காணோம்.

  ரத்தம் ஒரே நிறம் சுஜாதாவின் வித்தியாசமான முயற்சி. ஜீபூம்பா ஹீரோ இல்லாத சரித்திர கதை. வழக்கமாக பிரிட்டீஷார் ஜெயித்த கதைகளையே கேட்டு கேட்டு, அவர்களும் சிலதடவை மண்ணை கவ்வினார்கள் என்பதை படிக்க திருப்தியாக உள்ளது

  மற்ற புத்தகங்களை பற்றி படித்தவர்கள் கூறினால் வாங்கிபடிக்கலாம். புது புத்த்கத்தை பார்த்தால், முதலில் வந்து இங்கு செக் செய்வது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. சைடில் ஒரு இன்டெக்ஸ் போட்டு விடுங்கள் புத்தகவரிசைக்கும், எழுத்தாளர்களுக்கும்.பலருக்கு உதவும், முக்கியமாக எனக்கு:)

 3. கொஞ்சப் புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு ஆளுமைகளின் பட்டியல்களைப் பார்க்கும்போது இன்னும் வாசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இன்றுதான் மதுரை புத்தகத்திருவிழாவில் ஜெயமோகனின் ‘காடு’ நாவல் வாங்கியிருக்கிறேன்.

 4. சித்திரவீதிகாரன், நீங்கள் எழுதப்போவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  ரெண்கசுப்ரமணி, மானசரோவர், ரத்தம் ஒரே நிறம் இத்யாதி பற்றி இங்கே எழுதுகிறீர்களா? சரி என்றால் rv டாட் subbu அட் ஜிமெயில் என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: