Skip to content

சுஜாதாவின் “தங்க முடிச்சு”

by மேல் செப்ரெம்பர் 19, 2012

சின்ன முடிச்சுதான், literally. கதையின் மர்மம் எல்லாம் ஜுஜுபிதான். அதை வைத்து ஒரு சுவாரசியமான கதையை எழுதி இருக்கிறார். பலமான அம்சம் சினிமா உலக சித்தரிப்புதான். தயாரிப்பாளர், கதாசிரியர், சின்ன நடிகை, துப்புத் துலக்கும் இன்ஸ்பெக்டர் என்று பல நம்பக் கூடிய பாத்திரங்கள். கரைந்த நிழல்கள் லெவலில் இல்லை என்றாலும் நுட்பமான அவதானிப்பு.

நடிகை மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள். அவளைப் பார்க்கப் போகும் கொஞ்சம் அப்பாவியான கதாசிரியன் பயந்து ஓடிவிடுகிறான். போலீசுக்கு தகவல் சொல்லவில்லை. போலீஸ் சுலபமாக அவன் அங்கே போனதைக் கண்டுபிடித்து அவனை போட்டு தாளிக்கிறது. Red Herring என்று சொல்லுவார்கள். ஒரு பாத்திரம் சந்தேகத்துக்குரியதாக இருக்கும், திடீரென்று அந்தப் பாத்திரம் குற்றவாளி இல்லை என்று தெரியும். அப்புறம் அடுத்த பாத்திரம், அடுத்த பாத்திரம் என்று போய்க்கொண்டே இருக்கும். இங்கேயும் அப்படித்தான். தயாரிப்பாளர் மேல் சந்தேகம். அவரும் அந்த நடிகையும் சந்தோஷமாக ஊர் சுற்றும் ஃபோட்டோ எல்லாம் கிடைக்கிறது. அவர் அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டிருந்தார், பிரச்சினை ஆகும்போது கொன்றுவிட்டார் என்று சந்தேகிக்கிறார்கள். அவரோ அவள் என் இரண்டாம் மனைவி, என்னிடம் ஃபோட்டோ கூட இல்லை, அந்த ஃபோட்டோவை நீ யாருக்கு வேண்டுமானாலும் கொடு, எனக்கும் ஒரு காப்பி கொடு, அவள் ஞாபகமாக என்னிடம் ஒன்றுமே இல்லை என்கிறார். பிறகு அவரது முதல் மனைவி மேல் சந்தேகம், அப்புறம்… என்று கதை போகிறது. கடைசியில் சுலபமாக முடிச்சு அவிழ்கிறது.

சுவாரசியமான குற்றப் பின்னணி உள்ள நாவல். எனக்குத் தெரிந்து இந்த genre-இல் சுஜாதாவை அடித்துக் கொள்ள இன்னும் தமிழில் யாரும் வரவில்லை. இந்த நாவலிலும் நல்ல பாத்திரப் படைப்பு இருப்பதுதான் சுஜாதாவின் ட்ரேட்மார்க் பலம். படிக்கலாம்.

NHM தளத்தில் கிடைக்கிறது. விலை 60 ரூபாய்.

தொடர்புடைய பக்கம்: சுஜாதா பக்கம்

Advertisements

From → Sujatha

3 பின்னூட்டங்கள்
  1. சுஜாதாவின் “தங்க முடிச்சு” மிகவும் அருமை …..பகிர்வுக்கு நன்றி…..

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Like

  2. முடிச்சுப் போடுவதிலும் அதை அவிழ்ப்பதிலும் சுஜாதாவுக்கு நிகர் யார்?

    சுஜாதாவின் வழக்கமான பாணி நாவல் தான். ஆனால் அவர் அதைச் சொல்லு விதமும் அதன் நேர்த்தியும் இது போன்ற அவர் எழுதிய அத்தனை நாவல்களையும் படிக்கத் தூண்டுகிறது.

    நீங்கள் சொல்வது போல் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளின் சுஜாதாவின் இடத்தை நிரப்ப இன்னமும் யாரும் வரவில்லை. இனிமேலும் வருவார்கள் என்பது சந்தேகம் தான்.

    சுஜாதா, சுஜாதா தான். 🙂

    Like

  3. உங்கள் பணி இனிதே சிறக்க என் வாழ்த்துக்கள்…

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: