Skip to content

சுஜாதாவின் “ஆ!”

by மேல் ஒக்ரோபர் 13, 2012

இன்னொரு கணேஷ்-வசந்த் கதை.

விகடனில் தொடர்கதையாக 1992-இல் வந்தது. ஒவ்வொரு இதழிலும் வலிந்து “ஆ” என்ற வார்த்தையோடு முடிக்கிறார். தொடர்கதையாகப் படிக்கும்போது இது சுவாரசியமான உத்தியாக இருந்திருக்கலாம். மொத்தமாகப் படிக்கும்போது அலுப்பு தட்டுகிறது.

தினேஷ்குமாருக்கு மண்டையில் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. மாடியிலிருந்து கீழே குதி, பால்கனியிலிருந்து குதி, பஸ்சுக்கு முன் காரைத் திருப்பு என்றெல்லாம். தற்கொலை நடக்காமல் தப்பிப்பது அதிர்ஷ்டம்தான். CAT scan, மருந்து மாத்திரை, மனநிலை மருத்துவம், சாமியார், கோவில்-குளம் என்று எல்லா விதமான ட்ரீட்மெண்ட்டும் எடுத்துப் பார்க்கிறான். கடைசியில் ஏதோ முன் ஜென்ம நினைவு என்று அவனுக்குத் தெளிவாகிறது. அவன் உடலில் ஜெயலட்சுமி டீச்சரின் கணவன் சர்மாவின் ஆவி புகுந்து கொள்கிறது. தன்னைக் கொன்ற ஜெயலட்சுமியின் மறுபிறவியும், தினேஷின் மனைவியுமான தேவகியைக் கொன்றுவிட்டு வெளியேறிவிடுகிறது. தினேஷ் நார்மல்! கணேஷ்-வசந்த் கொலையின் போது சுயநினைவில் இல்லை என்று வாதிட்டு விடுதலை வாங்கிக் கொடுக்கிறார்கள். அப்புறம் எதிர்பார்க்கக் கூடிய முடிவு.

லாஜிக் நிறைய உதைக்கிறது. சர்மாதான் அந்தக் குரல். சர்மாவுக்கு தேவகியைக் கொலை செய்வதுதான் குறி. அப்புறம் தினேஷைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவானேன்? தினேஷ் போய்விட்டால் தேவகியை ஆவியால் கொல்ல முடியாதே!

தினேஷின் மன உளைச்சல்கள் நன்றாக வந்திருக்கும்.

சுமாரான கதைதான். நல்ல தொடர்கதை என்று சொல்லலாம். கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.

நூல் உலகம் தளத்தில் கிடைக்கிறது, கிழக்கு வெளியீடு. விலை 120 ரூபாய். 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: சுஜாதா பக்கம், கணேஷ்-வசந்த் பக்கம்

Advertisements
5 பின்னூட்டங்கள்
 1. இதையும் தொடர்கதை போல் ஒரு நாளைக்கு ஒரு அந்தியாயமாக படித்துப் பார்க்கவும். கதை சரியான விறுவிறுப்பு. தினேஷ் புலம்புவது, அவனுக்கு வரும் நினைவுகள், குரல்கள் எல்லாம் நல்ல திரில்லர். இதன் முன்னுரையும் சுவாரஸ்யம், இக்கதையின் கதாநாயகன் எனக்கூறிக்கொண்டு அவர் வீட்டிற்கு வந்தவரைப் பற்றி கூறியுள்ளார். இதன் பிடிஎஃப் என்னிடம் உள்ளது.

  “https://www.opendrive.com/files/M18zMTM5MTA1X1E1SGd6XzhjZjk/Aah.pdf”

  ஒரே உறுத்தல், வலிந்து திரிக்கப்பட்ட “ஆ”.

  Like

  • ரெங்கசுப்பிரமணி/ரமணன், நீங்கள் சொல்வது மிகச்சரி. தொடர்கதையாகப் படிக்கும்போது ஓட்டைகள் தெரியாது.

   Like

 2. எனக்கு மிகவும் பிடித்த சுஜாதாவின் கதைகளில் இதுவும் ஒன்று. தொடராக வந்தபோதே பரபரப்புடன் படித்திருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் வரும் ’ஆ’ பொருத்தமாக இல்லை என்றாலும் நாவல் படிக்கப் படிக்க அலுப்புத்தட்டவேயில்லை. புத்தகமாக வந்த பின் மீண்டும் வாங்கிப் படித்தேன். அதுவும் அந்த முடிவு லாஜிக்கை மீறி இருந்தாலும் எதிர்பாராதது. சுஜாதா, சுஜாதா தான் என்பதை நிரூபித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

  அதுசரி ஆர்வி, நீங்கள் “:உடல், பொருள், ஆனந்தி” படித்திருக்கிறீர்களா?

  Like

 3. Chandraprabha permalink

  அன்புள்ள ஆர்வீ

  (சார் என்று அழைக்கவில்லை)

  மிக்க நன்றி. ஒத்துகொள்கிறேன் . தொடர்கதையாக வந்த போது இந்த தொடர் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனாலும் முடிவில் அந்த நர்சே (ஜயலக்ஷ்மியின் ஆவி வடிவில்) ஹீரோவை கொலை பண்ணுகிற மாதிரி காண்பிப்பது கொஞ்சம் அப்சுர்ட் அக தோன்றியது. பட் தினேஷ் குமார் திருச்சி சென்று ஒரு வயதானவரை சந்திப்பது எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்ததது. கடற்கரையில் விஷம் கொடுப்பது , சர்மா ஜெயலட்சுமியை படுத்தும் பாடு, அவளை சந்தேகப்படுவது, படிக்கும் போது மனசில் வலியை கொடுத்தது என்னவோ வாஸ்தவம்.
  ஆனால் ஜெயலட்சுமியை விரும்பும் மாணவன் தான் தினேஷ் என்று நினைக்கிறேன். போன ஜென்மத்தில் ஜெயலட்சுமியை விரும்பிய அவள் ஸ்டுடென்ட் தான் இந்த ஜென்மத்து தினேஷ் குமார். இதனால் தான் சர்மாவின் ஆவி தினேஷ் குமாரை கொலை பண்ணத் துடிக்கிறது. இதற்கு பதிலாக ஜயலக்ஷ்மியின் ஆவி தினேஷ் குமார் உடம்பில் உள்ள சர்மாவை கொலை பண்ணுகிறது. சம் சர்ட் ஒப் redemption

  ஆனால் கதை வந்த போது அதை நான் விரும்பி படித்தேன் என்பது உண்மை.

  மண்டைக்குள் குரல் கேட்பது என்பது –

  what is now commonly known as OCD – Obsessive Compulsive Disorder. This is remedied through hypnotherapy and meditation. From what I know it results through stress mostly for people who are overtly sentimental or sensitive. But for those who are suffering life is definitely hell. Kanchi Maha periyava has only solution to this – Do sandhya vandanam regularly or chant the gayatri mantra.

  The problem here is people start resisting negative thoughts, then they are only thinking about it and focusing on it and it becomes a habit of sorts. People who have a nasty boss, or those who suffer job loss get succumbed by fear like this.

  அதனால் தான் மனதைக்கட்டுபடுத்துவது என்பது மிக்க அவசியம் ; சந்த்யா வந்தனம் சிறப்பு மருந்து ; தியானம் முக்கியம் ; நம்பிக்கை இழக்கக் கூடாது ;

  Positive affirmations like – “I have overcome the fear of ….” help a great deal.
  Sadly many of the specialists are misguiding the patients.
  If someone is reading this, they too can share the experience. The reason that I am highlighting here is that in the novel, Sujata mentioned it as the voice of the spirit. In reality it is different.

  If some people are constantly hurting you, forgiving them is difficult but you have to do and then move on and then sever all connections with them…

  There are prayers for overcoming such OCD fears…If you know someone who is suffering, please please talk to them and help them…

  Like

  • சந்திரப்ரபா, ‘ஆ’ நாவலை விரும்பிப் படித்திருக்கிறீர்கள்!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: