Skip to content

பம்மல் சம்பந்த முதலியாரின் “நாடகத்தமிழ்”

by மேல் ஒக்ரோபர் 29, 2012

நாடகத்தமிழ் (1933) சிறந்த ஆவணம். தமிழ் நாடக வரலாறு என்றே சொல்லலாம். தொல்காப்பியத்தில் ஆரம்பித்து நாடகம் பற்றி தமிழ் இலக்கியங்களில் உள்ள எல்லா குறிப்புகளையும் ஏறக்குறைய எழுதி இருக்கிறார். தமிழ் நாடகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும். மின்னூலை இணைத்திருக்கிறேன்.

முதலியார் நல்ல நாடகம் என்று நினைத்து எழுதியதெல்லாம் இன்று காலாவதி ஆகிவிட்டனதான். இருந்தாலும் அவர் காலத்துக்கு அவர் ஒரு முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை.

அவர் குறிப்பிடும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் வெளியான நாடகங்கள் பலவற்றின் பேரைக் கூட நான் கேட்டதில்லை. அன்றைய நாடக ஆசிரியர்கள் என்று எனக்குத் தெரிந்ததே சங்கரதாஸ் சுவாமிகள், முதலியார், மற்றும் சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் மூவர்தான். முதலியார் குறிப்பிடும் பழைய நாடகங்களின் பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

 1. காசி விஸ்வநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி விலாசம் (இதுதான் ரத்தக் கண்ணீர் நாடகம்/சினிமாவின் மூலம்), பிரம்ம சமாஜ நாடகம், தாசில்தார் நாடகம்
 2. ராமஸ்வாமி ராஜு எழுதிய பிரதாபசந்திர விலாசம் (1877)
 3. அப்பாவு பிள்ளை எழுதிய சத்தியபாஷா ஹரிச்சந்திர விலாசம், சோழவிலாசம் (1886), இந்திரசபா (1889), பத்மினி விலாசம் (1894)
 4. ஆதிலட்சுமி அம்மாள் எழுதிய ரத்னாவளி நாடக அலங்காரம் (1892) – இதுதான் ஒரு பெண் எழுதிய முதல் நாடகமாம்.
 5. T.T. ரங்கசார்யார் எழுதிய நந்திதுர்கம் (1892)
 6. பரிதிமால் கலைஞர் எழுதிய ரூபாவதி (1896), கலாவதி (1898), மானவிஜயம்

இணையத்திலோ, இல்லை காகிதத்திலோ புத்தகங்களைப் பார்த்தால் சொல்லுங்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
பம்மல் சம்பந்த முதலியார்
நாடகத்தமிழ் – மின்னூல்

Advertisements

From → Tamil drama

4 பின்னூட்டங்கள்
 1. kesavamani permalink

  ஜெயமோகனின் வடக்கு முகம் நாடகம் பற்றி புத்தக அலமாரியில் எழுதியிருக்கிறேன். அதை சிலிகான் செல்ப் வாசகர்களுக்காக இங்கேயும் போட்டுள்ளேன்.
  ஏதோ ஒன்று இருக்கும் வரை, அதன் மீதான பற்று (விருப்பு அல்லது வெறுப்பு), அதைப்பற்றிய நம் பார்வையை முழுமையாகச் செலுத்தவிடாமல் தடை செய்கிறது. அதன் இருப்பு நம் மீது கனமான போர்வையாகக் கவிந்திருக்கிறது. அது நம்மைவிட்டு விலகியபின்னரே அல்லது அதை நாம் இழந்தபின்னரே, நாம் பாரம் நீங்கியவர்களாக, அதன் மீதான நம்மின் உண்மையான தன்மையை உணர முடியம். இது நாம் உறவுகொள்ளும், உயிருள்ள மனிதர்களுக்கு மட்டுமல்ல உயிரற்ற ஜடப்பொருட்களுக்கும் பொருந்தும. பயன்பாடும், தொடர்பும் முறையே ஜடப்பொருளுக்கும் உயர்திணைக்கும் உரிய இருப்புத் தன்மையாகக் கொள்ளலாம். பயன்பாடும் தொடர்பும் இல்லாத போதே நாம் நம் மனத்தின் முழுமையான செயல்பாட்டை அறிய முடியும். அல்லாதபோது நாம் சார்புடையவராகவே இருப்போம்.

  ஜெயமோகனின் வடக்கு முகம் நாடகத்தின் வாசிப்பில் பெற்ற அனுபவத்தின் சாரமே மேலே காண்பது. ஜெயமோகன் நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியிருப்பது நமக்குப் பரவலாகத்தெரியும். ஆனால் நாடகங்கள் எழுதியிருப்பது அவ்வளவாகத் தெரியாது. அவரின் நாவல்களில் நாடக அம்சம் இருப்பதை அவரே சொல்லியிருக்கிறார். விமர்சகர்களும், வாசகர்களும் சொல்கிறார்கள்.
  பிதாமகர் பீஷ்மர் போர்க்களத்தில் மரணத்தருவாயில் இருக்கிறார். அப்போது அவர் மனப்பிரமையாகவும், நேரிலும் பார்க்கும் காட்சிகளின் சித்தரிப்பே இந்நாடகம். நாடகத்தின் பின்னனியை மனித உருவங்களையே கொண்டு அமைக்கும் விதமாக புது உத்தியை ஜெயமோகன் கையாண்டிருக்கிறார். அம்பை, கர்ணன் ஆகியோரை பீஷ்மர் சந்திக்கும காட்சிகளில், தான் அன்பையும் வெறுப்பின் மூலமாகவே வெளிப்படுத்துவதாக பீஷ்மர் சொல்கிறார். ஒன்றின் இருப்பு அவரை தன் சுயம்போல் செயல்விடாமல் தடுக்கிறது. அதன் பின் வரும் நாடகக் காட்சிகள் புரிந்துகொள்ள முடியாமல், வாசிப்பில் அலுப்புத் தட்டுகிறது. நாடகத்தின் நீளத்தை சற்றே குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

  நாடகம் என்பது முழுக்கமுழுக்க மேடையேற்றத்துக்கான சாதனம். படிப்பதா்க்கானதல்ல. எனவே நாடகத்துக்கான பின்னனி, அரங்க அமைப்பு ஆகியன பற்றி நாடகாசிரியரின் குறிப்புகள் வாசகர்களால் மேலோட்டமானதாகவே படிக்கப்படுகிறது. வாசகன் கதையை வாசிக்கும் பழக்கத்திலேயே நாடகத்தையும் படிக்கிறான். எனவே நாடகம் உணர்வுப்பூர்வமாக உணரப்படுவதில்லை. நாடகத்தின் நுட்பங்களை வாசகன் தவறவிடுகிறான். நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பும் வசதியும் கிடைக்காத காரணத்தால், நாடகத்தைப் படிக்கும் துரதிருஷ்ட நிலைக்கு வாசகன் தள்ளப்படுகிறான்.

  Like

  • // நாடகம் என்பது முழுக்கமுழுக்க மேடையேற்றத்துக்கான சாதனம். படிப்பதா்க்கானதல்ல. எனவே நாடகத்துக்கான பின்னனி, அரங்க அமைப்பு ஆகியன பற்றி நாடகாசிரியரின் குறிப்புகள் வாசகர்களால் மேலோட்டமானதாகவே படிக்கப்படுகிறது. வாசகன் கதையை வாசிக்கும் பழக்கத்திலேயே நாடகத்தையும் படிக்கிறான். எனவே நாடகம் உணர்வுப்பூர்வமாக உணரப்படுவதில்லை. நாடகத்தின் நுட்பங்களை வாசகன் தவறவிடுகிறான். நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பும் வசதியும் கிடைக்காத காரணத்தால், நாடகத்தைப் படிக்கும் துரதிருஷ்ட நிலைக்கு வாசகன் தள்ளப்படுகிறான். //

   கேசவமணி, நூறு சதவிகிதம் ஆமோதிக்கிறேன்.

   Like

 2. Deepak permalink

  Interested in more update regarding this

  Like

Trackbacks & Pingbacks

 1. ஒரு எழுத்தாளன் என்பவன்… | இசையினி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: