என்பிலதனை II

நாஞ்சிலின் “என்பிலதனை வெயில் போலக் காயுமே” புத்தகத்தைப் பற்றி ஜெயமோகன் மேலும் விவரங்கள் தந்திருக்கிறார். என் குறிப்புகளை ஜெயமோகன் கண்டுகொள்ளும்போது என்னவோ நல்ல வாத்தியார் வகுப்பில் மாணவனை அங்கீகரிக்கும்போது ஏற்படுவது போல ஒரு சின்ன திருப்தி ஏற்படுகிறது.

ஆவுடையம்மாள் பகுதியை வைத்துத்தான் இது சுயவரலாற்று நாவல் என்று யூகித்திருந்தேன். அந்தப் பகுதி நாஞ்சிலின் சொந்த அனுபவங்களோடு ஓரளவு ஒத்துப் போகிறது, ஆனால் நாவலின் பெரும்பகுதி நாஞ்சிலின் நண்பனின் வாழ்க்கை என்று ஜெயமோகன் சொல்கிறார். எப்படியோ நாஞ்சிலின் நண்பர் சுடலையாண்டியாக ரொம்ப நாள் ஜீவித்திருப்பார்! ஆவுடையம்மாளும்தான்.

நகுலனின் பரிந்துரையின் மேல் கடைசி இரு அத்தியாயங்களை நாஞ்சில் வெட்டிவிட்டார், அவை இருந்திருந்தால் என் மாதிரி ஆட்களுக்கு சுபம் போட்ட உணர்ச்சி கிடைத்திருக்கும் என்று ஜெயமோகன் மூலம் தெரியவந்ததும் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. எப்படி அந்த இரண்டு அத்தியாயங்களை படிப்பது? நாஞ்சில் இங்கே வந்திருந்தபோதே தெரிந்திருந்தால் அவரை நச்சரித்து எப்படியாவது வாங்கிப் படித்திருப்பேன். அடுத்த பதிப்பு வரும்போது நாஞ்சில் இவற்றை ஒரு அனுபந்தமாகவாவது வெளியிட்டால் நன்றாக இருக்கும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
என்பிலதனை பற்றி ஆர்வியின் குறிப்பு, ஜெயமோகனின் குறிப்பு