வாலியின் தேர்வுகள்

வாலி நல்ல சினிமா பாட்டு எழுதக் கூடியவர் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரது “இலக்கிய” முயற்சிகள் எல்லாம் வெட்டி. மிகவும் வலிந்து எதுகை மோனை கண்டுபிடிப்பார், எரிச்சலாக இருக்கும்.

விகடனில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தனக்குப் பிடித்த பத்து புத்தகங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது தேர்வுகள் என்னை வியப்படைய வைத்தன. விந்தனையும் கருணாநிதியையும் ஒரு லிஸ்டில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. அதுவும் கருணாநிதி இப்போது ஆட்சியில் கூட இல்லை. அந்த வியப்பை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

  1. காண்டேகரின் – ‘யயாதி’
  2. லா.ச.ரா.வின் – ‘ஜனனி’
  3. கண்ணதாசனின் – ‘அர்த்தமுள்ள இந்து மதம்’
  4. பழநிபாரதியின்- ‘காற்றின் கையெழுத்து’
  5. விந்தனின் – ‘பாலும் பாவையும்’
  6. கல்கியின் – ‘கள்வனின் காதலி
  7. ஜெயகாந்தனின் – ‘ஜயஜய சங்கர ஹரஹர சங்கர!’
  8. கலைஞரின் – ‘நெஞ்சுக்கு நீதி’
  9. வ.ரா-வின் – ‘கோதைத் தீவு’
  10. புஷ்பா தங்கதுரையின் – ‘திருவரங்கன் உலா’

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

5 thoughts on “வாலியின் தேர்வுகள்

  1. ஜெயகாந்தனின் நாவல் பெயர் சரியா? ஜெய ஜெய சங்கர, இதுதான் அவர் எழுதிய நாவல். ஹர ஹர சங்கர எங்கிருந்து வந்தது? வழக்கம் போல விகடனில் ஏதாவது ஒட்டு வேலை செய்துவிட்டார்களா?

    Like

  2. RV SIR, வாலியை படித்தால் எரிச்சல் மட்டுமல்ல, வாந்தியும் வரும். வாலி அது ஓட்டை வாளி. அதில் ஒருபோதும் இலக்கியம் என்ற தண்ணீர் எடுக்கவே முடியாது. இவரது ராமாயணம் படித்த பின்னரே ராமனே காணமல் போனான். கவிதை இவர் வீட்டின் பின்கட்டில் விளையும் கீரை போலும். அப்படியே நாலு கிள்ளி போட்டால் கவிதை வந்துவிடும் என்று நினைக்கிறார். வாலியை போலவே அவரது தேர்வும் உள்ளது.

    Like

  3. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் தவிர இந்தப் பட்டியலில் உள்ள எந்த நூலும் வாசித்ததில்லை. வாலியின் நிறைய திரைப்பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    Like

  4. ரெங்க சுப்பிரமணி, ஜெயஜெய சங்கரவுக்கு பிறகு ரொம்ப நாள் கழித்து ஹரஹர சங்கர என்று “தொடர்ச்சி” எழுதினார். நானும் படித்ததில்லை.

    கேசவமணி, வாலி ஓட்டை வாளி என்று வாலி ஸ்டைலிலேயே கலக்குகிறீர்களே!

    சித்திரவீதிக்காரன் வாலி சில அருமையான திரைப்படப் பாடல்களை எழுதி இருக்கிறார் என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்க முடியாது.

    Like

  5. புகழாதீர்கள். புகழ்ச்சியில் மயங்கி, அதுபோல் எழுத ஆரம்பித்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.