சரள பாரதம்

ஒரிய மொழியில் மகாபாரதம் பதினைந்தாம் நூற்றாண்டில் சரளதாசர் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. ஒரியர்கள் இதை ஒரு transcreation என்று கருதுகிறார்கள். பல சுவாரசியமான மாற்றங்களோடு எழுதி இருக்கிறார். அவற்றில் சில:

யுயுத்சு மட்டுமல்ல, துர்தாசன் என்ற திருதராஷ்டிரனின் மகனும் யுதிஷ்டிரன் பக்கத்தில் நின்று போரிடுகிறான். காந்தாரி போருக்கு பிறகு தான் பாண்டவர்களை பார்க்க வேண்டும் என்று சொல்ல கிருஷ்ணன் துர்தாசனை முதலில் அனுப்புகிறான், துர்தாசன் சாம்பலாகிவிடுகிறான்.

சகாதேவன் மட்டுமே பாண்டுவின் உண்மையான வாரிசு. சகாதேவன் இறந்து பிறக்கிறான், அஸ்வினி தேவர்கள் அவனை உயிர்ப்பிகிறார்கள். 🙂 (பிறகு அவனும் நகுலனும் எப்படி இரட்டையர்கள் ஆவார்கள்?) துரியோதனன் எப்போதும் சகாதேவனுக்கு உரிய பங்கை கொடுக்க தயாராக இருக்கிறான். ஐந்து கிராமங்களை அவன் கொடுக்க மறுத்தது இதனால்தான்.

பிறந்ததும் துரியோதனனை வியாசர் மடியில் போட்டுக் கொள்கிறார். அவரை துரியோதனன் உதைத்த உதையில் இந்த கால் உடைந்து நீ இறப்பாய் என்று சாபமிடுகிறார். அதே போல குழந்தை பீமன் ஒரு மலையை உதைக்கிறான், அது உடைந்து போய்விடுகிறது. அதனால் அவனுக்கு நீ முதலில் தோற்பாய் என்று அந்த மலை சாபம் இடுகிறது. குந்தி குழந்தையின் தவறுகளைப் பெரிதுபடுத்தக் கூடாது என்று மலையைக் கண்டிக்க அந்த மலை தோற்றதும் தன்னை நினைக்கட்டும், புத்துணர்ச்சி பெற்று வெல்வாய் என்று சாபத்தை மாற்றுகிறது.

சகுனி தன் 99 சகோதரர்களைக் கொன்ற துரியோதனனைப் பழி வாங்கவே அவனை தவறாக வழிநடத்தினான் என்று ஒரு கதை உண்டு. துரியோதனன் ஏன் தன் சொந்த மாமாக்கள், மற்றும் தாத்தாவைக் கொன்றான்? காந்தாரியின் ஜாதகத்தில் ஒரு தோஷம் – அவள் கணவன் இறந்துவிடுவான் என்று. அதனால் காந்தாரியின் அப்பா முதலில் காந்தாரியை ஒரு மரத்துக்கு திருமணம் செய்து தருகிறார், மரம் உடனே பட்டுப் போய்விடுகிறது. பிறகு அவள் திருதராஷ்டிரனை மணக்கிறாள். ஒரு விதவையை திருதராஷ்டிரனுக்கு மணமுடித்து குரு வம்சத்தை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று துரியோதனன் சகுனியைத் தவிர்த்த மற்ற எல்லாரையும் கொல்கிறான். சகாதேவனுக்கு மட்டும் இது தெரியும், அதனால் கடைசி நாள் போரில் உன் வேலை முடிந்துவிட்டது, நீ காந்தாரம் போய் ஆட்சி செய்யலாம் என்கிறான். சகுனி மறுத்து போரிட்டு இறக்கிறான்.

கிருஷ்ணனின் ஒரு அம்சம் அர்ஜுனனிலும் இருக்கிறது. ஜராவின் அம்பால் அடிக்கப்பட்ட பிறகும் அர்ஜுனனைத் தொட்டு அவனிடமிருக்கும் தன் அம்சத்தை நீக்கினால்தான் கிருஷ்ணனால் இறக்க முடியும். சாகும் தருவாயில் இருக்கும் கிருஷ்ணன் அர்ஜுனனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறான். சகாதேவன் என்ன நேர்ந்தாலும் கிருஷ்ணனைத் தொடாதே என்று அர்ஜுனனை எச்சரிக்கிறான். கிருஷ்ணன் பல மாதிரி கேட்டும் அர்ஜுனன் அவனைத் தொட மறுக்கிறான். கடைசியில் நீ காண்டீபத்தை ஒரு பக்கம் பிடித்துக் கொள், நான் இன்னொரு பக்கம் பிடித்துக் கொள்கிறேன் என்று கிருஷ்ணன் சொல்ல அர்ஜுனன் ஏமாந்து போய் ஒத்துக் கொண்டுவிடுகிறான். கிருஷ்ணன் தன் அம்சத்தை அர்ஜுனனிடமிருந்து நீக்கிவிட்டு இறக்கிறான். அர்ஜுனனின் பலம், திறமை போய்விடுகிறது. வியாச பாரதத்தில் வருவது போல அவன் ஹஸ்தினாபுரம் திரும்பும்போது கள்வர்கள் அவனைத் தோற்கடிக்கிறார்கள்.

சரளபாரதக் கதைகளுக்கு ஒரு தளம் இருக்கிறது, பட்நாயக் என்பவர் எழுதுகிறார். அவருக்கும் மகாபாரதப் பித்து இருப்பது தெளிவு!


தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

4 thoughts on “சரள பாரதம்

  1. பாரதத்தில் நகுலனும், சகாதேவனும் பாண்டவர்களாக இருந்தாலும் பீமார்ச்சுனர்களைப் போல் முக்கியத்துவம் இல்லாதவர்களாகத்தான் உள்ளனர். இதில் சகாதேவனாவது பரவாயில்லை, பல இடங்களில் வருகின்றான். சகுனியின் மகனைக் கொல்கின்றான் (சகாதேவன் தானா? நினைவுப் பிழையாக இருந்தால் மன்னிக்க), துரியோதனனுக்கு நாள் குறித்து தருகின்றான், பல இடங்களில் உபதேசம் செய்கின்றான். பாவம் நகுலன், தேடித்தான் பார்க்க வேண்டும்.

    ஆங்கிலத்தில் உள்ளதே, பொறுமையாக படிக்க வேண்டும். யாராவது மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும்.

    Like

  2. ரெங்க சுப்பிரமணி, சித்திரவீதிக்காரன், முன்னூறு ராமாயணம் என்றால் மூவாயிரம் பாரதக் கதைகள்!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.