கார்னகி கதைகள் – பேய் பிசாசு ஆராய்ச்சி

வில்லியம் ஹோப் ஹாட்க்சனுக்கு (William Hope Hodgson) ஒரு cult following இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நடைபெறுவதாக அவர் எழுதிய பேய்க் கதைகள் ஒரு சின்ன வட்டத்தில் இன்னும் பாப்புலராக இருக்கின்றன.

கார்னகி (Carnacki) கதைகளைப் படிக்கும்போது வடுவூரார் கதைகளைப் படிப்பதைப் போன்ற ஒரு உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. கார்னகி அமானுஷ்ய நிகழ்ச்சிகளை ஆராயும் ஷெர்லாக் ஹோம்ஸ். ஹோம்ஸ் போலவே அவரும் ஒரு “consulting detective”. கொஞ்சம் வினோதமான நடை.

பேயோட்ட அறிவியலும் பயன்படுகிறது, அத்தைப்பாட்டி நம்பிக்கைகளும் பயன்படுகிறது. மின்சார கேபிள் ஐங்கோணத்துக்குள் (electric pentacle) உட்கார்ந்து கொண்டால் அமானுஷ்ய சக்திகளால் கார்னகியை அணுக முடிவதில்லை. சில நேரத்தில் பூண்டையும் உடலில் மாட்டிக் கொள்வார். Hog என்ற கதையில் வானவில்லின் எல்லா நிறங்களும் உள்ள வட்டங்கள் பன்றி உருவில் உள்ள ஒரு மாபெரும் தீய சக்தியைத் தடுத்து நிறுத்துகின்றன. எல்லாக் கதைகளிலும் ஃபோட்டோ எடுக்க முயற்சி செய்வார். சில சமயம் ஓசைகளை ஒலிப்பதிவு செய்யவும் முயற்சிப்பார். பழைய புத்தகப் பிரதிகளில் சொல்லப்படும் விஷயங்களைப் பயன்படுத்துவார். அவற்றில் ஒன்று சாமா சடங்கு! (சாம வேதம்?)

பேய் பிசாசு நிகழ்ச்சிகளில் அநேகமானவை பொய்; மிச்சம் இருப்பவற்றில் பல ஏமாற்று வேலை; ஆனால் வெகு சில உண்மை நிகழ்ச்சிகளும் இருக்கின்றன என்பதுதான் கார்னகி கதைகளின் தீம். ஒன்பது கார்னகி கதைகளில் ஒன்று (Find) அமானுஷ்ய நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாதது. இரண்டில் (Thing Invisible, House Among the Laurels) ஏமாற்ற முயற்சி. என்னைப் பொறுத்த வரையில் இந்தக் கதைகளின் charm இப்படி அறிவியலைக் கலந்து கட்டி அடிப்பதுதான்.

எல்லாக் கதைகளும் ஒரு format-இல் இருக்கும். கார்னகி தன் நண்பர்களை இரவு உணவுக்கு அழைப்பார். உணவு முடிந்த பிறகு தான் சமீபத்தில் ஆராய்ந்த ஒரு நிகழ்ச்சியை விவரிப்பார். நான் சிறந்த கதையாகக் கருதுவது Horse of the Invisible. அதன் denouement எனக்குப் பிடித்திருந்தது. Whistling Room மற்றும் Hog கதைகளில் ஓரளவு டென்ஷன் இருக்கும். Hog பின்னால் வந்த H.P. Lovecraft போன்றவர்களுக்கு inspiration ஆக இருந்திருக்க வேண்டும்.

கார்னகி கதைகள் எல்லாமே இணையத்தில் கிடைக்கின்றன. கதைச்சுருக்கங்கள் விக்கியில் கிடைக்கின்றன. இவற்றின் cult following ஆச்சரியப்படுத்துவது. சில வருஷங்களுக்கு முன் கூட புதிய கார்னகி கதைகளை வேறு இரண்டு பேர் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! (No. 472 Cheyne Walk: Carnacki, the Untold Stories by A. F. Kidd and Rick Kennett)

இவை நல்ல இலக்கியம் இல்லை. மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கும் கதைகள் கூட இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவை எல்லாருக்குமான கதைகள் இல்லை. ஆனால் இவற்றுக்கு ஒரு curiosity value இருக்கிறது. என் கண்ணில் கொஞ்சம் charm இருக்கிறது. கொஞ்சம் கிறுக்குத்தனம் உள்ளவர்களுக்குப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. நான் கொஞ்சம் கிறுக்கு.

One thought on “கார்னகி கதைகள் – பேய் பிசாசு ஆராய்ச்சி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.