Skip to content

சி. மோகன் சிபாரிசுகள்

by மேல் நவம்பர் 18, 2012

(மீள்பதிவு)

எனக்கு சி. மோகன் பற்றி அதிகம் தெரியவில்லை. லிஸ்ட் பார்த்தேன், அவ்வளவுதான். தேர்வுகள் எல்லாம் என் டாப் டென்னில் வரும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் நல்ல புத்தகங்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

  1. இடைவெளி – எஸ். சம்பத் பதிவு இங்கே.
  2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. புத்தகம் பிடிக்கும் என்று தோன்றியது. ஆனால் மேலே தொடர முடியாமல் ஒரு சோம்பேறித்தனம்.
  3. விஷ்ணுபுரம்ஜெயமோகன் அபாரமான புத்தகம். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.
  4. நினைவுப் பாதை – நகுலன் படித்ததில்லை.
  5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன் ஒரு ரவுடி மிக லாஜிகலாக சிந்தித்து தன் வைப்பாட்டிக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்கிறான். ஜி. நாகராஜன் இன்னும் தமிழ் உலகை அதிர்ச்சி அடையச் செய்யக் கூடியவர்.
  6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி அற்புதமான புஸ்தகம் என்று என் இருபதுகளில் நினைத்தேன். ஆனால் இருபது சொச்சம் வயதில் நான் அற்புதம் என்று நினைத்த சில புத்தகங்கள் இப்போது அப்படி தெரிவதில்லை. திருப்பிப் படிக்க வேண்டும்.
  7. மோகமுள்தி. ஜானகிராமன் இது கிளாசிக். எனக்கு இன்னும் அலுப்பு தட்டவில்லை.
  8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை
  9. தண்ணீர்அசோகமித்திரன் இந்த முறை அவரது எழுத்து எனக்கு புரிந்துவிட்டது – என்று நினைக்கிறேன். ஜமுனா, அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, தண்ணீர் பஞ்சம் எல்லாம் நன்றாக வந்திருக்கும்.
  10. சாயாவனம்சா. கந்தசாமி சரியான தேர்வு.

    1. தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தக சிபாரிசுகள்

      தொடர்புடைய சுட்டிகள்:

      பின்குறிப்பு:

      சி. மோகனைப் பற்றிய சிறு அறிமுகம்:
      தமிழ்க் கலை உலகத்தின் ஏதாவது ஒரு திக்கு நோக்கி நடப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் சி.மோகனை சந்தித்திருக்கலாம். அவரது கைபடாத இலக்கியமோ, புத்தகமோ கடந்த 40 ஆண்டுகளில் இருந்திருக்க முடியாது. ஒரு படைப்பைச் செதுக்குவதில் சி.மோகனின் லாகவம் அனைவராலும் உணரப்பட்டது. அதனால்தான் நவீன எழுத்தில் மிகப்பெரிய சலனம் ஏற்படுத்திய தனது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை சுந்தர ராமசாமி இவரை அழைத்து எடிட் செய்தார். அதேபோல, புத்தகங்கள் தயாரிப்பிலும் நவீன உத்திகளைப் பயன்படுத்தியவர் மோகன். அதற்கு எத்தனையோ புத்தகங்கள் சாட்சிகள். அவர் எழுதிய கட்டுரைகள் இப்போது மொத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. படைப்பை சுவாரஸ்யமாக மட்டுமே பார்க்காமல் மனித அறமாகப் பார்ப்பவராக மோகன் அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் தெரிகிறார்.

      ‘நவீனத் தமிழ் இலக்கிய வியாபாரம் பெருத்து விட்டிருக்கிறது. அறங்களுக்குப் பதிலாக அதிகார மிடுக்குகள், தார்மீகங்களுக்குப் பதிலாக சாதுர்யங்கள், அர்ப்பணிப்புகளுக்குப் பதிலாக வியாபார உத்திகள் என இன்று நவீன இலக்கிய வியாபாரம் செழித்துக் கொண்டிருக்கிறது’ என்ற வருத்தங்களின் ஊடாக… கடந்தகாலத் தமிழ் இலக்கியங்களின், இலக்கியவாதிகளின் உன்னதங்களை மோகன் விளக்குகிறார். தன்னுடைய படைப்புகள் அல்லது தன்னுடைய கோஷ்டியினர் படைப்புகளை மட்டுமே வியந்தோதும் இன்றைய சூழலில் ‘புயலிலே ஒரு தோணி’ ப.சிங்காரத்துக்காகவும், ‘நாளை மற்றுமொரு நாளே’ நாகராஜனுக்காகவும், ‘இடைவெளி’ சம்பத்துக்காகவும் ஒலிக்கும் குரலாக மோகனுடையது இருக்கிறது. கடற்கரையில் நிற்கும் ராய் சௌத்ரியின் உழைப்பாளர் சிலையின் வடிவமைப்பு கொச்சைப்படுத்தப்பட்டபோது, அதற்காக கம்பீரமாக எழுந்த ஒரே குரல் இவருடையது. பாரதி, புதுமைப்பித்தன் முதல் தருமு சிவராம், கோபிகிருஷ்ணன் வரை, வறுமையும் புலமையும் இணைந்து பயணித்த படைப்பாளிகளின் சொற்செழிப்பை மோகனது வார்த்தைகளில் படிக்கும்போது தமிழ் இவ்வளவு பொக்கிஷங்களைக் கொண்டதா என்று பெருமிதம் ஏற்படுகிறது.

      தி.ஜானகிராமனின் எழுத்துக்குள் ஊடாடிய தவிப்பு, தருமு சிவராமின் கவிதைக்குள் எழுந்த சிலிர்ப்பு, க.நா.சு-வின் இலக்கியப் பங்களிப்பு, சி.சு.செல்லப்பாவின் அர்ப்பணிப்பு, எம்.ஆர்.ராதாவுக்குள் எழுந்த கலகக் குரல், சரோஜாதேவின் நடையைச் சுற்றிச்சுழன்ற கேமரா, சந்திரபாபுவின் பாடலுக்குப் பின்னால் இருந்த வறுமை, எம்.பி.சீனிவாசனின் இசை, கே.சி.எஸ். பணிக்கர் மற்றும் எஸ்.தனபாலின் கையில் இருந்து பிறந்த இசைச்சித்திரங்கள், எழுத்துப் பிரதிகள் எங்கு கிடைத்தாலும் தேடித்தேடிச் சேகரித்த ரோஜா முத்தையாவின் ஆர்வம்… என்று தமிழகக் கலைப்பரப்பில் கால் பதித்த அனைத்து ஆளுமைகளையும் உள்வாங்கிக் கொள்ளும் இந்தப் புத்தகத்தை சி.மோகன் கட்டுரைகள் என்பதைவிட தமிழ் கலைகளின் ஆவணமாகச் சொல்லலாம்!

      அறம், யதார்த்தம், தர்க்கம் ஆகிய மூன்றையும் மட்டும் வைத்து படைப்பையும் படைப்பாளியையும் ஒரே பார்வை கொண்டு பார்க்கிறார். மொத்தத் தமிழ்க் கலையையும் புரிந்துகொள்ள இந்த ஒரு புத்தகம் போதும்!

      Advertisements

From → Book Recos

2 பின்னூட்டங்கள்
  1. மேலே குறிப்பிட்டுள்ள 10 புத்தகங்களில் விஷ்ணுபுரம் தவிர்த்து மற்றவற்றை வாசித்திருக்கிறேன். நிச்சயம் சிறப்பான தேர்வுகள் தான். விஷ்ணுபுரத்தை என்னால் வாசிக்க முடியும் என்று தோன்ற வில்லை. ஜெயமோகன் சில நல்ல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவரின் நாவல்கள் எதுவும் வாசிப்புத் தரத்தில் இல்லை என்பது தான் என்னுடைய வாசக அனுபவம். அவரின் ஏழாம் உலகம் மட்டுமே எளிதாக வாசித்துக் கடந்து விட முடிந்தது. பிச்சைக்காரர்களின் இன்னொரு உலகத்தைப் பதிவு செய்த வகையில் மட்டுமே அது குறிப்பிட வேண்டிய நூல்; மற்றபடி நாவலாக அது கூட பொருட்படுத்தத் தகுந்ததல்ல என்பதே என்னுடைய முடிவு. அவரின் முதல் நாவலான ரப்பர், சமீபத்திய நாவலான காடு எதுவுமே எனக்கு எந்த வாசக அனுபவத்தையும் தரவில்லை; வாசிக்க ஆயாசம் மிகுந்ததாகவே இருந்தது. ஒருவேளை அவை என் வாசிப்பின் குறைபாடாகக் கூட இருக்கலாம்.

    Like

    • சுப்புராஜ், கொஞ்சம் தம் கட்டி ஒரு நூறு பக்கம் படித்துவிட்டீர்கள் என்றால் அப்புறம் விஷ்ணுபுரத்தை கீழே வைக்க முடியாது. அந்த prologue தாண்டி ஸ்ரீபாதத்துக்குள் நுழைந்துவிடுங்கள்…

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: