Skip to content

ஜெயமோகனின் நேர்மை

by மேல் நவம்பர் 28, 2012

பழைய விஷயம்தான். (2003-இல் நடந்திருக்கிறது). இருந்தாலும் மீண்டும் ஒரு முறை.

கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் பலரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. மேடை நாகரீகம் என்று நினைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக புகழ்வது, ஏறக்குறைய பொய்யே சொல்வது என்று நமக்கு ஒரு துரதிருஷ்டமான மரபு இருக்கிறது. பாணன் உள்ளூர் பண்ணையாரை பாட ஆரம்பித்த காலத்திலிருந்தே இப்படித்தான்.

இந்த துதிபாடிகள் லிஸ்டில் வண்ணதாசனையும் பார்ப்பது துரதிருஷ்டம். அவர், ஞானக்கூத்தன் என்று பலரும் கருணாநிதியை ஆஹா ஓஹோ என்று ஒரு கூட்டத்தில் புகழ்ந்திருக்கிறார்கள். ஜெயமோகன் அடுத்த நாள்

இந்த மேடையில் நின்று அந்த 3 சதவீத முணுமுணுப்பின் பிரதிநிதியாகச் சொல்கிறேன், திரு மு. கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்துக்கள், தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல

என்று சொல்லி இருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஜெயகாந்தன் அண்ணாதுரை மறைவுக் கூட்டத்தில் பேசியதை நினைவுபடுத்துகிறது.

பத்ரி சேஷாத்ரி இந்த நிகழச்சியைப் பற்றி விரிவாக இங்கே எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

Advertisements

From → Jeyamohan

3 பின்னூட்டங்கள்
  1. kesavamani permalink

    அரசியல் என்று ஒரு இலக்கியம் இருந்தால், அதில் மட்டுமே அவரது எழுத்துக்களை சோ்க்கலாம். ஜெயமோகன் சரியாகவே சொல்லியிருக்கிறார்.

    Like

  2. வெறும் அரசியலில் கூட அதைச் சேர்க்க முடியாது. அவரது நாவல்களைப் படித்திருந்தாலும் ஒன்றைக் கூட நினைவில் வைக்க முடியவில்லை. எப்போதோ படித்த ராஜேந்திர குமார் கதை கூட நினைவில் இருக்கின்றது. இவரின் கதைகள் ஓடோடி போய்விட்டன

    Like

  3. kesavamani permalink

    ரெங்கசுப்ரமணி, அரசியல் என்று நாசூக்காய் சொல்லியிருக்கிறேன். அரசியலுக்கு இன்னொரு பெயர் உண்டு!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: