தேவதேவனுக்கு 2012 விஷ்ணுபுரம் விருது

Vishnupuram-Ilakiya-Vattam-A5-size_Invitation_FB-1024x782Devadevanவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒவ்வொரு வருஷமும் தமிழ் இலக்கிய படைப்பாளி ஒருவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்குகிறது. இந்த வருஷம் கவிஞர் தேவதேவனுக்கு. விருது 50,000 பணமதிப்பும் கேடயமும் கொண்டது. விருது வழங்கும் விழா கோவையில் வரும் 2012 டிசம்பர் 22 சனி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர்களாக நாஞ்சில்நாடன் ,யுவன் சந்திரசேகர்,சுகா, வே.அலெக்ஸ், ஞானி போன்றவர்கள் கலந்துகொள்வார்கள். பரிசளிப்பவர் இளையராஜா. விழாவின்போது விருதுக்குரியவரைப்பற்றி ஜெயமோகன் எழுதிய விமர்சன நூல் கல்பற்றா நாராயணனால் வெளியிடப்படும்.

எனக்கும் கவிதைக்கும் கொஞ்ச ரொம்ப தூரம். ஆனானப்பட்ட ஜெயமோகனே கைவிட்ட கேஸ். ஆனால் எனக்கு கவிதையைப் புரிய வைக்க அவர் ஆரம்பித்த புள்ளி தேவதேவனின் புகழ் பெற்ற “காற்றில் அலையும் சிறகு“தான் என்பதை நினைவு கூர்கிறேன். தேவதேவனின் கவிதைகள் புதுக்கவிதை மேல் எனக்கு வெறுப்பை உண்டாக்கிய பல “நவீனக்” கவிஞர்களை விட மேல் என்ற வரைக்கும் எனக்கும் அவரைப் புரிகிறது.

முந்தைய வருஷங்களில் ஆ. மாதவன், பூமணி. இப்போது தேவதேவன். இப்படியே தொடர விஷ்ணுபுரம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

தொடர்புக்கு arangasamy at gmail dot com


தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், கவிதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
தேவதேவன் ஒரு பேட்டி
தேவதேவனின் தளம்
2012ஆம் வருஷத்துக்கான அறிவிப்பு
2011ஆம் ஆண்டு விருது பூமணிக்கு
2010ஆம் ஆண்டு விருது ஆ. மாதவனுக்கு