Skip to content

தேவதேவனுக்கு 2012 விஷ்ணுபுரம் விருது

by மேல் திசெம்பர் 4, 2012

Vishnupuram-Ilakiya-Vattam-A5-size_Invitation_FB-1024x782Devadevanவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒவ்வொரு வருஷமும் தமிழ் இலக்கிய படைப்பாளி ஒருவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்குகிறது. இந்த வருஷம் கவிஞர் தேவதேவனுக்கு. விருது 50,000 பணமதிப்பும் கேடயமும் கொண்டது. விருது வழங்கும் விழா கோவையில் வரும் 2012 டிசம்பர் 22 சனி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர்களாக நாஞ்சில்நாடன் ,யுவன் சந்திரசேகர்,சுகா, வே.அலெக்ஸ், ஞானி போன்றவர்கள் கலந்துகொள்வார்கள். பரிசளிப்பவர் இளையராஜா. விழாவின்போது விருதுக்குரியவரைப்பற்றி ஜெயமோகன் எழுதிய விமர்சன நூல் கல்பற்றா நாராயணனால் வெளியிடப்படும்.

எனக்கும் கவிதைக்கும் கொஞ்ச ரொம்ப தூரம். ஆனானப்பட்ட ஜெயமோகனே கைவிட்ட கேஸ். ஆனால் எனக்கு கவிதையைப் புரிய வைக்க அவர் ஆரம்பித்த புள்ளி தேவதேவனின் புகழ் பெற்ற “காற்றில் அலையும் சிறகு“தான் என்பதை நினைவு கூர்கிறேன். தேவதேவனின் கவிதைகள் புதுக்கவிதை மேல் எனக்கு வெறுப்பை உண்டாக்கிய பல “நவீனக்” கவிஞர்களை விட மேல் என்ற வரைக்கும் எனக்கும் அவரைப் புரிகிறது.

முந்தைய வருஷங்களில் ஆ. மாதவன், பூமணி. இப்போது தேவதேவன். இப்படியே தொடர விஷ்ணுபுரம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

தொடர்புக்கு arangasamy at gmail dot com


தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், கவிதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
தேவதேவன் ஒரு பேட்டி
தேவதேவனின் தளம்
2012ஆம் வருஷத்துக்கான அறிவிப்பு
2011ஆம் ஆண்டு விருது பூமணிக்கு
2010ஆம் ஆண்டு விருது ஆ. மாதவனுக்கு

Advertisements

From → Awards, Poetry

6 பின்னூட்டங்கள்
  1. கவிதை என்றால் எப்போதுமே இரண்டடி எட்ட நின்று பார்த்து விட்டு ஓடிவிடுவது வழக்கம். அவார்டு எல்லாம் தருகின்றார்களே என்று எட்டிப் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. இரண்டடி படித்ததும் முதலில் படித்தது மறக்கின்றது. எனக்கு எல்லாம்

    ஏ மனிதா
    விடாமல் ஓடு
    ஒரு நாள்
    கால் வலிக்கும்

    போன்ற கவிதைகள் தான் சரிவரும் போல. ஒரு பத்து வருடம் கழித்து கவிதை படிக்க முயற்சிக்கலாம்.

    Like

    • ரெங்க சுப்பிரமணி, நீங்களும் நம்ம டைப்தான் போலிருக்கிறது! கவிதை என்றால் ஓட்டம்தானோ?

      Like

  2. விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் தேவதேவனுக்கு வாழ்த்துகள்.
    எனக்கும் கவிதைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்தான் புரிகிறது.

    Like

  3. சித்திரவீதிக்காரன், நீங்களும் என்னை மாதிரி கவிதை புரியாத ஜாதிதானா? பரவாயில்லை, நான் தனி மரமில்லை!

    Like

Trackbacks & Pingbacks

  1. சிலிகான் ஷெல்ஃப்
  2. வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாடமி விருது | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: