பொருளடக்கத்திற்கு தாவுக

சோனியா ஃபாலரோ எழுதிய “எ பியூட்டிஃபுல் திங்”

by மேல் திசெம்பர் 10, 2012

சில அபுனைவுகளில் அவற்றுக்குப் பின்னால் உள்ள உழைப்பு, competent எழுத்து, thorough reporting எல்லாம் தெரிந்தாலும் அந்த அபுனைவின் subject matter-இல் எனக்கு பெரிய அளவு சுவாரசியம் இருப்பதில்லை. சோனியா ஃபாலரோ (Sonia Faleiro) எழுதிய “Beautiful Thing: Inside the Secret World of Bombay’s Dance Bars” (2010) எனக்கு அப்படித்தான்.

சோனியா ஒரு இளம் பெண்ணின் சித்தரிப்பு மூலம் இந்த நடனப் பெண்களின் உலகை நமக்கு உரித்துக் காட்டுகிறார். விலைமாதர்களுக்கு ஒரு படி மேலே என்று வைத்துக் கொள்ளலாம். மும்பை போன்ற பெருநகரத்தில் போதிய அளவுக்கு செக்ஸ் வடிகால்கள் கிடையாது. மது அரங்குகளில் நடனம் ஆடுகிறார்கள். உறவுக்கு அலையும் “கஸ்டமர்கள்” உண்டு. அவர்களிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறக்கப் பார்க்கிறார்கள். அவர்களின் கனவு யாராவது ராஜகுமாரன் வந்து உன் கடந்த காலத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை, வா உன்னை மணந்து கொள்கிறேன் என்று சொல்ல மாட்டார்களா என்பதுதான். யாருக்காவது வைப்பாகவாவது போக முடியுமா என்று பார்க்கிறார்கள். ஆனால் வைப்பாக வைத்துக் கொள்பவர்களில் பலரும் இவர்களை வைத்து சம்பாதிக்கத்தான் பார்க்கிறார்கள். நிறைய குடிக்கிறார்கள். நல்ல செக்ஸ் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். சமயத்தில் தங்கள் “காதலை” நிரூபிக்க தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு மாறுதலுக்காக காமாத்திபுரம் போய் விபச்சாரம் செய்கிறார்கள். அலிகளுடன் நல்ல தொடர்பு இருக்கிறது. பார்ட்டிகள் நடக்கின்றன. திடீரென்று ஒரு நாள் மகாராஷ்டிர அரசுக்கு ஞானோதயம் பிறந்து இந்த டான்ஸ் பார்களை மூடிவிட வாழ்க்கை சர்வ நாசமாகிவிடுகிறது. விபசாரம், இல்லை துபாய்க்குப் போய் நடனம்/செக்ஸ் வியாபாரம்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழிகள். விபசாரத்தில் பல அபாயங்கள். துபாய்க்கு போவதிலும் அப்படித்தான், ஆனால் இதை விட பெட்டராக இருக்குமோ என்று தோன்றுகிறது.

சோனியா பிரமாதமாக எழுதி இருக்கிறார். ஐயோ பாவம் என்றுதான் தோன்றுகிறது. டான்ஸ் பார்களை மூடிய மந்திரி மேல் கடுப்புதான் வருகிறது. எனக்கு கொஞ்சம் puritan streak உண்டு, அதனால் நான் டான்ஸ் பார்களுக்கு போயிருக்க மாட்டேன். ஆனால் அப்படி போய்ப் பார்ப்பவர்களின் மனநிலை, sexual frustration எனக்கும் புரிகிறது. ஆனால் இது முற்றிலும் அந்நியமான உலகம். என் puritan streak எனக்கு இந்த உலகத்தில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் செய்கிறது. ஆனாலும் சோனியா இந்த உலகத்தை உரித்துக் காட்டுகிறார் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சோனியாவின் மொழியைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அவரது ஹிங்லிஷ் மும்பை மொழியை தத்ரூபமாக பிரதிபலிக்கிறது. உதாரணமாக beauty இல்லை, booti.

அமேசானில் கிடைக்கிறது.

Beautiful Thing was an Observer, Guardian, and Economist Book of the Year, Time Out Subcontinental Book of the Year, CNN Mumbai Book of the Year, and The Sunday Times Travel Book of the Year, 2011. It has been published worldwide and translated into several languages.


தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: சோனியா ஃபாலரோவின் தளம்

5 பின்னூட்டங்கள்
 1. Balajee permalink

  ஆர். வீ.,

  உடனே வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டீர்கள்.

  இதை வாசித்ததும் எனக்கு சுகேது மேஹ்தாவின் “Maximum City” அபுனைவுதான் நினைவுக்கு வந்தது. அதிலும் இவற்றைப் பற்றி ஒரு பெரும் பகுதி எழுதி இருந்தார். வாசிக்கும் பொழுது மிகவும் சுவாரஸ்யமான எழுத்தாகப் பட்டது எனக்கு. நடனமாடும் பெண்கள் (குறிப்பாக அந்தப் பெண் Monalisa), டான்ஸ் பார்களின் atmosphere, அங்கு வேலை செய்யும் மனிதர்கள், அங்கு வரும் தொழிலதிபர்கள் என்று ஒரு கலவையான வாழ்க்கையைக் காட்டி இருந்தார் அதில்.

  நீங்கள் கூட சிலிகான் ஷெல்பில் இந்தப் புத்தகத்தைப் பற்றி சிறு குறிப்பு வரைந்ததாக ஞாபகம். விரிவாக எழுதப்பட வேண்டிய புத்தகமது.

  Like

  • Maximum City எனக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்று. Sacred Games புத்தகத்தையும் படித்துவிட்டு ஒன்றாக எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் கை வரவில்லை. நீங்கள்தான் எழுதுங்களேன், பாலாஜி?

   Like

 2. எனக்கு ஆங்கில நாவல் எல்லாம் வாசிக்கும் அளவிற்கு ஆங்கிலம் வராது. பின்னொருநாள் மொழிபெயர்ப்பு வந்தால் வாசிக்கலாம். பகிர்விற்கு நன்றி.

  Like

 3. Balajee permalink

  மன்னிக்கவும் ஆர். வி. நான் வாசித்து நீண்ட நாட்களாகிவிட்டன. முழுமையாக எழுதுவது கடினம். மேலும் “Sacred Games” புத்தக size வேறு பயமுறுத்துகிறது. அதை வாசிக்கவேண்டுமேன்றால் உங்கள் விமரிசனம் தேவை. விரைவில் உங்கள் விமரிசனத்தை எதிர்பார்க்கிறேன். 🙂

  -பாலாஜி.

  Like

 4. சித்திரவீதிக்காரன், இப்படியே ஆங்கிலம் படிக்கப் பொறுமை இல்லை என்று எத்தனை நாள்தான் டபாய்க்கப் போகிறீர்கள்?
  பாலாஜி, எனக்கு “Sacred கேம்ஸ்” சைஸ்தான் பயமுறுத்துகிறது. எப்போதாவது தம் கட்டி வாசிக்க வேண்டும்…

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: